முருகன் கோயில்கள்
- தமிழ் நாட்டில் முருகனுக்கு 500 கோயில்களுக்கு மேல் உள்ளன.
- பெரும்பாலான முருகன் கோயில்கள் மலைமேல் அமைந்துள்ளது.
- 6 படை வீட்டில் முருகன், திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த கோலத்திலும், மற்ற 5 படை வீட்டில் நின்ற கோலத்திலும் அருளுகிறார்.
- திருச்செந்துாரில் உள்ள 4 உற்சவர்களுக்கும் தனி சன்னதி உள்ளது.
- தமிழகத்தின் அதிக வருமானமுள்ள கோயில் பழநி முருகனுக்கு ஆனி கேட்டையில் அன்னாபிஷேகம் நடக்கும்.
- திருத்தணி முருகன் கோயிலில் யானை வாகனம் வெளியே பார்த்திருப்பது சிறப்பு.
- 6 படைவீட்டில் உள்ள முருகன் 4 திசை நோக்கிய நிலையில் உள்ளார்.
- கடலுார் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் சுயம்பு வடிவில் உள்ளார்.
- சின்னாளபட்டி முருகன் நான்கு முகத்துடன் உள்ளார்.
மேலும் முருகன் கோயில்கள் »