அருள்மிகு தீனேஸ்வரர் திருக்கோயில் |
வெள்ளலூர்
கோயம்புத்தூர் மாவட்டம் |
கோயம்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ. |
25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அலங்கநாச்சியம்மன், அருகில் வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. |
அருள்மிகு பரமேஸ்வரர் திருக்கோயில் |
குனியமுத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம் |
கோயம்புத்தூரிலிருந்து தென்மேற்கே 8 கி.மீ. இராமசெட்டிபாளையம். |
இக்கோயில் 66 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அறம்வளர்த்த நாயகி. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
செட்டிபாளையம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
கோயம்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 22 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி, நல்ல விநாயகர். |
அருள்மிகு புத்திர கொண்டீஸ்வரர் திருக்கோயில் |
ஒத்தகால் மண்டபம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
கோயம்புத்தூரிலிருந்து தெற்கே 23 கி.மீ. |
30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் |
சேவூர், அவிநாசி வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
அவிநாசியிலிருந்து வடக்கே 8 கி.மீ. மாட்டூர். கபாலீச்சுரம். இக்கோயில் 1-42 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
இங்குள்ள மூலவர் திருவாலீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கியும், அம்மன் அறம் வளர்த்தநாயகி தனிச் சன்னிதியிலும் காட்சியளிக்கின்றனர். தீர்த்தம் பாதாளகங்கை, கருட, அமிர்த, வாலி தீர்த்தங்கள். இக்கோயில் முழுவதும் கற்றளியால் ஆனது, இராமாயணத்தில் வரும் வாலி வழிபட்ட கோயிலாகும். வாலி வழிபட்டதை உணர்த்தும் சிற்பம் கருங்கற் கொடிமரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நடராஜர் திருவுருவம் தொன்மையும், அழகும் வாய்ந்தது.
இத்தலம் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் மாட்டூர் அறவா மறவாது உன்னைப் பாடப்பணியாயே எனப் போற்றப்படும் இத்தலம் சேவூர் என வழங்கப்படுகிறது. கல்வெட்டுக்களில் இக்கோயிலை கபாலீச்சுரம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் 2-07 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள கல்யாணவெங்கடேசர் கோயிலும், மாரியம்மன், அளங்கநாச்சியம்மன், கோட்டை அனுமந்தராய கோயிலும் இங்கு உள்ளன. |
அருள்மிகு கங்காதரஈசுவரர் திருக்கோயில் |
கருவலூர், அவிநாசி வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
அவிநாசிக்கு மேற்கே 10 கி.மீ. இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
மூலவர் கங்காதரஈசுவரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். மாரியம்மன் தனிக்கோயிலாக 1 ஏக்கர் நிலப்பரப்பளவில் நிற்கின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். கி.மு. 3000 வருடத்துக்கு முற்பட்ட கோயில். கொங்கு நாட்டில் பண்ணாரிக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற திருக்கோயில், இக்கோயில் தீர்த்தத்தை கண்களில் விட்டு வந்தால் தீராத கண்நோய் தீர்கிறது. கண்நோய் கண்டவர்கள் இங்கு தங்கி நலம் பெறுகின்றனர். கொங்குச் சோழர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. பண்ணாரிக் குண்டம் முடிந்த மூன்றாம் நாள் இக்கோயில் திருத்தேர், மேலும் இவ்வூரில் கருணாகரவெங்கட்ரமணசுவாமி கோயிலும், வேணுகோபால பெருமாள் கோயிலும், அனுமந்தராயர் கோயில்களும் இங்கு உள்ளன. |
அருள்மிகு மாதீஸ்வரர் திருக்கோயில் |
குத்தகம், அவிநாசி வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
சேவூர்க்கு வடக்கே 10 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் |
கஞ்சபள்ளி, அவிநாசி வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
அன்னூர்கு கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் |
நடுவாச்சேரி, அவிநாசி வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
அவிநாசிக்கு வடக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
பாலங்கரை, அவிநாசி வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
அவிநாசிக்கு கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|