| 
               | 
                                        | அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |  | வெங்கம்பூர், ஈரோடு |  | +91 -4204-222 475 |  |  |  |  |  
                                        | அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |  | கொடுமுடி
ஈரோடு மாவட்டம் |  | +91 4204 222 475 |  |  |  |  |  
                                        | அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் |  | அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் 
பெரிய வடமலைப் பாளையம் 
பவானி
ஈரோடு |  | பவானி வட்டம், ஜம்பை தளவாய்பேட்டை அருகே அமைந்துள்ளது. பெரிய வடமலைப் பாளையம் லக்ஷ்மி நாராயனர் ஆலயம். |  | முற்காலத்தில் இப்பகுதியிலுள்ள மக்கள் கூட்டங்கூட்டமாகக் கட்டுசோறு கட்டிக் கொண்டு திருப்பதிக்கு நடந்தே சென்று வருவது வழக்கமாக இருந்தது. அதைகண்ட பெரியவடமலை. சின்னவடமலை சகோதரர்கள் பெருமாளின் கோவில் ஒன்றைக் கட்டியதாக தலவராறு. ஆவணி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பட்டர்கள் இங்கு வந்து தங்கி லக்ஷ்மிநாராயணப் பெருமாளை நன்கு அலங்கரித்து ஒருநாள் முழுவதும் ஆராதனை செய்துவிட்டுச் செல்வது இப்போதும் நடைபெறுகிறது. |  
                                        | அருள்மிகு நாராயணபெருமாள் திருக்கோயில் |  | அருள்மிகு நாராயணபெருமாள் திருக்கோயில் 
கொடுமுடி 
ஈரோடு |  | 0424 222375 |  | கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்குள் நாராயணப்பெருமாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். |  | - |  
                                        | அருள்மிகு மாலோல நரசிம்மர் திருக்கோயில் |  | அருள்மிகு மாலோல நரசிம்மர் திருக்கோயில்,
கோனார்பாளையம், ஈரோடு. |  | +9194883 76918/ 99407 49703 |  | ஈரோட்டிலிருந்து பவானி, அம்மாப்பேட்டை வழியாக குருவரெட்டியூர். அங்கிருந்து கோனார்பாளையம் 3 கி.மீ. ஆட்டோ வசதி உண்டு. |  | நரசிம்மருக்கான கோலங்கள் பல. ஜ்வாலா, அகோபில, மாலோல, காரஞ்ச, வராக, சத்ரவட, யோகானந்த, பார்கவ, பாவன என ஒன்பது கோலங்களை அகோபிலத்தில் காணலாம். அதனாலேயே நவ நரசிம்ம நகரம் என்றும் அதற்குப் பேருண்டு. இந்தக் கோலங்களில் மாலோலன் எனப்படுகின்ற லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோலம் அற்புதமானது. தம் மடியில் இடதுபுறம் அமிர்தவல்லித் தாயாரை இருத்தி அணைத்தவராக, வலக்கரத்தில் அபயம் நல்குபவராக, மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் தாங்கியவராக எம்பெருமான் அருள்கின்ற அமர்ந்த திருக்கோலம் இது. மூலஸ்தானத்தில் பொன்னிறமாகத் தக தக வென மின்னிக் கொண்டிருக்கும். நரசிம்மனை நேரடியாகத் தரிசிக்கலாம். காலையில் சூரிய ஒளி கருப்பணசுவாமி மீதும், மாலையில் மாலோல நரசிம்மர் மீதும் தவழ்வது தனிச்சிறப்பு. சொர்ணலெட்சுமி நரசிம்மர் கோயிலின் தென்பாகத்தில் வடதிசை நோக்கி வீற்றிருக்கிறார். ஸ்ரீராமானுஜர். பிரதி மாதம் திருவாதிரையன்று இவருக்குப் பாலாபிஷேகம் நடக்கிறது. வடபுறத்தில் தனிச் சன்னிதியில் ஒரே கல்லில் முன்புறம் சக்கரத்தாழ்வார், பின்புறம் யோக நரசிம்மர் அமைந்துள்ளன. |  
                                        | அருள்மிகு அழகுராயப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |  | அருள்மிகு அழகுராயப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
இருகாலூர்,
கோபிசெட்டிப்பாளையம் வட்டம்,
ஈரோடு மாவட்டம் 638462. |  | + 91 9843062902. |  | அவிநாசி கோபி பாதையில் உள்ள சேவூர் தேவார வைப்புத்தலப் பாதையில் உள்ள நம்பியூருக்கு மேற்கே 5 கிமீலும் புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்த 15 கிமீ கிழக்கு உள்ளது. |  | கரிகாலன் காலத்தில் ஆரையநாடு என்று கூறப்பட்ட பகுதியில் வடக்கே அமைந்த தலம். சீதையைப் தேடி வந்த இராம லக்ஷ்மணர்களில் இராமபிரானின் இரு கால்கள் பட்டதால் இப்பெயர் பெற்றது என்றும். இரு கால்வாய்கள் ஓடுவதால் பெயர்க் காரணமும் இருகாள் என்கிற ஊழிக்காற்றால் ஊர் அழிந்ததால் இப்பெயர் கொண்டது என்றும் 3 குறிப்புகள் கூறப்படுகின்றன. 14ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் ஸ்ரீரங்கம் செல்லும் போது அவருக்கு காலில் ஏற்பட்ட சரும் நோய் தல விருக்ஷமான் பூவரசமரத்தின் பூவும் இந்தத் தலத்தின் மண்ணையும் கலந்து அரைத்துப்பூச விரைந்து நிவர்த்தி அடைந்ததால் அமைச்சர் மாதவைய்யாவின் மூலம் உற்சவரும் உண்டேபள்ளி என்கிற ஊரைச் சேர்ந்த அர்ச்சகரும் தந்து, நித்ய பூஜைக்குரிய ஏற்பாடுகளையும் செய்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது. இவர்கள் வம்சாவளியினர் இராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் என்றும் அறியப்படுகிறது. மைசூர் மகாராஜ கிருஷ்ணராஜ உடையார் திருச்செங்கோடு தலத்தை தரிசிக்கச் செல்லும் போது இத்தலத்தில் வழிபட்டு பின் காரமடைக்குச் சென்றதாக வரலாறு உள்ளது. விசேஷ அமைப்புள்ள ஆஞ்சநேயர் வடக்கு பார்த்து உள்ளார். அழகுராயப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். |  
                                        | அருள்மிகு வேணுகோபாலசுவாமி (பெரிய கோயில்) திருக்கோயில் |  | அருள்மிகு வேணுகோபாலசுவாமி (பெரிய கோயில்) திருக்கோயில்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் 638401. |  | +91 4295-222002, 9443899016. |  | சத்தியமங்கலத்தில் மையப் பகுதியில் உள்ளது. பெரிய கோயில் என்றழைக்கப்படுகிறது. |  | ஒரே தலத்தில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் சயன கோலத்திலும் உள்ள மூன்றும் திருமஞ்சன மேனிகள். வேணுகோபலாசுவாமி நின்ற, அமர்ந்த மற்றும் சயனக் கோலம். |  | பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |  |  |