பதிவு செய்த நாள்
20
மே
2017
04:05
மே 20: நவமி, குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை
மே 21: கரிநாள், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவில் அனுமனுக்கு திருமஞ்சனம், கிழங்கு வகை பயிரிட நல்ல நாள்
மே 22: முகூர்த்த நாள், ஏகாதசி, செடி, கொடி பயிரிட நல்ல நாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
மே 23: பிரதோஷம், சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், நந்தீஸ்வரருக்கு சிவன் கோவிலில் மாலை 4:30– 6:00 மணிக்குள் அபிஷேகம் செய்து வழிபடுதல்
மே 24: மாத சிவராத்திரி, கழற்சிங்கநாயனார் குருபூஜை, சென்னை போரூர் முருகன் அபிஷேகம், திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.
மே 25: அமாவாசை, கார்த்திகை விரதம், திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் நடையழகு சேவை, திருச்செந்துார் முருகன் பவனி, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்
மே 26: திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம், சிவகாசி காசி விஸ்வநாதர் உற்ஸவம் ஆரம்பம், கீழ்த்திருப்பதி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் பவனி.