Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ரங்கநாத பெருமாள்
  அம்மன்/தாயார்: ரங்கநாயகித்தாயார்
  தல விருட்சம்: புன்னாக மரம்.
  தீர்த்தம்: பெண்ணையாறு
  ஊர்: ஆதிதிருவரங்கம்
  மாவட்டம்: விழுப்புரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.  
     
 தல சிறப்பு:
     
  தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்- 605 802 விழுப்புரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4153- 293 677 
    
 பொது தகவல்:
     
  இங்கு ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டுகிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

சோமுகன் எனும் அசுரன் தேவர்களை வெல்வதற்காக வேதங்களை அபகரித்தான். தேவர்களும் முனிவர்களும் மிகுந்த கவலை அடைந்து மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு வேதங்களை மீட்டுத்தருமாறு வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற நாராயணன், சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு கொண்டு வந்து கொடுத்து இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசமும் செய்தார்.


சுரதகீர்த்தி என்ற மன்னனுக்கு எல்லா செல்வங்கள் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லாததால் மிகவும் வருந்தினான். நாரதரின் அறிவுரையின் பேரில் இவன், இத்தலத்திற்கு வந்து தனது மனைவியுடன் வேண்ட, பெருமாளின் அருளால் நான்கு குமாரர்களை பெற்று மகிழ்ந்தான்.இத்தலத்தை ஆழ்வார்கள் யாரும் மங்களாசாசனம் செய்ய வில்லை என்று கருதி வந்த போதிலும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் "வொருவாதாள்' என தொடங்கும் பத்து பாசுரங் களிலும், "ஏழை ஏதலன்' என தொடங்கும் பத்து பாசுரங்களிலும் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு கோயில் கல்வெட்டுக்களிலும் பாசுரங்களிலும் சான்றுகள் உள்ளது. வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகனும் நிபாசதிலகத்தில் இப்பெரு மாளை மங்களா சாசனம் செய்துள்ளார் என்றும் நூல்கள் தெரிவிக்கிறது.


 
     
  தல வரலாறு:
     
 

ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக் கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று.சில காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை நியமிக்கும்படி கூறினார்.தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.