அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில் |
இரும்பொறை, மேட்டுப்பாளையம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
மேட்டுப்பாளையத்திலிருந்து கிழக்கே 23 கி.மீ. |
10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இம்மலையின் உச்சிக்கு செல்ல 180 படிகள் தாண்டி சென்றால் மலைமீது முருகப்பெருமான் குமார சுப்பிரமணியன் என்றபெயரில் ஐந்து திருமுகங்களும் எட்டுத் திருக்கரங்களும் கொண்டு தனிமுருகனாக எழுந்தருளியுள்ளார்.
இரும்பொறை என்பது பிரமனை அடைத்து இரும்பு அறை என்று கூறுகின்றனர். மலையடிவாரத்தில் போகர் யாககுண்டம் உள்ளது, போகருக்கு வழியனுப்ப ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு ஆறுமுகன் மலையிலிருந்து இரங்கி வந்ததாகவும் எஞ்சிய ஐந்து முகங்களும், எட்டுக்கரங்களும் கொண்டு மலையில் விளங்குகின்றனர்.
முருகப்பெருமானின் தலைகளின் பின்னே ஒளிவட்டமும், பீடத்தில் மயிலும் உள்ளது. அருணகிரிநாதர் இத்தலபெருமானுக்கு திருப்புகழ் அருளியுள்ளார். நான்கு கால பூஜை. தைப்பூசம் உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு வைத்தீஸ்வரர் திருக்கோயில் |
சூளூர், பல்லடம் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
பல்லடத்திலிருந்து மேற்கே 18 கி.மீ. |
நொய்யல் ஆற்றின் கரையில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் உள்ளது. அம்மன் மாரியம்மன். மேலும் இவ்வூரில் திருவேங்கடநாத பெருமாள் திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் |
மேற்குப்பட்டு, பல்லடம் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் |
திருப்பூர்க்கு வடக்கே 18 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
கல்லம்பாளையம், மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
மேட்டுப்பாளையத்திலிருந்து தென்மேற்கே 18 கி.மீ. |
பெரியபள்ளம் ஆற்றின் கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வடகிழக்கேயுள்ள குருந்த மலையில் குழந்தை வேலாயுதப்பெருமான் என்னும் பெயரில் முருகப் பெருமான் காட்சியளிக்கின்றார். இயற்கை எழிலில் அமைந்துள்ள ஆலயம். மேலும் இவ்வூருக்கு அருகில் உள்ள தேக்கம்பட்டியில் பவானியாற்றின் கரையில் அருள்மிகு வனபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர். காளிசக்கரம் பதித்த தாயத்தை அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டு பின் நாம் அணிந்தால் எண்ணியதெல்லாம் எளிதில் கை கூடுகிறது. ஆடி அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
செஞ்சேரிமலை, பல்லடம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
பல்லடத்திலிருந்து தென்மேற்கே 20 கி.மீ. |
தென்சேரிகிரி, மந்திரகிரி கடல்மட்டத்திலிருந்து 1356 அடி, மலை 150 அடி <உயரம், 250 படிகள் கடந்த பின்பு கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் பெரியநாயகியம்மன். தலமரம் கருநொச்சி, தீர்த்தம் ஞானதீர்த்தம் ஆலயத்திற்கு வடக்கேயுள்ளது. உள்பிரகாரத்தில் சந்தன விநாயகர், ஆறுமுகர், திருமால், நடராஜர், துர்க்கை. இடும்பன் முதலிய சன்னிதிகள் உள்ளன. அகத்தியர் வழிபட்ட தலம். இத்தலத்தி<லுள்ள முருகப் பெருமான் மந்திராசல வேலாயுத மூர்த்தி.
திருப்பரங்குன்றத்தில் மணம் முடித்து திரும்பும் வழியில் முருகப்பெருமான் இம்மலையில் தங்கியதாக ஐதீகம். சூரபத்மனது மாயங்களை அழிக்கும் மந்திரங்களை முருகப்பெருமான் தன் தந்தையிடம் இத்தலத்தில் பெற்றதானால் மந்திரகிரி என அழைக்கப்படும் தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ள தலம். செஞ்சேரிகிரி தலபுராணம் அம்மையப்பர் என்பவரால் 255 செய்யுட்களாக இயற்றியுள்ளார். பேய், பிசாசுப சூனியம், பித்தம், மனநோய், உடற்பிணி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு நிவாரணம் அடைகிறார்கள். நான்கு கால பூஜை நடைபெறுகிறது தைமாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் |
தெற்கு அவிநாசிபாளையம்
பல்லடம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் |
பல்லடத்திலிருந்து கிழக்கே 16 கி.மீ. |
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் விண்ணலந்தபெரியபெருமாள் திருக்கோயிலும் உள்ளது. |
அருள்மிகு பிரசன்ன ஈஸ்வரசுவாமி திருக்கோயில் |
வடவாம்பட்டி, பல்லடம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
செஞ்சேரிமலைக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகியம்மன் மற்றும் கரிவரதராஜ பெருமாள். |
அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில் |
நல்லூர், பல்லடம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
திருப்பூர்க்கு கிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் நொய்யல் ஆற்றின் தென்கரையில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் வீரராகவப் பெருமாள் செல்லாண்டியம்மன், மகாளியம்மன் முதலிய திருக்கோயில்களும் உள்ளன. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
அழகுமலை, பல்லடம் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் |
பல்லடத்திலிருந்து கிழக்கே 21 கி.மீ. |
கடல்மட்டத்திற்கு மேல் 1359 அடி. 300 படிகள் கொண்ட இம்மலையில் உ<ள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் வலுப்பூரம்மன். மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கிழக்கு நோக்கி தேவியார் இருவருடன் காட்சி யளிக்கிறார். திருப்புகழ் வைப்புத்தலங்களில் ஒன்றாகும். இங்கேயுள்ள வலுப்பூரம்மன கோவில் வலிப்பு நோய் தீர்க்கும் பிரார்த்தனை தலம். சேவார்த்திகள் இங்கு தங்கி தரிசித்துச் செல்கின்றனர். மேலும் இவ்வூரில் மாரியம்மன், அலகாபுரியம்மன், தியாகராஜர் திருக்கோயிலும் உள்ளன. |
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம் |
கோயம்புத்தூரிலிருந்து தெற்கே 40 கி.மீ. |
இறைச்சில் பொழில் வாய்ச்சி, முடிகொண்ட சோழநல்லூர், திருவகத்தீசுவரமுடையார் கோயில் என பல பெயர்களில் வழங்கப்படுகிறது. அம்மன் மீனாட்சி. பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். இக்கோயில் தற்போது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகின்றனர்.
சிவபிரான் சன்னதிக்கு நேர் எதிரில் மேல் விதானத்தில் 12 இராசிகள் கொண்ட சதுர அமைப்பு <உள்ளது. ஒரே கல்லில் யாளியும் அதன் வாயினினறு 3 வளையங்கள் ஒன்றில் ஒன்றாகப் இணைத்துத் தொங்குவதும் கலைச்சிணப்பு கொண்டதாகும். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மிகப் பழமையானதாகும் கல்வெட்டுக்கள் உள்ளன. |
|
|