Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில் கழிவுநீர் : பக்தர்கள் கடும் அதிருப்தி திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி மகாபுஷ்கர விழா
எழுத்தின் அளவு:
தாமிரபரணி மகாபுஷ்கர விழா

பதிவு செய்த நாள்

17 அக்
2018
11:10

தமிழகத்தின் புனிதநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கரவிழா அக்.23 வரை நடக்கிறது. இந்நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக் காயல் வரையுள்ள தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடுவோர் புண்ணியம் பெறுவர். புஷ்கரம் என்பது பிரம்மாவின் கமண்டலத் தீர்த்தம். பூலோக உயிர்கள் அத்தீர்த்தத்தில் நீராடி புண்ணியம் அடைய வேண்டும் என விரும்பினார் குருபகவான். அதற்காக தவத்தில் ஈடுபட்டார். அது கண்டு இரங்கிய பிரம்மா, குருவே... உமக்கு என்ன வரம் வேண்டும்? எனக் கேட்டார். பிரம்ம தேவரே... உம் புஷ்கர தீர்த்தத்தை பூலோக உயிர்கள் நற்கதி பெறுவதற்காக என்னிடம் தந்தருள வேண்டும் என்றார். பிரம்மா சம்மதித்தாலும், புஷ்கர தீர்த்தம் பிரம்மா வை விட்டுப் பிரிய விரும்பவில்லை. இந்நிலையில் இருவருக்கும் இடையில் உடன்படிக்கை செய்தார் பிரம்மா. அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்குரிய நதியில் 12 நாள் புஷ்கரம் சேர வேண்டும் என்றும், அப்போது நீராடுவோருக்கு பாவம் போக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் 12 புனிதநதிகள் 12 ராசிகளுக்கு உரியதாக இருக்கின்றன.

ராசி             -    நதி

மேஷம்     -    கங்கை
ரிஷபம்      -    நர்மதை
மிதுனம்     -    சரஸ்வதி
கடகம்         -     யமுனை
சிம்மம்        -    கோதாவரி
கன்னி          -    கிருஷ்ணா
துலாம்          -     காவிரி
விருச்சிகம் -       தாமிரபரணி
தனுசு             -    சிந்து
மகரம்             -    துங்கபத்ரா
கும்பம்            -    பிரம்மபுத்ரா
மீனம்               -    பிரணீதா

குருபகவான் விருச்சிகராசிக்கு பெயர்ச்சியானதை ஒட்டி அக்.12 முதல் 23 வரை தாமிரபரணி யில் நடைபெறும் புஷ்கர விழாவில் நீராடுவோருக்கு மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரதோஷம் அகலும். அன்ன தானம், வஸ்திர தானம் செய்வது நல்லது. பசுதானம் அளிப்போருக்கு மோட்சம் கிடைக்கும். முன்னோருக்கு தர்ப் பணம் செய்ய பிதுர் சாபம் நீங்கும். பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரையுள்ள படித்துறை களில் எதில் நீராடினாலும் பலன் ஒன்றே. சூரிய உதயத்திற்கு முன்பாக பிரம்மமுகூர்த்த காலத்தில் (அதிகாலை 4:30 - 6:00) நீராடுவது சிறப்பு. இந்நாட்களில் குருத்தலங்களான தூத்துக் குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர், ஆழ்வார்திருநகரி ஆதிநாதப்பெருமாள் கோயில் களை தரிசிப்பதும் நன்மையளிக்கும். தாமிரபரணியில் நீராடி பிறவிப்பயன் பெறுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar