Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: வெற்றி வாகை சூடுவீங்க! சிம்மம்: வெற்றி வாகை சூடுவீங்க! துலாம்: அரசு வகையில் நன்மை துலாம்: அரசு வகையில் நன்மை
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2018 – 15.12.2018)
கன்னி: வளர்ச்சிக்கான மாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
14:53

கண்ணியத்துடன் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன் நவ.27ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மைகளை வாரி வழங்குவார்.  அதோடு சூரியன், குரு, சனி, ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். இதனால் வளர்ச்சிக்கான காலகட்டமாக இந்த மாதம் அமையும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். புதிய முயற்சிகளில் எந்த விதமான பின்னடைவும் உண்டாகாது. எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு  தேவையான வசதிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி இனிதே நடந்தேறும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும்.  நவ.13க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. டிச.11,12,13ல் பெண்கள் ஆதரவாக செயல்படுவர்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  டிச.7,8ல் உறவினர்கள் வருகையும் அவர்களால்
நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.21,22,23ல் உறவினர்கள் வகையில் பிரச்னையை சந்திக்கலாம்.

உடல் நலம்  சிறப்பாக இருக்கும். மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர்கள் விரைவில் வீடு திரும்புவர். தொழில், வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். சக தொழிலதிபர்களின் மத்தியில் மதிப்பு உயரும். மாத முற்பகுதியில் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.  பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபத்தை காணலாம். புதிய தொழில் முயற்சியில் வெற்றி உண்டாகும்  நவ. 26,27ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். ஆனால் நவ.17,18, டிச.9,10,14,15ல் சந்திரனால் தடைகள் வரலாம். டிச.1க்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பணியாளர்கள் சுக்கிரனால் நல்ல முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக  நிறைவேறும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும். டிச.5,6 ஆகிய நாட்கள் நன்மை பெற வாய்ப்புண்டு. டிச.31க்கு பிறகு நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும்.

கலைஞர்கள் தங்களின் வாழ்வில் உற்சாகமான பலனைக் காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மாத முற்பகுதியில் அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.  நவ.27க்குப் பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள்  சிறப்பான நிலையில் இருப்பர்.

மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குரு அருளால் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம்.  புதன் சாதகமற்ற  இடத்தில் இருப்பதால் சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் அறிவுரையை ஏற்பது நல்லது.

விவசாயிகள் இந்த மாதத்தில் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். வாழ்வில் குதூகலம்  அடைவர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். நவ. 28,29,30 ஆகியவை  சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.

நவ.19,20ல் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

* நல்ல நாள்: நவ.19,20,28,29,30, டிச. 5,6,௭,௮,11
* கவன நாள்: டிச.1,2 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, கருநீலம்

* பரிகாரம்:
* பவுர்ணமியின்று முருகன் வழிபாடு
* ராகு,கேதுவுக்கு அர்ச்சனை
* திங்களன்று சிவனுக்கு வில்வார்ச்சனை

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.