Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - குரு பார்க்கிறார் குறை தீர்க்கிறார் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) (டும்டும் ஒலிக்கும்)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
14:58

நல்லவர்களின் நட்பை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது  உயர்வான நிலையாகும். குருவின் 5-ம் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.  டும்டும் என மேளச்சத்தம் ஒலிக்க திருமணம் நடந்தேறும்.  செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குருபகவான் 2018 பிப்.14க்கு பிறகு 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மை பெற இயலாது. 8-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் மன வேதனை,  நிலையற்ற தன்மையை உருவாக்குவார்.  

ராகு 4-ம் இடமான கடகத்தில் இருப்பதால் வீண் அலைச்சல், பிரச்னை உருவாகலாம். கேது10ம் இடமான மகரத்தில் உள்ளதால் உஷ்ணம், தோல், தொடர்பான உபாதை ஏற்படலாம்.

சனி பகவான்  ராசிக்கு 8-ல் இருப்பதால் உறவினர் வகையில்  கருத்துவேறுபாடு ஏற்படும். 2017 டிச.19ல் விருச்சிகத்தில் இருந்து  தனுசு ராசிக்கு மாறுகிறார். இதனால் முயற்சியில் தடை குறுக்கிடலாம்.

இனி காலவாரியான பலனை காணலாம். 2017 செப்டம்பர்– 2018 ஜனவரி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.  புத்தாடை அணிகலன்கள் சேரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காணலாம். எதிரி தொல்லை அவ்வப்போது தலைதூக்கலாம்.  அவர்கள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.  பணியாளர்கள்  முன்னேற்றம் கிடைக்கப் பெறுவர்.  அதிகாரிகளின்  ஆதரவு  வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
கலைஞர்கள்  புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு  கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு  எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.

மாணவர்கள்  தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர்.  போட்டியில் பங்கேற்று
வெற்றி காண்பர். விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது.  நெல், மஞ்சள், கிழங்கு வகைகள் போன்ற  பயிர்கள் மூலம்  லாபம் உயரும்.   

பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். விருந்து, விழா என சென்று வருவர்.  குருவால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கையில் பணம் புழங்கும்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் பொருளாதாரம் சீராக  இருக்கும். புதிய வீடு, மனை வாங்க
விடா முயற்சி தேவைப்படும்.  ராகுவால் அலைச்சல், பிரச்னை குறுக்கிடலாம். குருபகவான் ஏப். 9-  முதல் அக். 3- வரை  துலாம் ராசியில் இருக்கிறார்.  அப்போது அவரால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும்.  சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.

தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிட்டாலும் குருபலத்தால் அதை முறியடித்து விடுவீர்கள். தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேரிடும்.   
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உறு துணையாக செயல்படுவர்.   ஏப். 9 முதல் அக். 3- க்குள் சம்பள உயர்வு கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள் பதவியை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.

மாணவர்களுக்கு முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகள்  பயறு, காய்கறி வகையில் நல்ல மகசூல் காண்பர்.  கால்நடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.

பெண்கள்  மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.  ஏப்.9- முதல் அக்.3- வரை குருவால் சுபவிஷயம் நடந்தேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவர்.  சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

பரிகாரம்:
* சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை
* வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
* நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி  அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் அக்.4ல் 7-ம் இடத்திற்கு செல்கிறார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்துடன் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பு தரும் கடக ராசி அன்பர்களே!  

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான ... மேலும்
 
temple
முற்போக்கு சிந்தனை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!  

குருபகவான் ராசிக்கு  3-ம் இடமான துலாமில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.