Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>மதுரை மாவட்டம்>மதுரை பெருமாள் கோயில்
 
மதுரை பெருமாள் கோயில் (248)
 
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
பொட்டப்பட்டி,மதுரை மாவட்டம்
அருள்மிகு ஹரி பஜனை மடம்
வடக்கு நாவினிப்பட்டி,மதுரை மாவட்டம்
அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்
பாலையூர் மதுரை மாவட்டம்
திருமங்கலத்திலிருந்து 38 கி.மீ.
இக்கோயில் 065 செண்ட் நிலப்பரப்பளவில் சிறிய இராஜகோபுரத்துடன், இரண்டு பிராகாரங்களுடன், மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் திருமகள் பூமிதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். பிராகாரத்தில் ஆழ்வார்கள், ஆண்டாள், முதலியன சன்னதிகள் உள்ளன. இக்÷காயில் 300 வருட முன்பு சாப்டூர் ஜமீன்தார்களால் திருப்பணி செய்யப்பட்டது. மண்டபத் தூண்களில் தசவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகளும் காணலாம். உற்சவர் அழகர் என்று அழைக்கப்படுவதால் இக்கோயிலுக்கும் அழகர் கோயில் என்றே இவ்வூர் மக்கள் அழைக்கின்றார்கள். தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் 11 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், டி. கல்லுப்பட்டி, மதுரை.
மதுரையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது டி. கல்லுப்பட்டி. இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சங்கரந்தேவன்பட்டியில் அழகுற அமைந்து உள்ளது ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்.
சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில் இது. சாத்தூர் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஜமீனில் திவானாக இருந்த கண்டியத் தேவன் என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, கல்யாண கோலத்தில் அழகுறக் காட்சி தருகிறார் ஸ்ரீநிவாசப் பெருமாள். கிழக்கு நோக்கிய மூலவரை தரிசித்தால், நம் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். கருடாழ்வார், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, நரசிம்மர், துர்கை, விநாயகர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசித்து பிரார்த்தித்தால், பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் நடந்தேறும்; பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குவோருக்கு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும். திருமணம் வேண்டி இங்கு கோ பூஜை நடத்தி வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், நேர்த்திக்கடனாக அரிசி, வெல்லம், பருப்பு, பயறு ஆகியவற்றை எடைக்கு எடை வழங்குகின்றனர் பக்தர்கள். புரட்டாசி மாதத்தில் இங்கு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தால், சகல சுபிட்சமும் பெறலாம் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

பூஜை நேரம்: காலை 6-10 மாலை 5-8 மணி
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், உசிலம்பட்டி, மதுரை.
மதுரை, திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலத்தில், வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் வெங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்திலும், தாயார் அலர்மேல்மங்கை தனிச்சன்னிதியிலும் அருள்புரிகிறார்கள். கொடிமரத்திற்கு திருமஞ்சனம் செய்தால் மக்கட்பேறு கிட்டும்; திருமணத் தடை நீங்கும்; இழந்த பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
அருள்மிகு மதன கோபால பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு மதன கோபால பெருமாள் திருக்கோயில், மதுரை பஸ் ஸ்டாண்டு அருகே, மதுரை 625001.
+91 452-2349363, 9443181793, 9442622181.
மதுரையின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கூடலழகர் பெருமாள் திவ்ய தேசத்திற்கு அரை கீமி தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.
இரு கைகளில் சங்கு சக்கரத்துடனும் மற்ற இரு கைகளில் புல்லாங்குழலுடனும் சேவை சாதிக்கிறார். 7ம் நூற்றாண்டுக் கோயில். மகரிஷிகளால் பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சன்னிதி. ராமாயணத்தோடு ஒட்டிய பல சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. கோகுலாக்ஷ்டமி, ஆவணி ரோகிணி, சித்திரை மற்றும் ஆடி 9 நாட்கள் உற்சவம் சிறப்பு. கோடிக்குளத்தில் முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து விக்ரகத்தைக் காப்பாற்ற பிள்ளை லோகாச்சாரியர் ஸ்ரீரங்கம் பெருமாளை இந்தத் தலத்தில் வைத்துப் பாதுகாத்ததாகத் தகவல். 13-14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து இத்தலத்தில் முக்தி பெற்றார். பிரம்ம தீர்த்தக் கரையில் உள்ள துங்கவன் க்ஷேத்திரமாக திருமோகூர் கல்வெட்டுகள் இத்தலத்தைக் குறிப்பிடுகின்றன. பாண்டவர்கள் இங்கு தங்கயிருந்த போது இந்த மலைக் கற்களில் உறங்கியதாக வரலாறு. 14ம் நூற்றண்டில் வாழ்ந்த மாறவர்ம குலசேகர பாண்டியன் காலத்தில் சிதிலமடைந்து பின்னர் சுந்தர பாண்டியனால் புணர் நிர்மாணிக்கப்பட்டது. மதனகோபாலஸ்வாமி நின்ற திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். காலை 8 மணி முதல் தகவல் தெரிவித்து எப்பொழுதும் சேவிக்கலாம்.
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை
அருள்மிகு மலைச்சாமி திருக்கோயில்
அருள்மிகு மலைச்சாமி திருக்கோயில், நரசிங்கம்பட்டி, ஒத்தக்கடை, மதுரை.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில், மதுரைக்கு அருகிலேயே உள்ளது ஒத்தக்கடை. இங்கே யானையைப் போன்று தோற்றம் கொண்ட மிக நீண்ட மலையில், குடைவரைக் கோயிலில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் யோக நரசிம்மர். இந்த மலையின் அடிவாரப் பகுதியில் நரசிங்கம்பட்டி அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மலைச்சாமி கோயில் மிகப் பழைமையான, புராதனமான கோயில். இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். இங்கு தெய்வத் திருவுருவங்கள் ஏதுமில்லை. நான்கு படிகள் இருக்கின்றன. அந்தப் படிகளையே கடவுளாக வழிபடுகிறார்கள் ஊர்மக்கள். பெருமாள் தன் திருப்பாதம் பதித்த இடமே நான்கு படிக்கட்டுகளாக, வழிபடும் விஷயமாகப் போற்றிக் கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் ஊர்க்காரர்கள். படிகளுக்கு மலர் தூவி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்தின் கரையிலிருந்து மூன்று முறை மண்ணை எடுத்து வந்து, மணல்மேட்டில் கொட்டி வேண்டிக்கொண்டால், அந்த முறை விவசாயம் சிறக்கும். பயிர் பச்சைகள் செழிக்கும் என்பது ஐதீகம். மேலும், படிச்சாமி என்றும் மலைச்சாமி என்றும் கொண்டாடப்படும் இந்தச் சாமிக்கு, கரும்புதான் படையல். நல்ல விளைச்சல் விளைந்திருந்தால், கட்டுக்கட்டாக கரும்புகளைத் தூக்கி வந்து, காணிக்கையாகச் செலுத்திச் செல்வார்கள். அந்தப் படையல் கரும்பையே, வந்திருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். குழந்தைகள் சரிவரச் சாப்பிடுவதில்லை என்றாலோ, அடிக்கடி அழுதுகொண்டே இருந்தாலோ, இங்கு படியில் வைத்து வேண்டிக்கொண்டால், ஆரோக்கியத்துடன் குழந்தைகள் வளர்வார்கள் என்பது நம்பிக்கை. பூசாரிப்பட்டி, அரிட்டாபட்டி என அக்கம்பக்கத்துக் கிராமங்களில் சுகப்பிரசவம் நிகழ்ந்து குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு மலைச்சாமி, மலையரசி, மலையாண்டி, மலையாயி எனப் பெயர் சூட்டுகின்றனர். மேட்டுப் பகுதியில் மண் கொட்டும் போது ஒரு சிலர், உப்பையும் சேர்த்துக் கொட்டி வழிபடுகின்றனர். முகத்தில் பரு போன்று ஏதேனும் வடுக்கள் இருப்பின், அது இந்த வேண்டுதலால் விரைவில் உதிர்ந்துவிடும். கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. இந்த மணல் மேடு, எவ்வளவு மழை பெய்தாலும் கரையாமல் இருக்கின்றன.
<< Previous  23  24  25 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar