அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பொன்னாங்கிபுரம், சென்னை |
|
|
அருள்மிகு பிரசன்ன வெங்கட சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
தரமணி-600 041, சென்னை |
|
|
அருள்மிகு பாலசுப்ரணமியசுவாமி திருக்கோயில் |
எல்டாம்ஸ் ரோடு, சென்னை |
+91-44-2435 1892 | |
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
என்.எஸ்.சி.போஸ் ரோடு, சென்னை |
+91 44 2538 5026 | |
|
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
என்.எஸ்.சி.போஸ் சாலை, சென்னை |
+91 44 2538 5026 | |
|
அருள்மிகு வேங்கட சுப்ரமண்யன் சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு வேங்கட சுப்ரமண்யன் சுவாமி திருக்கோயில்,
வளசரவாக்கம்,
சென்னை. |
சென்னை வளசரவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் வேங்கட சுப்ரமண்ய நகரில் உள்ளது. |
கையில அக்கமாலையும், கெண்டியும் தாங்கின ஆறடி உயர பிரமாண்டமான சிலை கிடைச்சதும், சங்கு சக்கரம் தாங்கின பெருமாள்னு நினைச்சிருக்காங்க எல்லோரும் அதுக்கு இன்னும் கொஞ்சம் வலுசேர்க்கற மாதிரி முருகனோட மற்ற இருகரங்களும் பெருமாள் சிலைகள்ல இருக்கற அமைப்பு மாதிரி ஒரு கரம் வாத முத்திரையோடயும், இன்னொண்ணு ஊரு ஹஸ்தமா அதாவது தொடைமேல வைச்ச பாவனையிலயும் இருந்திருக்கு. எந்த சாமி சிலைன்னு தெரியாம குழம்பினவங்க, அந்த சமயத்துல இந்தப் பகுதிக்கு விஜயம் பண்ணியிருந்த பரமாசார்யார்கிட்டே போய்ச் சொல்லியிருக்காங்க. சிலையோட அமைப்பு உள்பட எல்லா விஷயங்களையும் கேட்ட பரமாசார்யார், இது முருகப் பெருமானோட சிலை. அவரோட பிரம்ம ஸ்கந்த ரூபம் இது. அதோட விஷ்ணு அம்சமா வரத, ஊரு ஹஸ்தம் இருக்கறதால வேங்கடசுப்ரமணியன்னு திருநாமம் வைச்சு வணங்குங்க! ன்னு சொல்லியிருக்கார். இவரோட கால்ல ஆறுவிரல்கள் இருக்கறது ஆறுமுகங்களைக் குறிக்கறதாகவும் சொல்லப்படுது! இப்படிப்பட்ட அமைப்புனால இவருக்கு முருகன், பெருமாள், பிரம்மான்னு மூணுபேருக்கும் உள்ள மந்திரங்கள் சொல்லி ஆராதனை நடத்தப்படுது. இவரைக் கும்பிட்டா மூணுமடங்கு பலன் கிடைக்கறதா பலனடைஞ்சவங்க சொல்றாங்க! சந்தோஷிமாதா, விஸ்வேஸ்வரர் சன்னதிகளும் இங்கே இருக்கும். மாதாமாதம் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி தினங்கள், வருஷாவருஷம் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் நாட்கள்ல சிறப்பு பூஜை ஆராதனைகள் இங்கே நடக்குது. செவ்வாய்க்கிழமைகள்ல வேங்கடசுப்ரமணியனுக்கு எலுமிச்சை மாலை சாத்தி வேண்டிக்கிட்டா, வேண்டிய தெல்லாம் கிடைக்கும். வழக்குகள் பைசலாகும், நோய்கள் நீங்கும், பூமி சம்பந்தமான பிரச்னைகள் தீர்வாகும். |
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் |
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,
(பாலமுருகன்),
எல்டாம்ஸ் சாலை,தேனாம்பேட்டை, சென்னை-600018. |
+91 44-24351892, 9841631262 | சென்னை மவுண்ட்ரோடு பட்டர்பிளை சிக்னலில் சென்றால் தேனாம்பேட்டை பகுதியில் <உள்ள எல்டாம்ஸ் சாலை வரும். வாகனத்தில் வருபவர்கள் அதற்கு முன் உள்ள ஜயம்மாள் சாலையில் திரும்பி வர வேண்டும். எல்டாம்ஸ் சாலை ஓன் வே. |
இத்தலத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். முருகனுக்குத் தனி கொடி மரம் உள்ளது. இதர சன்னிதிகளும் உள்ளன. 5 நிலை ராஜ கோபுரம் கொண்ட பிரசித்தமான கோயில். கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். இராமலிங்கேஸ்வரர் என்கிற பெயர் உள்ளதால் இராமாயணத்தோடு தொடர்புடைய தலமாக இருந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. முற்காலத்தில் இராமலிங்கேஸ்வரர் --- பர்வதவர்த்தினி கோயிலாக விளங்கியது. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை |
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி (குமரன்குன்று) திருக்கோயில் |
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி (குமரன்குன்று) திருக்கோயில்,
குரோம்பேட்டை, சென்னை 600044. |
+91 44-22235319, 04254-288206, 9380510587 | குரோம்பேட்டையில் உள்ளது. குரோம்பேட்டை சென்னை தாம்பரம் நெடுஞ்சாலையில் பல்லாவரம் தாண்டியவுடன் வரும். மேட்டுப்பாளையத்தி<லும் (கோவை மாவட்டம்) குமரன் குன்று என்னுமிடத்தில் கல்யாண சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. |
இத்தலத்தில் வடக்கு பார்த்த ஐஸ்வர்ய முருகன் பால தண்டாயுதபாணியாக உள்ளார். மேலே குமரதீர்த்தம் நீரூற்று உள்ளது. யானை வாகனம். உற்சவர் தேவியர் இருவருடன் உள்ளார். ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் விசேஷம். வடக்கு பார்த்து விளங்குவதால் ஐஸ்வர்யத்தைத் தருவதாக ஐதீகம். காஞ்சிப் பெரியவர் ஒரு காலத்தில் இக்குன்றின் மீது முருகன் கோயில் வரும் எனக் கூறினார். பின்னர் அங்கே வேல் கண்டெடுக்கப்பட்டு பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. வழியில் சித்தி விநாயகர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஜெயமங்களத்தம்மா காளி ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம். |
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 11மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
43, வாத்தியார் சுப்பராயர் தெரு,
சைதாப்பேட்டை, சென்னை 600015 |
+91 44- 23812546 | சைதை காரணீஸ்வரர் கோயிலு<<க்கு அருகே உள்ளது. இந்தக் கோயிலை மேற்கு சைதாப்பேட்டை கோடம்பாக்கம் சாலையிலும் வந்து அடையலாம். மவுண்ட் ரோடிலிருந்தும் மேட்லி சப்வே மூலமாக வரலாம். நுங்கம்பாக்கம் 42, ராமா தெருவிலும் சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. |
இத்தலத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். செங்குந்தர் வகுப்பைச் சேர்ந்தவர்களால் அமைக்கப்பட்டதால் செங்குந்தர் கோட்டம் என்கிற பெயரும் உண்டு, 5 நிலை ராஜ கோபுரம் கொண்டநகரக் கோயிலிது. பாம்பன் சுவாமிகள், கடம்பன், இடும்பன், அருணகிரிநாதர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், இராமலிங்க அடிகள் சிலைகளும் உள்ளன. |
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 9மணி வரை |
அருள்மிகு திருமால் முருகன் திருக்கோயில் |
அருள்மிகு திருமால் முருகன் திருக்கோயில்,
கன்னிகா காலனி,
நங்கநல்லூர், பழவந்தாங்கல், சென்னை 600061. |
சென்னை நங்கநல்லூர் கன்னிகா காலனி பகுதியில் உள்ளது. |
இத்தலத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் மாலும் மருகனும் இணைந்து அருள் பாலிக்கும் தலம். ஸ்ரீதேவி பூதேவியுடன் மகாவிஷ்ணுவும், வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள் பாலிக்கின்றனர். ஆடிப்பூரம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி உற்சவம், வைகாசி விசாகம் ஆகியவற்றின் போது விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. 1983ல் ஸ்தாபிதம் ஆனது. 23.05.2013ல் கும்பாபிஷேகம் ஆனது. |
பூஜை நேரம்: காலை 8.00 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை |
|
|