அருள்மிகு ருத்ர சோமநாதர் கோயில் |
ஞானமாணிக்க சிவாச்சாரியார் சித்தர்பீடம், 87,
மன்னார்சாமி கோயில் தெரு, இராயபுரம், சென்னை-600 013 |
+91 98407 71063 | இராயபுரம் பழைய பாலத்தில் ஏறும் முன் இடப்புறம் உள்ளது. |
தல விருட்சம் வில்வம், இக்கோயிலில் ஜீவசமாதி
உள்ளது. |
அருள்மிகு பஞ்சமுக லிங்கேசுவரர் திருக்கோயில் |
இராயபுரம் (கிளைவ் பேட்டரி) அருகில், இராயபுரம் - 600 013, சென்னை. |
+91 98402 79864 | புதிய மேம்பாலத்தின் கீழ் இத்திருக்கோயில் உள்ளது. |
அம்மன் மனோன்மணி, மூலவர் நான்கு முகங்களாகவும், ஈசான்யம் லிங்கரூபமாகவும் அருள்பாலிக்கின்றார். |
அருள்மிகு அண்ணாமலை ஈசுவரர் திருக்கோயில் |
35, ஆரணி ரங்கையன் தெரு, வண்ணாரப்பேட்டை, சென்னை- 21 |
+91 94441 57280 | செல்லும் வழி : மகாராணி தியேட்டர் பின்புறம் அரை கி.மீ. ல் ஆரணி ரங்கையன் தெருவில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் உண்ணாமுலை அம்பாள். |
அருள்மிகு பஞ்சாட்சர விபூதி லிங்கேசுவரர் திருக்கோயில் |
தண்டையார்பேட்டை, சென்னை-600 081 |
அப்போல்லா மருத்துவமனை எதிரில் உள்ள சிறிய கோயில் |
இங்குள்ள அம்மன் காமாட்சி, மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் |
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை - 81 |
தண்டையார்பேட்டை பஸ் டிப்போக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. |
அம்மன் அபிதகுசாம்பாள். |
அருள்மிகு ஏகாம்பர ஈசுவரர் திருக்கோயில் |
335, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை - 600 081 |
லட்சுமி கோயில் எதிரில் வடக்கு நோக்கி சிறிது தொலைவில் உள்ள சிறிய கோயில். |
மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். |
அருள்மிகு காளத்தீசுவரர், ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |
109, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை - 600 081 |
+91 9150321759 | |
அம்மன் திரிபுரசுந்தரி, தல மரம் வில்வம், மற்றொரு சிவலிங்க திருமேனி ஜலகண்டேசுவரர் - ஜலகண்டேசுவரி. இரண்டு சித்தர்களின் ஜீவசமாதி உள்ளன. குரு வழிபட்ட லிங்கம். சீடர் வழிபட்ட லிங்கம், இக்கோயில் பின்புறம் தனிக்கோயிலாகவும் உள்ளது. முதற்கோயிலில் உள் மண்டபத்தில் மூன்று சிவலிங்க திருமேனியும் பின்புறக்கோயில் உள்மண்டபத்தில் இரண்டு சிவலிங்க திருமேனியும் அருள்பாலிக்கின்றனர். |
அருள்மிகு பூமிசுவரர் திருக்கோயில் |
எம்.டி.எல்.பி. காலனி, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை-600 081 |
துறைமுகத் தொழிலாளர் குடியிருப்பு உள்ளே இக்கோயில் உள்ளது |
அம்மன் பூமிநாயகி. |
அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் |
சேசால கிராமணி தெரு, (சாத்தாங்காடு செல்லும் வழி), பி.டி. எஸ்டேட், சென்னை - 19 |
+91 98403 74207 | தண்டுமாரி கோயிலை சேர்ந்த சாத்துமா நகர் செல்லும் பாதையில் சேசாலகிராமணி தெரு முதலில் பி.டி.எஸ்டேட் பொருள்கள் காப்பிட்டு கிடங்கு உள்ளே இக்கோயில் உள்ளது. |
மார்கழி மாதம் 30 நாட்கள் மட்டும் காலையில் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை காலை வழிபாடு செய்கிறார்கள். |
அருள்மிகு கங்கை ஈசுவரர் திருக்கோயில் |
127, மேட்டுத்தெரு, சாத்தாங்காடு, சென்னை - 600 019 |
+91 93807 74655 | தண்டு மாரியம்மன் கோயில் சேர்ந்த சாத்து மாநகர் செல்லும் சாலை வழியே மேட்டுத்தெரு வடக்கு புறமாக திரும்பி இத்திருக்கோயிலை அடையலாம். |
அம்மன் பங்கஜம்பாள், தல மரம் அரச மரம். மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வெளி பிரகாரத்தில் இரண்டு சிவலிங்க திருமேனி
அனைவரும் வழிபடும்படி வைத்துள்ளனர். இத்திருக்கோயில் சிவலிங்க திருமேனி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட திருமேனி. |
|
|