அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோயில் |
லிங்கம் தெரு, புழல், சென்னை - 600 066 |
+9144-69505219 | செங்குன்றம்-சென்னை சாலையில் தாம்பரம் மேம்பாலம் முன்பு இடதுபுறம் பிரியும் ரோட்டில் சென்றால் கோயிலை அடையலாம். |
வியக்கவைக்கும் மிகப்பெரிய சிவலிங்க திருமேனி. |
அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில் |
புழல் காந்தி மெயின் ரோடு, சென்னை-600 066 |
+91 9840727379, 9444120893 | புழல் ஜெயில் எதிரில் மாநகராட்சி சேர்ந்த காந்தி மெயின் ரோட்டில் அரை கி.மி. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். |
அம்மன் சொர்ணாம்பிகை, தலமரம் வில்வம், தீர்த்தம் சொர்ணபுஷ்கரணி. இங்கு அஷ்டோத்ர லிங்கம் உள்ளது. 1341 ம் ஆண்டு சம்புவராயர் ஆட்சியில் திருக்கோயிலை புதுப்பித்து உள்ளார். 9 ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவ மன்னனும் 12 ம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனால் திருப்பணி செய்த கற்கோயில். இறைவர் சதுர ஆவுடையாருடன் மகாலிங்க ரூபம். இத்தல இறைவனை வழிபட குழந்தை பாக்கியம், நரம்பு சம்பந்த நோய்கள், மனநோய் குணமடையும். சூரியன் இவ்வாலய இறைவன் மீது புரட்டாசி, பங்குனி முதல் வாரம் தனது ஒளி கரங்களால் வணங்கி செல்கிறார். ஆனிமாதம் 64 மூலிகைகளை கொண்டு சாறு தயாரித்து நடத்தப்படும் அபிஷேகம் வெகுபிரசித்தம். |
அருள்மிகு திருக்குளத்தீசுவரர் திருக்கோயில் |
புழல், சென்னை- 600 066 |
புழல் திருமூலநாதர் கோயிலுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. |
இத்தல இறைவனைக் இரும்பு கதவின் இடைவெளி வழியே எப்போதும் தரிசிக்கலாம். |
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
அகர்சன் சமுதாய கல்லூரி, மாதவரம்,
சென்னை-600 060 |
+9144- 25559001/2 | மாதவரம் பால்பண்ணையிலிருந்து மஞ்சகுப்பம் செல்லும் வழியில் சமுதாயக்கல்லூரியின் உள் இத்திருக்கோயில் உள்ளது. |
|
அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோயில் |
முதல் தெரு, கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, சென்னை-66 |
+91 90032 20905, 98400 88593 | காவாங்கரை கண்ணப்பசாமி நகரி கோயில் உள்ளது. |
அம்மன் பிரசன்ன ஞானாம்பிகை, தலமரம் அரசமரம். கண்ணப்பசுவாமி ஜீவசமாதி திருக்கோயில் எதிரில் உள்ளது. |
அருள்மிகு சுயம்பு அண்ணாமலையார் திருக்கோயில் |
திருவள்ளூர் சாலை, செங்குன்றம், சென்னை-600 052 |
+91 9940113518 | செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் சிறிது தொலைவில் ரோடு ஓரத்திலேயே அரசமரத்தின் அடியில் உள்ளது. |
இரும்பு கதவின் வழியே எப்போதும் இறைவனை காணலாம். |
அருள்மிகு பாகேசுவரர் திருக்கோயில் |
சிவன் கோயில் தெரு, லட்சுமிபுரம், பம்மதுகுளம் மதுரா, மேட்டுப்பாளயம் பொத்தூர் மெயின் ரோடு, ரெட்ஹில்ஸ், சென்னை-52 |
+91 90929 82707,99404 01696 | ரெட்ஹில்ஸ் திருவள்ளூர் ரோட்டில் முத்து மாரியம்மன் கோயில், எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து பிரியும் வழியில் இடதுபுறம் திரும்பி 3 கிமீல் இக்கோயில் உள்ளது. |
அம்மன் பாகேசுவரி, பாக்ய ஈசுவரர், என்ற திருநாமத்துடன் சுமார் 25 வருடம் முன் புழல் ஏரியின் உள் இருந்த சிவலிங்கத்தையும் நந்தியம் பெருமானையும் கொண்டு வந்து கூறையின் கீழ் சிவலிங்க திருமேனியை எழுந்தருள செய்து பின் திருக்கோயில் கட்டியுள்ளனர். |
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |
சிவன் கோயில் தெரு, கொள்ளுமேடு, சென்னை-600 062 |
+91 99403 27771 | |
|
அருள்மிகு வீரஜோதீசுவரர் திருக்கோயில் |
பாரதியார் தெரு, வீராபுரம்,சென்னை-55 |
+91 94446 10660 | ஆவடியிலிருந்து பூச்சி அத்திபட்டு செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. |
|
அருள்மிகு அலர்மாதீசுவரர் திருக்கோயில் |
அலமாதி, சென்னை-600 052 |
+91 99403 35886 | செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் 7 கி.மீ. செல்ல அலர்மாதீசுவரர் ஆர்ச் வரும் அதன் உள் சிறிது தூரத்தில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் மங்களாம்பிகை, தலமரம் வில்வம்.ஸ்ரீ மார்த்தாண்ட முனிவர் ஜீவசமாதி இத்திருக்கோயில் வெளி பிரகாரத்தில் உள்ளது. ஸ்ரீலஸ்ரீ சிவனடிமை பால தண்டாயுத மவுனகுரு சுவாமிகள்
இத்திருக்கோயில் வளர்ச்சிக்கு அருந்தொண்டு புரிந்தார். கொடிமரம், பெரிய நந்தி, மூலவர் பெரிய சிவலிங்க திருமேனி. |
|
|