அருள்மிகு துவராபுரியம்மன் திருக்கோயில் |
கச்சிராயன்பட்டி , திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு பட்டத்தரசியம்மன் திருக்கோயில் |
பள்ளபட்டி , திண்டுக்கல் மாவட்டம் |
|
|
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில் |
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில்,
திண்டுக்கல் மாவட்டம். |
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது நாகல் நகர். |
இங்கே, அழகுற கோயில் கொண்டு, கருணையுடன் அருள்மழை பொழிகிறாள் புவனமாதா.நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புவனேஸ்வரியம்மனைத் தரிசிக்க நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள். |
அருள்மிகு தொட்டிச்சி அம்மன் திருக்கோயில் |
அருள்மிகு தொட்டிச்சி அம்மன் திருக்கோயில்
பழநி கிரிவலம் ரோடு
பழநி |
பழநி மலையின் கிரிவலப் பாதையில் உள்ளது புலிப்பாணி ஆஸ்ரமம். |
கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, பிரார்த்தித்துச் செல்கின்றனர். கல்விக்கும் கலைக்கும் அடையாளமாக தன் வலது கரத்தில் தாமரை மலரையும், பில்லி, ஏவல், சூனியம் முதலானவற்றில் இருந்து விடுபட்டு வாழ்வில் நிம்மதி பெறுவதன் அடையாளமாக இடது கரத்தில் மந்திர சக்தி கொண்டை ஓலைச் சுவடிகளையும் வைத்தபடி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் தொட்டிச்சி அம்மன். |
அருள்மிகு ராஜகாளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ராஜகாளியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
தெத்துப்பட்டி,
ரெட்டியார் சத்திரம் வட்டம்,
கன்னிவாடி போஸ்ட் 624705
திண்டுக்கல் மாவட்டம். |
+91 451-2555555 | ஒட்டன் சத்திரத்திலிருந்து 20கிமீ. ஒட்டன்சத்திரம் மதுரை சாலையில் உள்ளது. கன்னிவாடி சாலையில் திண்டுக்கல்லிருந்து 25 கிமீ. |
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மலைபடுகடாம் புத்தகத்தில் வராககிரி என்றும் ஹரிகேசவ பர்வதம் என்றும் அழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில் கன்னிவாடி என்றும் பன்றிமலை என்றும் வழங்கப்பட்டன. மதுரையம்பதியினை கண்ணகி எரிக்க செய்வதறியாது திகைத்தாள் கண்ணகி. அப்போது காளி அவள் முன் தோன்றி முன்வினையே காரணம் இந்த அழிவிற்கெல்லாம் எனக் கூறி பாண்டியனின் செங்கோலை எடுக்க அரண்மைனைக்குள் நுழைந்தாள். செய்வதறியாது திகைத்த மன்னன் மீனாட்சி சொக்கநாதரை அழைக்க சொக்கநாதர் காளி செய்தது தவறு என்றும் மதுரை நாட்டையும் பாண்டியன் ஆட்சியினையும் காக்க வேண்டிய தாய் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்க, காளி இதற்கெல்லாம் விதியே காரணம் என்றாள். பாண்டிய மன்னனும் அவன் செய்த பழியால் பல ஜென்மங்கள் எடுத்து முடிவில் காளி கோயிலும் கட்டுவான் என்று வரமளித்தார். அது வரை காளி வடக்குப் பகுதியில் போக சித்தர் தவமிருந்த இடத்தில் கோயிலின்றி இருப்பாள் என்று சாபம் பெற்றாள். பிற்காலத்தில் இங்கு ராஜ காளியம்மன் ஆலயம் எழுந்தது. பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட நவக்கிரக விக்கிரகங்கள், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உருவம் ஆகியவை உள்ளன. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை. |
|
|