அருள்மிகு குமரேஸ்வரர் திருக்கோயில் |
மலையங்குளம்-631 603, காஞ்சிபுரம் மாவட்டம் |
மாகறலின் தெற்கு 2 கி.மீ.லுள்ள அதவப்பாக்கத்தின் கிழக்கே 5 கி.மீ. |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
இந்தம்பலம், காஞ்சிபுரம் |
பெறும்பேர் கண்டிகையிலிருந்து கிழக்கே செய்யூர் வழி. |
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி,அகத்தீஸ்வரர்(வ) திருக்கோயில் |
புதுவாயல், கும்மிடிபூண்டி வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் |
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்
செய்யூர்
காஞ்சிபுரம் |
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்குத் தென்கிழக்கே 29 கி,மீ தொலைவில் உள்ளது. செய்யூர் என அழைக்கப்படும் சேயூர். |
கிழக்கு நோக்கிய திருக்கோயில், நுழைவாயில் தென்புறமே உள்ளது. மகாமண்டபத்தினுள்ளே நுழைந்ததும் சோமநாதர், மீனாட்சி அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. நந்திதேவரின் இருபுறமும் பிரம்மாவும் திருமாலும் உள்ளனர். |
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,
பெருங்கரணை (நடுப்பழனி),
மதுராந்தகம் வட்டம்,
செங்கற்பட்டு மாவட்டம்,
603301 |
+91 9600390366 | மேல்மருவத்தூருக்கும் அச்சிரப்பாக்கத்திற்கும் நடுவே உள்ள ஊர் நடுப்பழனி. இந்த ஊருக்குச் செல்ல ஓர் தோரண வாயில் உள்ளது. இந்த வளைவு சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் இடப்புறம் வரும். கோயில் வரை வாகனத்திலேயே செல்லலாம், 120 படிகள். |
சந்திரசேகரேந்திர மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி ஆகியோரால் நடுப்பழனி எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது வரலாறு. தென் பழனிக்கும் வடபழனிக்கும் இடையே அமைந்த ஆண்டித் திருக்கோலத் தலம். இத்தலத்தில் முருகன் தண்டாயுதபாணிக் கோலத்தில், ஒரு முகம் இரு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு செவ்வாய், கிருத்திகையில் மரகத தண்டபாணிக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது. பெரும் முருக பக்தர் தத்தர் சுவாமி சமாதியினைத் தாண்டி கோயிலுக்குச் செல்ல வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன் முத்துசாமி பிள்ளை என்பவர் கட்டியது. தற்போது மைசூரைச் சார்ந்தோர் நிர்வகிக்கின்றனர்.
|
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,
ஆனூர், திருக்கழுக்குன்றம் வட்டம்,
மற்றும் மாவட்டம் 603405.
|
+91 9551066441 | செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ தொலைவில் தெற்கே உள்ளது.பொது மருத்துவமனையினைத் தாண்டி செல்லும் பாதையில், பொன்விளைந்த களத்தூர் அடைந்து மேலும் 4-5 கி.மீ. தூரம் சென்றால் பாலாற்றின் கிழக்குக் கரையின் ஓரம் உள்ளது இத்தலம். |
ஆனூரில் 3 கோயில்கள் உள்ளன. அவை முற்றிலும் சிதிலம் அடைந்த அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில், வேத நாராயணப் பெருமாள் திருக்கோயில் மற்றும் கந்தசுவாமி திருக்கோயில். கூற்றுவ நாயனாரும் புகழேந்திப் புலவரும் வாழ்ந்த ஊர் இது. இந்தத் தலம் அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் தாயார் அவதரித்த தலம். முற்காலத்தில் வயலூர் செல்ல படகு மூலம் செல்லும் போது பயணம் விக்னமின்றி அமைய வேண்டும் என பிறர் வேண்டிக்கொள்ளும் போது கண் பார்வை இழந்த அவர் மெய் மறந்து முருகனை சிறு பிராயத்திலிருந்தே நினைந்துருக அருள் பெற்ற தலம். இங்குள்ள முருகன் ஒரு முகம் 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் வலது கையில் அக்கமாலையும் இடது கரத்தில் கமண்டலமும் கொண்டு மற்ற இரு கரங்களில் ஊரு முத்திரையும் தாமரை மலரும் கொண்டு மகுடத்துடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். மேலும் விசேஷமாக யானை வாகனத்துடன் இந்த முருகர் திகழ்கிறார். பராந்தக சோழன், ராஜராஜன், குலோத்துங்கன் மற்றும் விஜயநகர மன்னர்களால் வளர்க்கப்பட்ட கோயில். 7ம் நூற்றாண்டில் ஆண்ட விஜய வர்ம பல்லவன் காலத்தில் அவனது மகனை (அபராஜித வர்ம பல்லவன்) முதலாவது ஆதித்ய சோழன் வெற்றி கொண்டு சோழர் காலம் தொடக்கமுற்றது. ராஜராஜன் காலத்து கல்வெட்டு மூலம் இந்தப் பகுதியில் விளங்கிய பாடகம், திமிலை, கரடிகை, கலம், சேகண்டி ஆகிய வாத்தியக் கருவிகள் பற்றிய குறிப்பு உள்ளது. அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் தந்த தலமாதலால் இப்பெயர் எனவும், அருகே உள்ள மலையும் அஸ்திர மலை என்றே அழைக்கப்படுகிறது. முருகன் கோயில் நல்ல நிலைக்கு வந்துள்ளது. |
பூஜை நேரம்: - |
|
|