அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
குன்னுவரங்கோட்டை
நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் |
வத்தலகுண்டுலிருந்து தெற்கே 8 கி.மீ. |
வைகையாற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் |
இராமராஜபுரம்
நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் |
நிலக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ. |
வைகையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
மண்ணாடிமங்கலம்
நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் |
சோழவந்தானிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
இரும்பாடி, நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம் |
சோழவந்தானிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. |
வைகையாற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மூலநாதர் திருக்கோயில் |
தென்கரை, நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம் |
சோழவந்தானிலிருந்து மேற்கே 2 கி.மீ. |
வைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 2-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அகிலாண்டேஸ்வரி. தீர்த்தம் சுவர்ணபுஷ்கரிணி, வீரபாண்டிய மன்னனுக்கு இருந்த தொழுநோயைக் இத்தலத்தில் போக்கியருளியதால் இம்மன்னன் கோயிலை விரிவு படுத்தி கட்டுவித்ததாக தல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இரண்டு கால பூஜை. வைகாசி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
பெரியகோட்டை, பழனி வட்டம்
திண்டுக்கல் மாவட்டம் |
பழனியிலிருந்து வடகிழக்கே 20 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
மண்ணூர்
பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
பழனியிலிருந்து வடமேற்கே 7 கி.மீ. |
சண்முகநதிக்கரையில் இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கோதஈஸ்வரர் திருக்கோயில் |
கோதைமங்கலம்
பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
பழனியிலிருந்து வடக்கே 5 கி.மீ. |
சண்முகநதிக்கரையில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. பழனியைச் சுற்றியுள்ள எட்டு மங்கலங்களுள் இத்தலம் முதலாவது. பழனி தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தி இவ்வூருக்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. |
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
பாலசமுத்திரம்
பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் |
பழனியிலிருந்து தெற்கே 5 கி.மீ. |
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூரை வாலசமுத்திரம் என்றும் குறிப்பிடுவர். இவ்வூரில் உள்ள அகோபில வரதராஜப் பெருமாள் 48 செண்ட் நிலப்பரப்பளவில் உள்ளது. இவ்வூர் துப்பட்டி நெசவுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது. |
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்டம் |
திண்டுக்கல்லிருந்து வடக்கே 19 கி.மீ. |
குடகனாற்றின் கரையில் இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சியம்மை. அருகில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் நரசிங்கப் பெருமாள் கோயிலும் உள்ளது. இவ்வூர் வேடர்களின் சந்தை இவ்விடத்தில் கூடிய காரணத்தால் வேடசந்தையூர், வேடசந்தூர் எனத்திரிந்து விளங்குகிறது. |
|
|