Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எதிர்பார்ப்பு நிறைவேறும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) வீடு வாங்கும் யோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
17:36

பிறர் குறையை பெரிதுபடுத்தாத கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ம் இடத்தில் இணைந்திருக்கும்  சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் வளர்ச்சிக்கு வழிவகுப்பர்.  புதன்  ஜூலை  20- வரை நன்மை அளிக்க உள்ளார். அதன் பிறகு சிம்ம ராசிக்கு மாறுவதால் நன்மை குறையும். அவர் ஆகஸ்ட் 6-ல்   வக்கிரம் அடைந்து கடக ராசிக்கு மாறியதும் நன்மையை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் 26ல்  மிதுன ராசிக்கு மாறினாலும்  நன்மை பெற இயலாது.

ராகு, ராசிக்கு 7-ல் இருந்து வெளியூரில் தங்கும் நிலை உருவாகி இருக்கலாம். அவர் ஜூலை  27ல்  6-ம் இடமான கடகத்திற்கு வந்த பின் நிலைமை சீராகும். புதிய முயற்சியில் வெற்றி  உண்டாகும். உங்கள் ராசியில் இருக்கும் கேதுவால் உடல் உபாதை, அரசு வகையில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அவர் ஜூலை 27ல்  ராசிக்கு 12-ம் இடமான மகரத்திற்கு சென்ற பின் பண விரயம் ஏற்பட வாய்ப்புண்டு.

குடும்பத்தின் தேவை யாவும்  நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலமான காலகட்டம். சமூகத்தில் மதிப்பு சீராக இருக்கும்.  எதிரி தொல்லை விலகும்.  ஜூலை 20- வரையும், ஆகஸ்ட் 5- க்கு பிறகும் புதனால் எடுத்த காரியம் வெற்றி பெறும்.   திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.  அவர்களின் செயல்பாடு பெருமையளிக்கும். ஆக.9,10-ல் பெண்கள்  உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 17, 18, ஆக.13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

ஆக. 4, 5-ல் உறவினர் வருகையும்  அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 19,20, ஆக.15,16- ல் அவர்களின் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. ஜூலை 21- முதல் ஆக. 5- வரை  கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.  விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவு படிப்படியாக குறையும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு பன்மடங்கு அதிகரிக்கும்.  சகதொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். மறைமுக எதிரிகளின் சதி அவ்வப்போது தலை தூக்கினாலும் எளிதில் முறியடிப்பீர்கள். தொழில் ரீதியாக நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டாகும்.  ஜூலை 23,24-ல் திடீர் பணவரவு கிடைக்கும். ஆகஸ்ட் 6,7,8,11,12-ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம்.

பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு பதவி உயர்வு வலிய தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு  நல்ல முறையில் கிடைக்கும்.  விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் 1,2,3-ல்  சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். ஜூலை 21- முதல் ஆகஸ்ட் 5- வரை முயற்சி எடுத்தால் கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கையெழுத்தாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.   அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். ஜூலை 21,22-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு விடாமுயற்சியால் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  மாத மத்தியில் புதன் சாதகமற்று இருப்பதால் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு, பனைத்தொழில், பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.

பெண்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவர். நகை-, ஆபரணங்கள் வாங்கலாம். ஆக. 6-க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.  கிடப்பில் கிடந்த கோரிக்கை நிறைவேறும். ஜூலை25,26,27-ல் திடீர் வருமானத்தை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் நன்மை காண்பீர்கள்.

நல்ல நாள்: ஜூலை 17,18,23,24,25,26,27, ஆகஸ்ட் 1,2,3,4,5,9,10,13,14
கவன நாள்: ஜூலை 28,29- சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட  எண்: 1,9 நிறம்: பிரவுன், சிவப்பு

பரிகாரம்
* சனியன்று அனுமனுக்கு  துளசி அர்ச்சனை.
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம்.
* தினமும் பசுவுக்கு பழம், கீரை அளித்தல்.

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2018 – 16.7.2018) »
temple
நல்லவர்களின் நட்பை நாடும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் கூடுதல் நன்மையை எதிர் பார்க்கலாம் ... மேலும்
 
temple
மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து ... மேலும்
 
temple
பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் ... மேலும்
 
temple
மனக்கட்டுப்பாடுடன் செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் சனி ... மேலும்
 
temple
சிந்தனையில் தெளிவு படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் 6-ல் உள்ள செவ்வாய், கேது, 11-ல் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.