Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) பெண்களால் மேன்மை மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆற்றல் மேம்படும் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2018
12:25

பிறரை குறை கூற விரும்பாத கும்ப ராசி நேயர்களே!

சுக்கிரன் மார்ச்3-ல் இடம் மாறினாலும் தொடர்ந்து நன்மை தருவார். செவ்வாய் மார்ச் 9-க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வருகிறார்.  சனி, ராகு மாதம் முழுவதும் வளமான வாழ்வுக்கு வழிகாட்டுவர்.  இதனால் நற்பலன்கள் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  

குருபகவான் பிப்.14-ல்  அதிசாரம் பெற்று 10ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திரு க்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது.  குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.

சூரியன், புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமூகத்தில் மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலைச்சலும், சோர்வும் ஏற்படலாம்.  குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.  பொன், பொருள் சேரும். புதனால்  ஏற்பட்ட பொருள் இழப்பு பிப். 26- க்கு பிறகு மறையும். பிப். 23,24- ல் உறவினர் வகையில் சிரமம் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.  மார்ச் 10,11,12-ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பிப்.16,17ல் பெண்கள்  உதவிகரமாக இருப்பர்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். மார்ச் 9-க்கு பிறகு புதிய வீடு,-மனை வாங்க யோகம் கூடி வரும். சூரியனால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படும்.

தொழில், வியாபாரத்தில் சூரியனால் பணவிரயம் அவ்வப்போது குறுக்கிட்டாலும், அதற் கேற்ப வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.  குருபார்வையால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.  பிப்.9,10- ல் அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்கும்.  மார்ச்3- க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். விரிவாக்கம், புதுவியாபார முயற்சியில் ஈடுபட ஏதுவான காலமாக அமையும்.

தனியார் துறையில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பணிச்சுமை  அதிகமாகலாம். ஆனால்,  அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.  அதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது.  பிப்.26-க்கு பிறகு செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை ஏற்படலாம்.  மார்ச் 9- க்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நன்மை காண்பர்.  விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள் சுக்கிரன் சாதகமான நிலையில் காணப்படுவதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர்.  உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் நல்ல முறையில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலன் காண்பர். மக்கள் மத்தியில் செல்வாக் குடன் திகழ்வர்.  தொண்டர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமான இடத்தில் இல்லாததால் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.  ஆனால், குருவின் அனுகூலத்தால் பின்தங்கிய நிலை உண்டாகாது. ஆசிரியர் களின் அறிவுரையை ஏற்பது அவசியம்.   

விவசாயிகள் நெல், கோதுமை, பழ வகைகள், கிழங்கு வகைகள் போன்ற  பயிர்கள் மூலம் அதிக லாபம் காண்பர். புதிய சொத்து வாங்க மாத பிற்பகுதியில் அனுகூலம் உண்டாகும்.  மார்ச் 9- க்கு பிறகு வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் வந்து சேரும்.  நில பிரச்னையில் சுமூகமான தீர்வு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர்.  குருவின் பார்வையால் வீட்டுச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும்.  பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற் றுவர். பிப்.21,22 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதன பொருள் வரும்.

நல்ல நாள்: பிப்.16, 17, 21, 22, 27, 28,  மார்ச் 1, 2, 8, 9, 10, 11, 12
கவன நாள்:  மார்ச் 3, 4, 5- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 6  நிறம்: வெள்ளை, மஞ்சள்

* பரிகாரம்:
*  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* தினமும் காலையில் நீராடி, சூரிய நமஸ்காரம்
*  புனர்பூசத்தன்று ராமருக்கு துளசி அர்ச்சனை

 
மேலும் தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019) »
temple
இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  ... மேலும்
 
temple
அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் ... மேலும்
 
temple
இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.