அருள்மிகு விசுவநாத ஈசுவரர் திருக்கோயில் |
ஆயிலச்சேரி, சென்னை-600 052 |
செங்குன்றம் தாமரைபாக்கம் செல்லும் வழியில் வாணியம் சத்திரம் வலது பக்கம் செல்லும் ரோடில் 2 கி.மீல் ஆயிலசேரி ஊருக்குள் இத்திருக்கோயில் உள்ளது. |
அம்மன் விசாலாட்சி. |
அருள்மிகு திருநீற்றீசுவரர் திருக்கோயில் |
பாடியநல்லூர், சென்னை-600 052 |
செங்குன்றம் அடுத்து பாடியநல்லூரில் வலப்புரம் திரும்பி அரை கி.மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். |
அம்மன் லோகநாயகி, தலமரம் வில்வம். |
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
நல்லூர் கிராமம், சென்னை-600 067 |
+91 98413 27467 | கல்பனா டிம்பர் டிப்போ சேர்ந்த ரோட்டில் சிறிது தொலைவில் வலம் புறம் திரும்பி இக்கோயிலை அடையலாம். |
இங்குள்ள மூலவருக்கு நல்லீசுவரர் என்றொரு பெயரும் உண்டு. தலமரம் வில்வம், தீர்த்தம் அகத்திய தீர்த்தம், சகஸ்ரலிங்கம் வெள்ளை மார்பில் லிங்கம், வில்வமரத்தடி சிவலிங்கம். கஜபிரஷ்ட அமைப்புடன் கோயில் உள்ளது. |
அருள்மிகு குபேரலிங்கேசுவரர் திருக்கோயில் |
பழைய எருமை வெட்டி பாளையம், சென்னை-600 067 |
+91 9176286639 | |
|
அருள்மிகு வரமுத்தீசுவரர் திருக்கோயில் |
எருமை வெட்டி பாளையம், சென்னை-600 067
|
+91 94440 67607, 94447 04873 | செங்குன்றம் நெல்லுர் ரோட்டில் ஆத்தூர் மேம்பாலம் இடப்புரம் 6 கி.மீ. தூரத்திலும், காரனோடையிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது. |
அம்மன் காமாட்சி. |
அருள்மிகு திருப்பாலீசுவரர் திருக்கோயில் |
பாலவாயல், சென்னை-600 052 |
+91 9444582195 | செங்குன்றத்தி(ரெட்ஹில்ஸ்)லிருந்து சோத்துப்பாக்கம் செல்லும் சாலையில் 1 கி.மீ இக்கோயில் மெயின் ரோட்டிலேயே உள்ளது. |
அம்மன் பாலாம்பிகை, தீர்த்தம் சிவ தீர்த்தம். |
அருள்மிகு புண்ணிய கோடீசுவரர் திருக்கோயில் |
கோட்டைகுப்பம், சிவன் கோயில் மேடு, சென்னை-600 067 |
பெரியார் நகர் இறங்கி மண்பாதையில் 1 கி.மீ நடந்து சென்றால் இக்கோயிலை அடையலாம். |
அம்மன் அன்னபூரணி, தலமரம் வில்வம், தீர்த்தம் குசத்தலை ஆறு. பராசரமுனிவர், பார்க்கவமுனிவர் வழிபட்டத்தலம். இக்கோயில் அக்னிமூலையில் மகா சிவராத்திரி அன்று ஜோதி தரிசனம் தெரியும் என்பது செவிவழிச்செய்தி. |
அருள்மிகு விருபாச்சீசுவரர் திருக்கோயில் |
அழிஞ்சிவாக்கம், சென்னை-600 067 |
+91 9445292814 | சென்னை தடா மெயின் ரோட்டிலேயே இக்கோயில் உள்ளது. |
அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் அழிஞ்சில் மரம், தீர்த்தம் சிவ தீர்த்தம், அழிஞ்சில் மரக்காடுகள் நிறைந்திருந்ததால் அழிஞ்சிவாக்கம் எனப்பெயர் பெற்றது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருப்பணி நடைபெற்றுள்ளது. பழைய கோயில் முற்றிலும் அகற்றப்பட்டு புதிய கோயில் திருப்பணி செய்துள்ளனர். |
அருள்மிகு தேவநதீசுவர சுவாமி திருக்கோயில் |
அத்திப்பேடு, சென்னை-600 067 |
+91 9445292814 | அழிஞ்சிவாக்கம் சிவாலயத்தின் எதிரில் அத்திபேடு ஊருக்குள் செல்லும் பாதை வழியே சென்று இத்திருக்கோயில் அடையலாம். |
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வில்வம், இத்திருக்கோயில் கருவறை விமானம் மூன்று தளத்துடன் அழகுடன் கட்டப்பட்டுள்ளது. |
அருள்மிகு வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில் |
3/99 ஈசுவரன்கோயில் தெரு, செம்புலிவரம், சென்னை-67 |
+91 9840633872, 9940315322 | செங்காளம்மன் கோயில் எதிரில் டெலிபோன் எக்சேஜ் வழியே சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது. |
அம்மன் சவுந்தர்ய நாயகி, தலமரம் வில்வம், தீர்த்தம் சிவாக்னி தீர்த்தம், இத்திருக்கோயில் மூன்று நிலை இராஜ கோபுரத்துடன், பதஞ்சலி தியான பீடத்தில் இறைவர் அருள்பாலிக்கிறார். |
|
|