Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வளர்ச்சி சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வருமானம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) உற்சாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
17:51

கருணை உள்ளம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!

மிதுனத்தில் இருக்கும் சுக்கிரன் ஜூன் 10ல் கடகத்திற்கு மாறி வாழ்வில் உற்சாகத்தை உண்டாக்குவார். குரு, ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். புதன் மே 21 வரையும், ஜூன் 6க்கு பிறகும் சுபபலன் கொடுப்பார். இடைபட்ட காலத்தில் அவரால் நன்மை தர இயலாது. சனி பகவான் ராசிக்கு 4-ம் இடத்தில் இருப்பதால் தடங்கல் வந்திருக்கும். ஆனால் அவரின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. குருவால் துணிச்சல் பிறக்கும். நீண்டநாள் கனவு நிறைவேற வாய்ப்பு உண்டாகும். எடுத்த செயல் சிறப்பாக முடியும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

குடும்பத்தில் மங்களமான சூழ்நிலை உருவாகும். மாத முற்பகுதியில் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். மே 21ல் இருந்து ஜூன் 6 வரை பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அதன் பிறகு கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

பெண்கள் வகையில் நற் பலனை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மே 24,25ல் அவர்களால் நன்மை கிடைக்கும். மே 20,21ல் உறவினர் வருகையும் அவர்களால் பலனும் கிடைக்கும். அதே நேரம் மே 31, ஜூன் 1,2ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம் சற்று ஒதுங்கி இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். பெண்கள் வகையில் இருந்த தொல்லை ஜூன் 6க்கு பிறகு அடியோடு மறையும். அதன்பின் உங்களுக்கு தொல்லை கொடுத்த பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவ முன் வருவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.

ஜூன் 5,6ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்களுக்கு மாதத்தின் மத்தியில், புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பணிச்சுமையை சந்திக்க நேரிடும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஜூன் 6க்கு பிறகு விடுபடுவர். அதன்பின் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர் களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகள் அனுசரணை யுடன் நடந்து கொள்வர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். மே 18,19 ஜூன் 14ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறலாம்.

கலைஞர்கள் கடந்த மாதம் இருந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜூன் 10 க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் எதிர்பார்த்தபடி அமையும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.

மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். தேர்வில் நல்ல மதிப்பெண், போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஜூன் 6க்கு பிறகு, மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டாகும்.

விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.
பெண்கள் குடும்பத்தின் முக்கிய அம்சமாக திகழ்வர். ஆடம்பர பொருள் கிடைக்க பெறுவர்.

மே 29,30ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகம் உண்டு. பிறந்த வீட்டில் இருந்து பண உதவி கிடைக்கும். ஜூன் 7,8,9 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். மே 16க்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்த்து வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. ஜூன் 6க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி
தேடி வரும். பிள்ளைகள்நலனிலும் அக்கறை தேவை.

* நல்ல நாள்: மே 18,19,20, 21,24,25,29,30 ஜூன் 5,6, 7,8,9,14
* கவன நாள்: மே 15, ஜூன் 10,11.சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,4
* நிறம்: மஞ்சள், நீலம்

* பரிகாரம்:
●  தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம்
●  வெள்ளிக்கிழமையில் காளிக்கு நெய் தீபம்
●  சனிக்கிழமையன்று பெருமாளுக்கு அர்ச்சனை

 
மேலும் தை ராசிபலன் (15.1.2019 – 12.2.2019) »
temple
இந்த மாதம் சூரியன் 10-ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார்.  புதன் ஜன.17ல் சாதகமான நிலைக்கு வந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் ராகு 3-ம் இடத்தில் இருந்தும், குரு 7-ம் இடத்தில் இருந்தும் மாதம் முழுவதும் நற்பலன்  ... மேலும்
 
temple
அதிக உழைப்பும்,  விடா முயற்சியும் தேவைப்படும் மாதமாக இது அமையும். உங்கள் திறமைக்கு சவால் விடும் காலம் ... மேலும்
 
temple
இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன் மற்றும் கேதுவால் சிறப்பான பலன் காண்பீர்கள். சுக்கிரன் ஜன.30ல் 5-ம் இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.