பதிவு செய்த நாள்
13
செப்
2017
01:09
குரு என்று சொல்லப்படும் வியாழ கிரகம் சூரிய குடும்பத்தைச் சார்ந்தது. சூரிய குடும்பத்திலேயே (புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்ட்யூன், ப்ளூட்டோ மற்றும் பூமி, மிகப்பெரிய கோள் எனப்படுகிறது. பூமியைப்போல் 1,300 மடங்கு பெரியது சுமார் 89,000 மைல்கள் விட்டம் கொண்டது. சுக்கிரனுக்கு அடுத்தபடியாக மிகவும் ஒளிவீசக்கூடிய கோள் வியாழன். சூரியனுக்கும் வியாழனுக்குமிடையேயுள்ள தூரம் 77,30,00,000 கிலோமீட்டர். இதன்விட்டம் 1,39,200 கிலோமீட்டர், குரு சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகின்றன. (இதனை நம் ஜோதிடமும் கூறுகிறது.) தன்னைத்தானே 9 மணி 50 நிமிடங்களில் சுற்றிக்கொள்கிறது. வியாழனைச் சுற்றி (குரு) வளையம் இருப்பதாகவும், பனிக்கட்டியினாலும், பாறைத்துகள் களினாலும் அந்த வளையம் அமைந்துள்ளதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த குரு (வியாழன்) தான் ஒவ்வொரு வருடமும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குப் பயணமாகிறார்.