| 
               | 
                                        | அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில் |  | கெருகம்பாக்கம், சென்னை-600 122 |  | +91 9789934698 |  | கெருகம்பாக்கம் ஊருக்குள் இக்கோயில் உள்ளது. குன்றத்தூர்-போரூர் பாதையில் உள்ள ஊர். |  | அம்மன் ஆதிகாமாட்சி அம்பாள். தலமரம் வில்வம். மூலவர் அற்புதமாக ஞானவடிவாக அருள்பாலிக்கிறார். சென்னை நவகிரஹ தலங்களில் கேது வழிபட்ட தலம். |  
                                        | அருள்மிகு சோமநாதேசுவரர் திருக்கோயில் |  | தரப்பாக்கம், சென்னை-600 122 |  | +91 9382182038, 9380760649 |  | கோவூர் சுந்தரேசுவரர் கோயில் செல்லும் தெருவின் எதிரில் அரசினர் மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய தெருவழி 2 கி.மீ ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வில்வம். மூலவர் பெரிய பாணலிங்கத்திருமேனி. |  
                                        | அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |  | தண்டலம், சென்னை-600 122 |  | +9144 24781959 |  | கோவூரிலிருந்து தரப்பாக்கம் செல்லும் வழி வந்து வலது புறம் திரும்பி 2 கி. மீ ல் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் காமாட்சி. |  
                                        | அருள்மிகு அங்கனேசுவரர் திருக்கோயில் |  | மூன்றாம் கட்டளை, சென்னை-600 122 |  | +9144 24781959 |  | கோவூர் அடுத்த மூன்றாம் கட்டளை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எதிர் வழியே செல்ல பிள்ளையார் கோயில் வரும் அதன் எதிர் ரோடு சிவாலயத்தில் வந்து முடியும். |  | அம்மன் சவுந்திராம்பிகை. பழமையான திருக்கோயில், நந்தியம் பெருமான் பழமையான அமைப்பில் அழகுடன் திகழ்கிறார். |  
                                        | அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |  | கோவூர், சென்னை-600 122 |  | +91 9789924095 |  | போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் உள்ளது கோவூர். |  | அம்மன் சவுந்தராம்பிகை, தலமரம் மகா வில்வம் (ஒன்பது, பதினாறு, இருபத்து ஏழு இலைகொண்டது), தீர்த்தம் ஐராவத தீர்த்தம் (சிவகங்கை), இத்திருக்கோயில் ஏழு நிலை இராஜகோபுரத்துடன், கஜபிருஷ்ட (தூங்கனை மாடம்) அமைப்பில் உள்ளது. காமதேனு இறைவனை வழிபட்டமையால் கோவூர் எனப்பட்டது. இந்திரனின் பட்டத்து ஆனை ஜராவதம் திருகுளம் அமைத்து இறைவனை வணங்கியுள்ளது. சென்னை நவகிரஹங்கள் வழிபட்ட தலத்தில் புதன் வழிபட்ட திருத்தலம். |  
                                        | அருள்மிகு அனுமந்தீசுவரர் திருக்கோயில் |  | ஆர்.ஈ.நகர், 6வது தெரு, போரூர், சென்னை-600 166 |  | +91 9940463823 |  | போரூர்- குன்றத்தூர் ரோட்டில் அனுமந்தீஸ்வரர் பெயர் பலகை உள்ளது. மேலும் இராமநாதேசுவரர் திருக்கோயில் அருகில் இக்கோயில் உள்ளது. |  | அம்மன் ஆனந்த வல்லி. |  
                                        | அருள்மிகுஆதிகுபேரலிங்கேசுவரர் திருக்கோயில் |  | காரம்பாக்கம், போரூர், சென்னை- 600 116 |  | +91 9551035933, 9551035904 |  |  |  | அம்மன் அகிலாண்டேசுவரி. மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். |  
                                        | அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் |  | இராமசந்திர மருத்துவமனை, போரூர், சென்னை- 116. |  | இராமசந்திரா மருத்துவமனையின் உள்ளே இக்கோயில் உள்ளது. |  | அம்மன் தையல்நாயகி. |  
                                        | அருள்மிகு கவுரி ஜம்புலிங்கேசுவரர் திருக்கோயில் |  | சிவன்கோயில் தெரு, சீனிவாசபுரம், ஐயப்பன்தாங்கல், சென்னை- 12. |  | +91 7299833680 |  | ஐயப்பன் தாங்கலிலிருந்து பரணிபுத்தூர் செல்லும் வழியில் 1/2 கி.மீ. |  |  |  
                                        | அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |  | சென்னீர்குப்பம், சென்னை- 600 056 |  | +91 9444588824 |  | கரையான் சாவடியிலிருந்து ஆவடி செல்லும் வழியில் சென்னீர்குப்பம் என கேட்டு செல்வ விநாயகர் கோயில் எதிர்தெரு வழியே சென்று இக்கோயிலை அடையலாம். |  | அம்மன் மரகதம்பாள், தல மரம் வில்வமரம். இறைவனை இரும்பு கதவின் வழியே எப்போதும் பார்க்கலாம். |  |  |