Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: கையில் பணப்புழக்கம் மேஷம்: சுபநிகழ்ச்சி நடந்தேறும் மேஷம்: சுபநிகழ்ச்சி நடந்தேறும்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

16 அக்
2017
02:10

நல்லவர்களுடன் நட்பு பாராட்டும் மீனம் ராசி அன்பர்களே!

புதன் அக். 27- வரையும், சுக்கிரன் நவ.2க்கு பிறகும் நன்மை தருவர். கேது மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கிறார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். செயலில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். அக்.27- வரை முயற்சியில் வெற்றி உண்டாகும். கணவன்-, மனைவி இடையே அன்பு பெருகும். புத்தாடை, அணிகலன் வாங்க வாய்ப்புண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். நவ.2க்கு பிறகு சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். குறிப்பாக நவ.1,2ல் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக். 27,28,29ல் உறவினர் வருகையும், நன்மையும் கிடைக்கும். அதே நேரம் நவ.7,8,9ல் அவர்களின் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரால் பிரச்னை உருவாகலாம். ராகுவால் சில நேரத்தில் பிறருக்கு கட்டுப்படும் நிலை வரலாம். செவ்வாயால் உடல்நிலை சுமாராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, -செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.27-க்கு பிறகு தீயோர் சேர்க்கையால் சிலர் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.

நவ.2-க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். அக். 30,31, நவ.3,4-ல் சந்திரனால் தடைகள் வரலாம். அதே நேரம் நவ.12,13-ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிரியின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

பணியாளர்கள் மாத முற்பகுதியில் சிறப்பான முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகளை அக்.27-க்குள் கேட்டுப் பெற்று கொள்ளவும். அதன் பின் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அக். 25,26-ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். நவ.2க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் நவ.2க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். நவ.10,11-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகள் போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். விளைச்சல் சிறப்பாக இருக்கும். அதே நேரம் கடின உழைப்பும் தேவைப்படும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். இந்த மாதத்தை பொறுத்தவரை புதனால் நல்ல வளர்ச்சி காணலாம்.

ஆசிரியரிடம் நன்மதிப்பு உண்டாகும். அக்.27-க்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம். சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். நட்பு விஷயத்தில் கவனம் தேவை. புதியவர்களிடம் அனாவசியமாக நெருங்கி பழக வேண்டாம்.

பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். அக்.18,19, நவ.14,15- ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். நவ.5,6ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். அக். 27- க்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவ.2-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும்.

* நல்ல நாள்: அக்.19, 20, 22, 25, 26, 29, 30 நவ. 1, 2, 5, 6, 12, 13, 14, 15
* கவன நாள்: அக்.20,21, நவ.16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar