தமிழ் புத்தாண்டு ஏப்.13 இரவு 12:43 மணிக்கு பிறக்கிறது. அன்று இரவு பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து, பூஜையறையில் வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு வீட்டிலுள்ள பெரியவர் ஒருவர் இதைப் பார்த்து விட்டு நீராட வேண்டும். பின் மற்றவர்களின் கண்களைப் பொத்தி அழைத்து வந்து இதைப் பார்க்கச் செய்ய வேண்டும். இந்த ஆண்டுக்குரிய ராஜா புதன். இவருக்குரிய தெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சொக்கநாதருக்கு பூஜை செய்தால், இனிமையாக அமையும்.
இந்த ஆண்டின் ராஜா புதன். மந்திரி சுக்கிரன். குரு கன்னி ராசியிலும், சனி விருச்சிகத்திலும், ராகு சிம்மத்திலும், கேது கும்பத்திலும் உள்ளனர். கன்னி ராசியில் இருக்கும் குரு, செப்.1ல் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2018 பிப்.13ல் அதிசாரமாக விருச்சிக ராசிக்கு செல்வார். சனி விருச்சிக ராசியில் இருக்கிறார். டிச.18ல் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜூலை 26ல் ராகு சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும், கேது கும்பத்தில் இருந்து மகரத்திற்கும் மாறுகின்றனர்.
|
|
|