அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் |
13, பேசின் சாலை, மாட்டு மந்தை, திருவொற்றியூர், சென்னை - 600 019 |
+91 98841 75708 | திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலடிப்பேட்டை தாண்டியபின் கே.சி.பி என திரும்பும் மணலி செல்லும் சாலை வழியே செல்ல வேண்டும். |
இங்குள்ள அம்மன் வேதநாயகி, மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் மிக ஈர்ப்புடன் பெரியபாணலிங்கமாக காட்சி தரும் சிறிய
கோயில். |
அருள்மிகு ஆத்ம லிங்கேசுவரர் திருக்கோயில் |
கார்க்கில் நகர், திருவொற்றியூர், சென்னை - 600 019 |
எர்ணாவூர் - மணலி செல்லும் சாலையில் பாக்கிங்காம் கால்வாய் உள்ளது. அதன் ஓரத்தில் இக்கோயில் உள்ளது. |
இரும்பு கதவின் இடைவெளியில் இறைவனை எப்போதும் பார்த்து வணங்கலாம். அம்மன் அன்னபூரணீஸ்வரி. பிரத்யங்கா தேவியின் உருவம்
பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. |
அருள்மிகு திருவுடைநாதர் திருக்கோயில் |
ஹரிகிருஷ்ணாபுரம், மணலி, சென்னை - 600 018 |
+91 92442 46998 | ஐயப்பன்கோயில் எதிர் ரோட்டில் இக்கோயில் அமைந்துள்ளது. |
அம்மன் திருவுடைநாயகி, தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் குபேர தீர்த்தம், இங்கு ஆகாசலிங்கம், கயிலாசநாதர் ஆகிய சிவலிங்க திருமேனிகள்
உள்ளன. |
அருள்மிகு எரணீசுவரர் திருக்கோயில் |
எர்ணாவூர் சென்னை - 600 057 |
+91 90949 08795, 97102 27434 | எர்ணாவூர் மெயின்ரோட்டில் சிறிய மசூதி எதிரில் உள்ள தெருவில் இக்கோயில் உள்ளது. |
இங்குள்ள அம்மன் சொர்ணாம்பிகை. |
அருள்மிகு நாகலிங்கேசுவரர் திருக்கோயில் |
கத்திவாக்கம், சென்னை - 600 057 |
+91 99419 86287 | |
|
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
வெள்ளாங்குளம், சென்னை - 600 103 |
+91 90940 52858 | |
|
அருள்மிகு திருமணங்கீசுவரர் திருக்கோயில் |
மேலூர், சென்னை- 600 120 |
+9144-27935979 | |
அம்மன் திருவுடையம்மன், தல மரம் கொன்றை தீர்த்த குளம். மூலவர் சுயம்பு, நிரந்தரமாக வெள்ளிகவசம் (குவளை) சார்த்தப்பட்டுள்ளது. அழகிய கற்கோயில் நந்தியம்பெருமான் முகம் சற்று திரும்பிய அமைப்பில் உள்ளார். |
அருள்மிகு திருகண்டீசுவரர் திருக்கோயில் |
வல்லூர், சென்னை- 600 120 |
+9144 27995228 | மேலூரில் இறங்கி எதிரில் செல்லும் ரோட்டில் 1 கி.மீ.சென்றால் இக்கோயிலை அடையலாம். |
|
அருள்மிகு இராமநாதேசுவரர் திருக்கோயில் |
அத்திப்பட்டு, சென்னை- 600 120 |
+91 94442 79629 | சென்ட்ரல் - கும்மிடிபூண்டி மார்க்கத்து ரயிலில் சென்றால் அத்திபேடு ரயில் நிலையத்தின் அருகில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் பர்வதவர்த்தினி, தல மரம் வில்வம். |
அருள்மிகு கச்சாலீசுவரர் திருக்கோயில் |
விச்சூர், சென்னை - 600 103 |
+91 80563 20771 | மணலி புதுநகர் அடுத்து சிறிது தொலைவில் நாப்பாளையம் செல்லும் பாதையில் இடப்புறம் திரும்பும் பாதையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. ஞாயிறு, அருமந்தை வழியாகவும், பெருங்காவூரிலிருந்தும் செல்லலாம். |
தீர்த்த குளம் கச்சாலீசுவரர் குளம், மிகப்பெரிய சிவலிங்க திருமேனி, ஆவுடையாரின்றி திறந்தவெளியில் உள்ளார். மேலும் ஒரு வீட்டின் உள் புதரில் சிவலிங்க திருமேனி உள்ளது. |
|
|