அருள்மிகு அளேசீபம் வரதராஜ சாமி திருக்கோயில் |
அயர்னபள்ளி,தருமபுரி மாவட்டம் |
|
|
அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில்
கோவிலூர்,
தருமபுரி. |
விஷ்ணு கோயில்களில் பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால், தருமபுரி மாவட்டம் கோவிலூர் சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மூலவர் அருகிலேயே பைரவர் குடி கொண்டுள்ளார் |
இத்தலத்தில் சிவன் சன்னிதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் வீரவாளை கையில் வைத்திருப்பதால் இவர், வீர ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். மேலும் ராமானுஜர், விஷ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் அன்னை உறைந்த இடம் ருத்ரபூமி என தேவபிரசன்னத்தில் கண்டதால் சிவலிங்க பிரதிஷ்டையும் இங்கு செய்யப்பட்டுள்ளது. உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவியும் காட்சி தருகின்றனர். சென்னகேசவப் பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்வது எங்குமில்லாத சிறப்பு. |
அருள்மிகு வேட்டையாடியபிரான்(பேடராய ஸ்வாமி) தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு வேட்டையாடிய பிரான் (பேடராய ஸ்வாமி) தேவஸ்தானம் திருக்கோயில்,
டெங்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை வட்டம்,
தருமபுரி மாவட்டம் 631507.
|
+91 9965374363. | ஓசூர் அருகே உள்ளது. |
பிரமனின் சிருஷ்டியில் உருவான ஈரேழு உலகம் போலவே குபேரனையும் படைத்தார். குபேரனின் தாய் வழிப்பாட்டனாரின் சகோதரனாகிய பார்ஸ்வகர்ணனின் மகன் மகார்ணவன் பிரமனிடம் பெரும் தவம் புரிந்து பூவுலகிலும் வானுலகிலும் தன்னை யாரும் வெல்ல முடியாத வரம் பெற்றான். தேவர்களைத் துன்புறுத்தினான். அதனால் தேவகண்டன் என்கிற பெயரும் பெற்றான். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் புலி உருவம் கொண்டு தவத்திலிருந்த அத்திரி முனிவருக்கு இன்னல் செய்யவே அவனை அதே புலி உருவில் திரியுமாறு சாபமிட்டார். அவனது கடைசி காலத்தில் பரந்தாமன் இவனது தலையைப் பிளந்து பின் சாபத்திலிருந்து விமோசனம் பெறுவான் எனவும் பணித்தார். செறுக்குற்ற அவன் இவ்வாறு மேலும் மேலும் தவறுகள் செய்து துன்புறுத்த பெருமாள் டெங்கிணி என்னும் ஆயுதம் கொண்டு கண்வ மகரிஷியின் ஆசிரமத்தில் உபய நாச்சியாருடன் வேட உருக் கொண்டு தோன்றினார். அவரது வில் நாணின் சத்தம் கேட்டு மோத வந்த புலி உருவ வில் நாணின் சத்தம் கேட்டு மோத வந்த புலி உருவ மகார்ணவனின் தலையைப் பிளந்தார் நாராயணர், தேவகண்டனை வேட்டையாடி வென்ற இடத்திலேயே வேட்டையாடியபிரானாக அருள் பாலிக்கவும் இசைத்தார். தேன்கனி என்கிற வார்த்தையும் இந்த டெங்கினி சொல்லின் திரிபாகத் தான் இருக்க வேண்டும். இத்தல வரலாற்றை எத்தனை பேருக்குச் சொல்கிறோமோ அத்தனை மடங்கு செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. கஜினி முகமது படையெடுப்பின் போது காடுகளில் ஒளித்து வைக்கப்பட்ட இப்பெருமாள் கோயிலை கர்நாடக மாநில மாண்டியா மாவட்டத்திலிருந்து வந்த இணன்யாசாரியார் வம்சாவளியினர் (வெங்கடபதிதாஸ்) கோயில் திருப்பணி செய்து தற்போது தர்ம கர்த்தாவாக உள்ளனர். கண்வர் மற்றும் அத்திரிக்குச் சன்னிதிகள் உள்ளன. இலந்தை (பத்ரி) தல விருக்ஷம். வேட்டையாடிய பிரான் (பேடராய ஸ்வாமி) ஸ்ரீதேவி பூதேவி, பேடராய ஸ்வாமி, சவுந்தர்யவல்லி நாச்சியார் நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். |
பூஜை நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை |
|
|