| 
               | 
                                        | அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் |  | ஈசுவரன் கோயில் தெரு, கவுரிப்பேட்டை, ஆவடி, சென்னை- 54 |  | +91 9382836054 |  | ஆவடி மாநகராட்சி எதிரில் உள்ள தெருவில் முதலிலேயே இக்கோயில் உள்ளது. |  | அம்மன் காசி விசாலாட்சி, தலமரம் வேம்பு.00 ஆண்டு பழமையான இக்கோயிலில் மூலவருக்கு பின்பு ஏகாம்பரநாதர் (காஞ்சி), இம்மையிலும் நன்மை தருவார் (மதுரை). திருமறைக்காடு மணாளர்
(திருமறைக்காடு), திருவேற்காடுநாதர் (திருவேற்காடு), ஒத்தாண்டீசுவரர் (திருமழிசை) போன்று அம்மை அப்பர் திருமண காட்சியை அமைத்துள்ளனர். மகா சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் பக்தர்கள் அனைவரும் பால் அபிஷேகம் செய்யும் வண்ணம் அனுமதிக்கின்றனர். |  
                                        | அருள்மிகு ஆதிகைலாசநாதர் திருக்கோயில் |  | ஜே.பி.எஸ்டேட், ஆவடி, சென்னை- 54 |  | +91 9444159684, 8939454483 |  | ஆவடி - பூந்தமல்லி செல்லும் பாதையில் சற்று உள்ளே இக்கோயில் உள்ளது. |  | அம்மன் மங்களாம்பிகை. |  
                                        | அருள்மிகு சீதநாத் மகாதேவ் திருக்கோயில் |  | 36/23, லட்சுமி நாராயணன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 33. |  | துரைசாமி சாலையிலிருந்து மேற்கு மாம்பலம் செல்லும் சுரங்கபாதை கடந்தவுடன் இரண்டாவது வலது புறம் திரும்பி இக்கோயிலை அடையலாம். |  |  |  
                                        | அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் |  | குளத்து மேடு, கருமாரியம்மன் கோயில் தெரு, மீனம்பாக்கம், சென்னை- 27. |  | மீனம்பாக்கம் மெயின் ரோடிலிருந்து சிறிய தெரு வழியே குடிசைகள் உள்ள கருமாரியம்மன் கோயில் தெருவில் கடைசியில் இத்திருக்கோயில் உள்ளது. |  | அம்மன் விசாலாட்சி, தீர்த்தம் சந்திர குளம். |  
                                        | அருள்மிகு திருமேனி ஈசுவரர் திருக்கோயில் |  | திருமேனி ஈஸ்வரர் கோயில் தெரு, பொழிச்சலூர் சென்னை- 75 |  | +9144 22631582 |  | பொழிச்சலூர் பேருந்து நிலையத்திலிருந்து ராதா கிருஷ்ணன்தெரு வழியே இக்கோயிலை அடையலாம். |  | மூலவர் மிகப்பெரிய உயர்ந்த சிவலிங்க திருமேனி. |  
                                        | அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் |  | ஈஸ்வரன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை- 33 |  | மேட்லி சுரங்கப்பாலம் அடுத்த சங்கர மடம் அருகில் இத்திருக்கோயில் உள்ளது. |  | அம்மன் விசாலாட்சி, தலமரம் வில்வம். மகாபிலம் என்றும் பெயருடைய இவ்வூர் தற்போது மாம்பலம் என மருவி உள்ளது. மகாபிலம் என்றால் வில்வமரக்காடு என்பது பொருள். இவ்வாலய இறைவன் சுயம்பு மூர்த்தியாக வில்வ மரத்தடியில் அருள்பாலித்தார். மகாபிலம் ஏரி இன்று இல்லை. ஏரிக்கரை தெரு என்ற பெயர் மட்டும் உள்ளது. |  
                                        | அருள்மிகு குருலிங்க சுவாமி திருக்கோயில் |  | 10, காரணீஸ்வரர் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை- 15 |  | +91 9840282272 |  | காரணீசுவரர் கோயில் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |  | நர்மதை ஆற்று லிங்கம், குருலிங்க சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. விருத்தாசலத்தில் பிறந்து, சித்த வைத்தியம் செய்து, தனது கையில் லிங்கம் வரவழைத்து சித்து செய்து, காரணீசுவரர் கோயில் திருப்பணி செய்து சிவனடியை சிந்தித்து, சிவனடி சேர்ந்தார். |  
                                        | அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் |  | திரிசூலம், சென்னை- 43 |  | +91 94447 64162, 9176261926 |  | திரிசூலம் இரயில்வே கேட் தாண்டி 1 கி.மீ. ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் மரமல்லி. இங்கு காசி விசுவநாதர், மார்கண்டேசுவரர் என பிற சிவலிங்கங்கள் உள்ளன. கஜபிருஷ்ட விமான அமைப்புடைய இத்திருக்கோயில் பழமை வாய்ந்ததும், நான்கு மலைகள் நடுவில் சதுர் வேதமங்களம் எனப்போற்றப்படுவதும், இரண்டாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மூலவர், மிக பழமையும் அழகும் நிறைந்த சிவலிங்க திருமேனி. பிரம்மன் பூஜித்த தலம். |  
                                        | அருள்மிகு புட்பகிரீசுவரர் திருக்கோயில் |  | பம்மல், சென்னை- 75. |  | +91 98410 95451, 93869 44212 |  | பம்மல் மெயின் ரோட்டில் இரட்டை பிள்ளையார் கோயில் வழியாக செல்லும். தெருவின் கடைசியில் சிறிய மலை மீது இக்கோயில் உள்ளது. |  | அம்மன் புட்பாம்பிகை. 1200 ஆண்டிற்கு முற்பட்ட இத்திருக்கோயில் குலோத்துங்கசோழனால் கட்டப்பட்டது. இத்திருத்தலம் அமைந்துள்ள சிறிய மலை சிவன் மலை என அழைக்கப்படுகிறது. |  
                                        | அருள்மிகு நாகேசுவரர் திருக்கோயில் |  | குன்றத்தூர், சென்னை- 69. |  | +9144 24780436, 9444318582 |  |  |  | அம்மன் காமாட்சி, தல மரம் செண்பகமரம், தீர்த்தம் சூரிய புஷ்பரணி. திருமுறைகளில் பன்னிரெண்டாம் திருமுறையான அறுபத்து மூவர் வரலாறான பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமான். வடநாகேசுவரம் என வழங்கப்படும் இத்திருக்கோயில் வைகாசி பூச நட்சத்திரத்தில் சேக்கிழார் விழாவாக கொண்டாடுகின்றனர். சேக்கிழார் என்பது மரபு பெயர். இவரது இயற்பெயர் அருள்மொழித்தேவர் ஆகும். சென்னையில் நவகோள்கள் இறைவனை வழிபட்ட தலங்களில் இத்திருக்கோயில் இராகு வழிபட்ட தலம். |  |  |