சித்திரை அமாவாசை; ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்.. முன்னோருக்கு திதி கொடுத்து வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2024 10:05
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று சித்திரை அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதன்பின் பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று கோயில் நான்கு ரத வீதி, திட்டக்குடி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.