Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகோட்டையில் பாண்டி முனீஸ்வரர் ... பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்திவரதர் வைபவம் கூட்டம் அதிகரிப்பால் குலுங்குது காஞ்சி
எழுத்தின் அளவு:
அத்திவரதர் வைபவம் கூட்டம் அதிகரிப்பால் குலுங்குது காஞ்சி

பதிவு செய்த நாள்

15 ஆக
2019
03:08

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில், அத்தி வரதர் வைபவம், 45 நாட்களாக, வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அத்தி வரதரை தரிசிக்க, நேற்று முன்தினம், நள்ளிரவு, 11:30 மணிக்கு, நடிகர், ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர்.நேற்று மதியம், முன்னாள் பிரதமர், தேவகவுடா மற்றும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர், குமாரசாமி ஆகியோர் தரிசித்தனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி தொகுதியின் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., மஸ்தான், குடும்பத்துடன் வந்து தரிசித்தார்.

வரும், 17ம் தேதியுடன் வைபவம் முடிவதால், இன்றும், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள், வரதராஜ பெருமாள் கோவிலில் திரள வாய்ப்புள்ளது. இதனால், பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, நிருபர்களிடம் நேற்று, கலெக்டர், பொன்னையா கூறியதாவது: வியாழக்கிழமை மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஆடி கருடசேவை நடைபெற உள்ளது. இதனால், மதியம், 12:00 மணிக்கு, கிழக்கு கோபுர கதவு மூடப்படும். அந்த நேரத்தில், கோவிலுக்குள் வந்தோர் அனைவரும், தரிசனம் முடித்த பிறகே, தரிசனம் நிறுத்தப்படும். கருடசேவை முடிந்ததும், இரவு, 8:00 மணிக்கு பின், அத்தி வரதர் சேவை தொடரும்.

வி.ஐ.பி., - வி.வி.ஐ.பி., தரிசனம், வியாழக்கிழமை மதியம், 12:00 மணியுடன் முடிகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி, பொது தரிசனம் மட்டும் உள்ளது. வெள்ளிக்கிழமை பொது தரிசனம் மட்டும் உண்டு. அன்று, விடிய விடிய பக்தர்கள் வந்தாலும் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை அதிகாலையில், சேவை நிறுத்தப்படும்.அன்றைய தினம் மாலை அல்லது இரவில், அனந்தசரஸ் குளத்தில், அத்தி வரதரை வைக்கும் பணிகள் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

மனு நிராகரிப்பு: சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபாவின் தலைவர் கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க ௪௮ நாட்கள் போதுமானது அல்ல. அடுத்த தரிசனம் 40 ஆண்டுகளுக்கு பின் நடக்கும். அதனால் 24 நாட்கள் கூடுதலாக நீட்டிக்க கோரி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். என் கோரிக்கையை பரிசீலித்து 10 நாட்கள் நீட்டிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கும் நேரத்தில் ஒரு குழுவினர் தடுத்து விட்டனர். தரிசன நாட்களை நீட்டிக்காததால் பாதிக்கப்படுவது பக்தர்கள் தான். எனவே 26ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்த கோரிய வழக்கில் என்னை இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் மகாராஜா தரிசன நாட்களை நீட்டிப்பதாக முதல்வர், அமைச்சர்கள் யாரும் கூறவில்லை என்றார். இதையடுத்து இம்மனுவை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதி அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்தார். அதைத்தொடர்ந்து கோவிந்த ராமானுஜ தாசர் தரப்பு மனுவை வாபஸ் பெற்றது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.

கோவிலில் பிரசவம்:
வேலுார் மாவட்டம், பானாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மனைவி விமலா, 25. உறவினர்களுடன், நேற்று காலை, அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்தார். பிரசவத்துக்கு, வரும், 27ம் தேதி கணிக்கப்பட்டிருந்தது. அதற்குள், அத்தி வரதரை தரிசனம் செய்து விட வேண்டும் என, கோவிலுக்கு வந்துள்ளார். தரிசனம் முடித்து, கோவிலில் இருந்து வெளியே வந்தபோது, விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த செவிலியர், யோகவல்லி, அவருக்கு பிரசவம் பார்த்தார். சுகப்பிரசவத்தில், விமலாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக தாய், குழந்தை இருவரையும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து, விமலா கணவர் அசோக்குமார் கூறுகையில், தாயும் சேயும், நலமுடன் உள்ளனர். அத்தி வரதரை பார்த்த பின், ஆண் குழந்தை பிறந்ததால், குழந்தைக்கு, அத்தி வரதா என, பெயர் வைத்துள்ளோம், என்றார்.

டூ-வீலர் சர்வீஸ்: கோவிலில் இருந்து தரிசனம் முடித்து வெளியேறும் பக்தர்களை, கார் பார்க்கிங் இடத்திற்கோ அல்லது, ரங்கசாமி குளம், பெரியார் நகர், ஓரிக்கை போன்ற பஸ் நிலையங்களுக்கோ அழைத்து செல்ல, இளைஞர்கள் சிலர், டூ-வீலர் சர்வீஸ் செய்கின்றனர். அவர்கள், கோவிலில் இருந்து வரும் பக்தர்களுக்காக, அண்ணா அவென்யூ, மலையாள தெரு போன்ற இடங்களில் காத்திருக்கின்றனர். நடந்து செல்லும் பக்தர்களிடம், இரு சக்கர வாகனத்தில் வாருங்கள்; நீங்கள் விரும்பும் இடத்தில் விட்டுவிடுகிறேன். ஒரு ஆளுக்கு, கட்டணமாக, 50 ரூபாய் தாருங்கள் என, கேட்கின்றனர். அத்தி வரதர் வைபவத்தால், சின்ன காஞ்சிபுரத்தில், வேலையின்றி இருக்கும் சில இளைஞர்கள், இது போன்ற பணியை துவங்கியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar