அயோத்தி ராமர் கோவிலில் 5 அடி உயர கருங்கல் மூலவர்அயோத்தி, அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்ப கிரகத்தில், கிருஷ்ண ஷிலா எனப்படும், கருங்கல்லால் ஆன 5 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட உள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்தது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி, 2020 ஆக., 2ல் பூமி பூஜையுடன் துவங்கியது.  ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த கட்டுமானப் பணிகளை நிர்வகித்து வருகிறது. கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவப்பட உள்ள ராமர் சிலை குறித்து, அறக்கட்டளை நிர்வாகிகளின் இரண்டு நாள் கூட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, அறக்கட்டளை உறுப்பினர் சுவாமி தீர்த்த பிரசன்னாச்சார்யா நேற்று கூறியதாவது: ராமர் கோவிலின் கர்ப்ப கிரகத்தில், 5 வயதிலான ராமரின் அவதாரம் சிலையாக வைக்கப்பட உள்ளது. இந்த சிலை 5 அடி உயரத்தில், கையில் வில் - அம்புடன் வடிக்கப்படும். கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ், ராமர் சிலையை வடிக்க உள்ளார்.

கிருஷ்ண ஷிலா : இதற்காக, கர்நாடகாவின் கார்கர் மற்றும் ஹெகே தேவன் கோட்டே கிராமங்களில் இருந்து பலவிதமான, கிருஷ்ண ஷிலா எனப்படும் கருங்கற்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து ராமர் சிலைக்கான சரியான கல்லை ஸ்தபதி தேர்வு செய்வார். இவ்வாறு அவர் கூறினார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையான மகர சங்கராந்தியின் போது, இந்த சிலை ராமர் கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவப்பட உள்ளது.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்