Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1).. ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3).. எதிர்பாராத வருமானம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2).. போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2).. போட்டியில் வெற்றி

பதிவு செய்த நாள்

13 மே
2017
04:05

திட்டமிட்டு வாழும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருக்கும் சனி, 9ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நற்பலனை வாரி வழங்குவர். மே 31ல்  சுக்கிரன் , மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மே 27 வரையும், ஜூன் 12 க்கு பிறகும் நற்பலன்  அளிப்பர். ராசிக்கு 5ம் இடமான ரிஷபத்தில் இருக்கும் செவ்வாயால் வீண் பகை, விரோதம் உருவாகியிருக்கும்.  மே 27ல்  5ம் இடத்தில் இருந்து 6ம் இடமான மிதுனத்திற்கு செல்வதால் பிரச்னை விலகும்.  உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை யோகம் உண்டாகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு  குறை இருக்காது.  மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  மே 30க்கு பிறகு உறவினர்களால்  உதவி கிடைக்கப் பெறலாம்.  மே 16,17,18, ஜூன் 13,14 ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். மே 23,24ல் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மே 21,22 ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். மே 26 க்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். ஜூன் 12 க்கு பிறகு திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். செவ்வாய், சூரியனால் அவ்வப்போது சிறு  உபாதைகள் வரலாம்.       

தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். புதிய தொழில் வெற்றியை தரும். மே 27 க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும்.  தொழில் ரீதியாக வெளியூர் பயணம்  செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைத்து விட வேண்டாம். ஜூன் 12க்கு பிறகு  லாபம் அதிகரிக்கும். மே 15,19,20  ஜூன் 10,11,12 ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 27,28,29 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.  மே 28ல் இருந்து ஜூன் 12 வரை விடாமுயற்சி  எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். ஜூன் 5,6,7 ல் முயற்சியில் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.  மே 26க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கலைஞர்கள் இந்த மாதம் நல்ல வளர்ச்சியை எதிர்நோக்கலாம்.  புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும்.   புகழ், பாராட்டு தொடர்ந்து வந்து சேரும். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகள் பெருகும்.  அரசியல்வாதிகளுக்கு கடந்த மாதம் இருந்த பின்தங்கிய நிலை  மறையும். மே 26க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மே 25,26ல் வீண் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் குரு பகவானால் கல்வி  சிறப்பாக அமையும். போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். விவசாயிகள் மாதத் தொடக்கத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. குறிப்பாக நெல், கோதுமை, சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் மே 26 க்கு பிறகு கைகூடும். பக்கத்து  நிலத்துக்காரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லை மறையும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் ஆதரவுடன்  இருப்பர். மாத மத்தியில் குடும்ப பிரச்னையில் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. மே30,31 ல் ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்புண்டு.  ஜூன் 8,9 ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். மே 26க்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். ஜூன் 12க்கு பிறகு பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.            

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய தரினம்      
* ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு      
* செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை      

நல்ல நாள்: மே 16, 17, 18, 21, 22, 27, 28, 29,30, 31 ஜூன் 5,6,7,8,9,13,14      
கவன நாள்: ஜூன் 1,2 சந்திராஷ்டமம்.  
அதிர்ஷ்ட எண்: 3,7  நிறம்:  மஞ்சள், வெள்ளை

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar