அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை |
வேளச்சேரி முதல் மெயின் ரோடு, கர்ப்ரேசன் பார்க் அருகாமையில் அமைந்துள்ளது. |
|
அருள்மிகு விஜய கணபதி திருக்கோயில் |
அருள்மிகு விஜய கணபதி திருக்கோயில்,
நங்கநல்லூர், சென்னை. |
சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ள உள்ளகரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீவிஜய கணபதி கோயில். |
காஞ்சி மகா பெரியவாளின் அறிவுரைப்படி, சிறு குடிசையில் இருந்த கிழக்குப் பார்த்த விநாயகர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெற்குப் பார்த்த ஸ்ரீவிஜய கணபதியாக அருள்பாலிக்கத் துவங்கினார். 94-ம் வருடம் சாந்தானந்த சுவாமிகள் சொன்னதற்கு இணங்க, அன்று முதல் இன்றளவும் தினமும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது, இங்கே! முருகப்பெருமான் துர்க்கை, ஐயப்ப ஸ்வாமி, திருமால், அனுமன் என அனைத்து தெய்வங்களின் பெயர்களுக்கு முன்னதாக விஜய எனும் திருநாமம் சூட்டியுள்ளனர். ஸ்ரீவிஜய கணபதி எனும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை, ஸ்ரீவிசா கணபதி என்றே அழைக்கின்றனர் பக்தர்கள். கோயில் அமைந்து உள்ள தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர், வெளிநாட்டில் வேலை செய்பவராக இருப்பார். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகத்தை வழங்கக் கூடியவர் என்பதனால் பிள்ளையாருக்கு, விசா கணபதி எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ரத்தினகிரி ஸ்ரீபால முருகனடிமை, மகாதேவ மலை மகானந்த சித்தர், கி.வா.ஜ ஆகியோர், ஸ்ரீவிஜய கணபதியின் பேரருளைச் சிலாகித்துள்ளனர். |
|
|