மதுரை: மதுரை மணி நகரம் ஹரே கிருஷ்ணா கோவிலில் இஸ்கான் பொன்விழா, கிருஷ்ணஜெயந்தி விழா நாளை நடக்கிறது. 1966ல் பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதாவால் இஸ்கான் அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பால் நடத்தப்படும் ஹரேகிருஷ்ணா கோவிலில், நாளை காலை 9:30 – மதியம் 12:30 மணி, மாலை 5:30 – இரவு 9:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். விழாவில் ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, அபிஷேகம், நைவேத்யம், ஜெயந்தி சிறப்பு அலங்காரம் நடக்கும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்துள்ளது.