அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில்,
பாலைய்யா கார்டன்,
மடிப்பாக்கம், சென்னை 600091. |
மடிப்பாக்கம் பாலைய்யா கார்டன் பகுதியில் உள்ளது. |
இத்தலத்தில் அபித குஜலாம்பாள் அருணாசலேஸ்வரர் கல்யாண கந்தசுவாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்கு செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக எள்ளு மற்றும் தாமரை தானம் செய்து (தில-பத்ம தானம்) இந்த முருகனை வேண்டிக் கொள்கின்றனர். கோயில் படிகளுக்கும் படி பூஜை செய்து வழிபடுகின்றனர். முருகனின் ஷடாக்ஷர மந்திரத்தைக் குறிக்கும் வகையில் இந்த 6 படிகள் உள்ளன. சமீப காலத்தில் கட்டப்பட்ட கோயில். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் |
அருள்மிகு மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்,
மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில்,
முருக சித்தர் ஆசிரமம்,
மேட்டுக்குப்பம், வானகரம்
மதுரவாயில், சென்னை 600095. |
+91 44-24763100, 4844201 | சென்னை மதுரவாயிலை அடுத்த வானகரம் சாலையில் சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ளது. அதே போல் மதுரவாயிலில் சென்னையிலிருந்து பூந்தமல்லி செல்லும் போது இடப்புறம் ஓர் வரவேற்பு வளைவு உள்ளது. அங்கும் முருகன் கோயில் உள்ளது. வானகரத்திலிருந்து அரை கி.மீ. போரூரிலிருந்து 1 கி.மீ. |
இத்தலத்தில் முருகன் நின்ற கோலத்தில் உள்ளார். கோயிலில் பிரதிஷ்டை செய்த முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த போது வலது கன்னத்தில் சிவப்பு மச்சம் இருப்பதை பக்தர்கள் கண்டனர். பிரதிஷ்டைக்குப் பின்னரே இவ்வாறு காணப்பட்டது. வலது கன்னத்தில் சிவப்பு நிற மச்சத்தோடு முருகன் திகழ்வதால் மச்சக்கார முருகன் எனப் பெயர் பெற்றார். வடபழனி கோயில் கட்டிய 3 சித்தர்கள் ஆசியினால் 2003ல் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோயில். சீதா ராம சமேத ஹனுமன் சன்னிதி உள்ளது. வேம்பு அரச மரம் கீழுள்ள சிவ வனத்தீஸ்வரரின் நந்தியின் காதுகள் வளருவதாக ஐதீகம். |
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. (கிருத்திகை அஷ்டமி நாட்களில்) |
அருள்மிகு ராஜமுருகன் திருக்கோயில் |
அருள்மிகு ராஜமுருகன் திருக்கோயில்,
பெரியார் தெரு,
அண்ணாநகர்,
கொருக்குப்பேட்டை,
திருவெற்றியூர்,
சென்னை 600021. |
+91 9444815154, 8122993317 | சென்னை தங்கசாலை பகுதியிலிருந்து ஜி.என்.டி செல்லும் பாதையில் உள்ளது திருவெற்றியூர். இங்கிருந்து கொருக்குப்பேட்டை செல்லலாம். கோயம்பேடிலிருந்து கண்ணதாசன் நகர் செல்லும் பேருந்தில் கண்ணதாசன் நகரில் இறங்கி ஷேர் ஆட்டோவில் இந்தக் கோயிலை அடையலாம். |
இத்தலத்தில் ஒரு முகம் நின்ற திருக்கோலம். வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். மயிலம் முருகப் பெருமான், சிதம்பரம் நடராசர் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் ஆகியோரை தரிசனம் செய்து கையில் இருந்த சிறிய தொகை கொண்டு வேல் ஒன்று வாங்கி நிர்மாணம் செய்தார் மணியன் சுவாமிகள் என்பவர். பின்னர் பாம்பன் சுவாமிகளை வழிபட்டு அருளாளர்கள் பலரைச் சந்தித்து ஆசியும் பொருளுதவியும் பெற்று வளர்த்த கோயில் இது. இவர் சந்தித்த அருளார்கள் தெங்கால் மவுன குரு சுவாமி, திருமுருக கிருபானந்த வாரியார், தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர், திருவலம் சுவாமிகள், இரத்தினகிரி பாலமுருகன் அடிமை, வீராபுரம் அலமாதீஸ்வரர் கோயில் பாலதண்டாயுதபாணி சுவாமிகள், மகான் தவராஜ சிங்கம், பாலகணபதி சுவாமிகள், பலராம் சுவாமிகள், குருஜி சுந்தரராம் சுவாமிகள், பழனி லஸ்ரீ சாதுசுவாமிகள், சிவகுமார சுவாமிகள், திருவேற்காடு ஐயப்ப சுவாமிகள், இராமதாஸர், துர்க்கைச் சித்தர், காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்து முதியவர் ஒருவர் 108 ருத்திராட்ச மாலை கொடுத்து ஆசி பெற்ற கோயில். எண்ணற்ற பல நல்லுள்ளங்களின் ஆசியால் கட்டி வரும் கோயில் என்பதால் பெரும் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு மையமாக இது விளங்குகிறது. |
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. (எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.) |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
என்.எஸ்.சி. போஸ் ரோடு,
குமரகோட்டம், சென்னை 600079. |
+91 44-25385026 | பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. |
இத்தலத்தில் ஆறுமுகன் வள்ளிதெய்வாயானையுடன் காட்சி தருகிறார். அருணாசலேஸ்வரர் அபிதகுஜாம்பாள், நாராயணி என இதர சன்னிதிகளும் உள்ளன. இதே பகுதியில் இரு இணைந்த கோயில்களான சென்ன மல்லீஸ்வரர் திருக்கோயிலும் சென்னகேசவப் பெருமாள் திருக்கோயிலும் உள்ளன. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு அறுபடை வீடு முருகன் திருக்கோயில் |
அருள்மிகு அறுபடை வீடு முருகன் திருக்கோயில்,
அறுபடை வீடு டிரஸ்ட்,
திருமுருகன் தெரு,
கலாக்ஷேத்திரா காலனி,
பெசன்ட் நகர், சென்னை 600090. |
+91 44-24900203 | பெசண்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோயிலுக்கு அருகே அமைந்துள்ள கோயில். |
இத்தலத்தில் ஆறுபடை முருகன் சன்னிதிகள் உள்ளது. இங்கு அறுபடைவீடு முருகனை ஒரே கோயிலில் தரிசிக்க ஏதுவாக புதிதாகக் கட்டப்பட்ட கோயில். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை (தினமும் காலை 7.30-8 பாலாபிஷேகம் மாலை 5.45க்கு பஞ்ச திரவிய அபிஷேகம்.) |
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,
சென்னை கந்தாசிரமம்,
கந்தாசிரமம்,
கிழக்கு தாம்பரம்,
சென்னை 600073 |
+91 44-22290134, 22293388, 9444629570, 9786516575 | சேலத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. மலை மேல் கோயில். வாகனங்கள் நேராக மலை வரை செல்லும். உடையாபட்டியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. ஏற்காடிலிருந்து சேலம் வர இரண்டு பாதைகள் உள்ளன. அதில் கொட்டச்சேடு பாதையாக வந்தால் அயோத்தியாபட்டிணம் இராமர் கோயில் தாண்டி இந்த கோயிலிற்கு வரலாம். பேருந்து எண் 73 சேலம் டவுனிலிருந்து புறப்படும் நேரம் காலை 6.10, 10.20 மதியம் 2.05, மாலை 5.5 ஓம் கந்தாசிரமம் வந்தடையும் நேரம். காலை 6.45, 11 மணி, மதிய்ம 2.40 மாலை 5.45. கந்தாசிரமத்திலிருந்து மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் ஹொக்கேனேக்கல் கூட செல்லலாம். அந்தப் பாதையில் தான் சிற்ப வேலைப்பாடு மிக்க தாரமங்கலம் வசந்தீஸ்வரர் கோயில் உள்ளது. |
கந்தகிரி என்றும் கன்னிமார் ஓடம் என்றும் அழைக்கப்படுகிறது. சாந்தானந்த சுவாமிகள் சுயம்பிரகாசரின் சிஷ்யர். இந்த குருவானவர் அவதூத தத்தாத்ரேய சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களோடு (குஜராத்) தொடர்பு உள்ளவர். இவரால் 70-களில் நிறுவப்பட்டது இந்த ஸ்கந்தாசிரமம். மகிஷாசுரமர்த்தினி மற்றும் ஸ்கந்தர் மூர்த்தங்கள் உள்ளன. உலகில் எங்கும் காண முடியாத நவக்கிரகங்கள் வாகனங்களோடும் தம்பதியரோடும் உள்ளனர். தன்வந்த்ரி, பஞ்சமுக கணபதி, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர் ஆகியோரின் மிகப்பெரிய விக்கிரகங்களும் உள்ளன. 18 கைகளுடன் உள்ள காளி சன்னிதிக்கு நேர் எதிரில் முருகன் சன்னிதி உள்ளது. சாந்தானந்த சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. சென்னையில் ஏற்படுத்தப்பட்ட ஸ்கந்தாசிரமம் (சேலையூர்) பிற்காலத்தில் நிறுவப்பட்டது. இங்கு பாலதண்டாயுதபாணியாக ஞான ஸ்கந்தன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். சென்னை கந்தாசிரமம் 19 அடி உயர பஞ்ச லோக சுதர்சனம், தஞ்சைப் பெரிய கோயிலைக் காட்டிலும் பெரிய சிவலிங்கம் அஷ்ட சஹஸ்ர லிங்கம் (1008) உள்ளது. வரிக்கு 53 லிங்கம் என 19 வரிகளுடன் 1007 லிங்கங்கள் அதன் மேல் உள்ளன. ஒவ்வொரு பவுர்ணமிக்கு மறுநாள் சண்டி ஹோமம் நடைபெறுகிறது. பிரதோஷம், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி போன்ற விழாக்கள் விசேஷ நாட்களில் நடைபெறுகின்றன. |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை |
|
|