அருள்மிகு உக்ர நரசிம்மர் திருக்கோயில் |
திருக்குரவளூர்,திருநகரி ரோடு,மங்கை மடம் போஸ்ட்,சீர்காழி வட்டம்- 609 106,நாகை மாவட்டம் |
+91 94430 07412 | திருநகரி சாலையில் மங்கைமடத்திற்குச் செல்லும் வழியில் ஊர். நாங்கூரிலிருந்து 5 கி.மீ. பஞ்ச நரசிம்ம ÷க்ஷத்திரங்களில் ஒன்று. |
உக்ரநரசிம்மர் வீற்றிருந்த கோலம்,கிழக்கு திருமுகம்
திறக்கும் நேரம்: ஒரு கால பூஜை. காலை 9.00 முதல் 11.00 வரை. பிரதோஷ நேரம் திறந்திருக்கும். |
அருள்மிகு வீர நரசிம்மப் பெருமாள் திருக்கோயில் |
மங்கைமடம் போஸ்ட்,சீர்காழி வட்டம்-609 106, நாகை மாவட்டம். |
+91 4364 200 234 90031 98300 | திருக்காவளம்பாடி சீர்காழிபூம்புகார் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது நாங்கூர் திவ்யதேசம். இதற்கு மிக அருகாமையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. பஞ்ச நரசிம்ம ÷க்ஷத்திரங்களில் ஒன்று. |
வீர நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கு திருமுகம் செங்கமலவல்லித்தாயார்
திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் 11.00 வரை, மாலை 5.30 முதல் 7.30 வரை. |
அருள்மிகு ஸ்ரீரெங்கநாதர் திருக்கோயில் |
கிழையூர் - 611 103,
நாகப்பட்டினம் மாவட்டம். |
நாகப்பட்டினத்திலிருந்து 24 கி.மீ. |
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை.
திருவிழா :திருவோணம், நவராத்திரி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி.
சிறப்பு : பஞ்சரெங்க ஷேத்திரங்களான ஸ்ரீரங்கம், வடரெங்கம் ஆதிரெங்கம், மேல ரங்கம், கீழரங்கத்தில் இவ்வூர் கிழக்கே அமைந்துள்ளதால் கீழரெங்கம் என்று கிழையூர் ஆயிற்று. இப்பெருமானை நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், வணங்கினால் தோஷம் அகலும். ஆதிகேசவனுக்கு அமாவாசையன்று நைவேத்தியம் படைத்து ராகு தோஷ நிவர்த்தி அடையலாம். திருமணம் கைகூட, மகப்பேறு உண்டாக இங்குள்ள புஷ்கரணியில் நீராடி வழிபட்டு நீல வஸ்திர தானம், உளுந்து சாதம் செய்து நெய்வேத்தியம் செய்தும் இந்த சன்னதியில் உள்ள சந்தான கிருஷ்ணனுக்கு கல்கண்டும் வெண்ணையும் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தை செல்வம் பெறுவர் என்பது நம்பிக்கை. |
அருள்மிகு லக்ஷ்மிநாராயணப் பெருமாள் திருக்கோயில் |
நீடூர்
நாகப்பட்டினம் மாவட்டம் |
மயிலாடுதுறைக்கு வடக்கே 5 கி.மீ. |
திருநீடூர். மகிழவனம். கொள்ளிடம் ஆற்றின் தென் பகுதியில் இக்கோயில் உள்ளது. மூலவர் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் லக்ஷ்மி, தீர்த்தம் செங்கழு நீரோடை. பிராகாரத்தில் இராமர், இலக்ஷ்மணர், சீதை, அனுமன் உள்ளனர். ஊழிக்காலத்திலும் அழியாது நீடித் திருக்கும் ஊர் ஆதலால் நீடூர் எனப் பெயர். 300 வருட முற்பட்ட திருக்கோயிலாகும். ஒரு கால பூஜை நடைபெறுகிறது. |
அருள்மிகு சுந்தரநாராயண பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு சுந்தரநாராயண பெருமாள் திருக்கோயில்,
சித்தமல்லி,நாகப்பட்டினம் மாவட்டம். |
நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து சுமார் 16கி.மீ.தொலைவில் சித்தமல்லி எனும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
கொள்ளிடக் கரைக்கு அருகில் உள்ள தலம் இது. சித்தர்கள் வாழ்ந்து, தவமிருந்து இறையருள் பெற்ற புண்ணிய பூமி இது. |
அருள்மிகு ராஜகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ராஜகோபாலசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்,
கோமால் 609805,
மயிலாடுதுறை வட்டம், |
+91 9994389188. | மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் பாதையில் 9கிமீ சென்றவுடன் இடப்புறம் பிரியும் சாலையில் 6கிமீ சென்றால் கோமல் வரும். இந்த ஊரில் பிரதானமாகத் திகழும் பாலக்கரை பகுதியில் இடப்புறம் இறங்கும் சாலையில் சென்றால் இக்கோயில். |
சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். இந்தப் பகுதியில் ஏராளமான வேணுகோபாலசுவாமி கோயில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தில் அவை சிதிலமடைந்ததாகவும் தகவல். இதனை அஷ்டகோபாலபுரம் என்று முற்காலத்தில் குறிப்பிட்டுள்ளனர். இக்கோயிலிலேயே இரண்டு வேணுகோபாலசுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள வேணுகோபாலசுவாமி சங்கு சக்கிரத்துடன் திகழ்வது சிறப்பு. மேலும் அனுமனுக்கும் இராமருக்கும் சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளன. கோமல் ராஜகோபாலசுவாமி திருக்கோயில். மேலும் இந்த ஊருக்கு அருகே உள்ள மங்கநல்லூர் பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மங்கநல்லூர் மயிலாடுதுறை திருவாரூர் பாதையில் உள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திருமுக மண்டலத்துடன் தேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். இக்கோயிலின் சிறப்பு விபீஷணின் விக்ரகம் விளங்குவது ஆகும். இந்தியாவில் விபீஷணன் விக்ரகம் உள்ள சன்னிதிகள் இது ஒன்றாகும். மற்றவை அயோத்தி, ராமேஸ்வரம், திருக்கண்ணபுரம், ஸ்ரீரங்கம், மலேஷியாவிலிருந்து வந்த யாத்ரிகர்கள் இத்தலத்துப் பெருமையை அறிந்து சமீபத்தில் இத்தகவலைத் தெரிவித்தாக அறிய முடிகிறது. மங்களபுரி என்பது புரதானப் பெயர். |
அருள்மிகு நாரத வரதராஜப் பெருமாள்கோயில் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு நாரத வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
கடலங்குடி,
திருமேனியார் கோயில் அஞ்சல்,
609204,
மயிலாடுதுறை வட்டம்.
|
+91 4364-203604 | மணல்மேட்டிலிருந்து ஆற்றூர் சென்று அங்கிருந்து பந்தணைநல்லூர் பாதையில் சுமார் 6கிமீ. மெயின் ரோடிலிருந்து வலப்புறம் 1கிமீ சென்றால் பகுளாரண்ய க்ஷேத்திரம், பெரிய நம்பி இராமானுஜரின் குரு முக்தி பெற்ற தலம். இரண்டு வழிகள் உள்ளன. 1-கும்பகோணம் திருப்பனந்தாள்-பந்தநல்லூர்-கடலங்குடி மணல்மேடு சீர்காழி (460 என்-பி.எஸ் வழி) 2-மயிலாடுதுறை-மணல்மேடு கடலங்குடி-திருச்சிற்றம்பலம் மார்க்கமாக நகரப்பேருந்துகள் 1, 1-சி, 18, 18-ஏ, செல்லும். |
இறுதிகாலத்தில் நராத வரதராஜரை தியானித்து திருமேனியார் கோயில் என்கிற இடத்தில் பரமபதம் அடைந்தார். புணருத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் வசந்த மண்டபமும், மரங்கள் வளர்ந்த ராஜகோபுரமும் பெரும் வருத்தத்தைத் தருகிறது. கண்ணுரும் தார்மீகச் சிந்தனையுள்ளோர் இதற்கென முயற்சி எடுக்க வேண்டும். மாலிக் கபூர் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட கோயில். ரெங்கப்ப நாயக்கர், வரகொண்டப்ப நாயக்கர் இக்கோயில் திருப்பணிக்கென உதவிய கல்வெட்டுக் குறிப்பு வடக்கு மூலையில் உள்ளது. 200 ஆண்டுகள் ஆகியும் பூரண கும்பாபிஷேகம் ஆகாத கோயில். மேலும் மணல் மேடு அருகில் உள்ள ஆத்தூரில் சிதிலமடைந்து திருப்பணி நடைபெறும் பெரிய வைகுண்டநாதப் பெருமாள் கொண்ட கோயில் உள்ளது.
கடலங்குடி நாரத வரதராஜப் பெருமாள் கோயில் திருக்கோயில்
வைகுந்தத்தில் தேவர்கள், ரிஷிகள் சூழ்ந்திருந்த போது மூவுலகிலும் பெண்ணாசை இல்லாதார் எவரேனும் உண்டோ என வினவ நாரதர் தான் இருக்கிறேன் என்றார். அவரைச் சோதிக்க எண்ணி பூவுலகில் பூஞ்சோலையை உருவாக்கி மோகினி அவதாரம் கொண்டு அவரை மயக்க, அவள் பேரழகில் தன்னைப் பறிகொடுத்த நாரதர் தன்னை மணாளனாக ஏற்றுக்கொள்ளக் கூற சங்கு சக்கிரத்துடன் இருப்பவரையே தான் மணப்பேன் எனக்கூற நாரதரும் காரணம் கூறாமல் விஷ்ணுவிடம் அவற்றைப் பெற்று திருமணத்திற்குச் சம்மதம் கேட்டார். சோலையும் மோகினியும் மறைய சோர்வடைந்து சங்கு சக்கிரத்தைத் திருப்பித் தந்தார். காரணத்தை வினவ, அவரும் உண்மையினைக் கூறினார். சபையில் பொய் கூறி தகாத முறையில் நடந்ததால் அலியாகச் சாபமிட்டார் விஷ்ணு. விமோசனத்திற்கு வழி கேட்க பூவுலகில் மகிழ மரத்தடியில் (வெகுளாரண்யம்-வெகுளம்-மகிழ மரம்) தவமிருந்து பூர்வ தோற்றத்தைப் பெறுவாய் எனக் கூறினார். அவ்வாறே நிகழ, தனக்கு கலகக்காரன் என்கிற பெயர் போய் தனது பெயரோடு இப்பெருமானை வணங்கவும் வழிபடுவோர் உள்ளத்திலும் குடும்பத்திலும் கலகத்தை நீக்கி, அமைதியினையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வரமும் வழங்கினார். நாரத வரதராஜப் பெருமாள் நரசிம்மர் நாரதர் இரண்டு காலபூஜை தகவல் தெரிவித்து சேவிக்கலாம். |
அருள்மிகு அமிர்த நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு அமிர்த நாராயணப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
திருக்கடையூர்,
3-181, பெருமாள் கோயில் தெரு,
திருக்கடையூர்,
நாகை மாவட்டம் 609311.
|
+91 9443941113. | மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20கிமீ தூரத்தில் உள்ள பாடல் பெற்ற தலம் திருக்கடையூர். மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ளது. அங்குள்ள கிழக்கு வாசலில் வலப்புறம் தேருக்கு அருகில் திரும்பும் சாலையில் சுமார் அரை கிமீ தூரத்தில் கோயில். |
மார்கண்டேயனுக்கு வரமளித்து அருள் பாலித்து ஏமனை அழித்த அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமி திகழும் க்ஷேத்திரம் உடையவர் வழிபட்ட தலமும் ஆகும். இப்படிப் புராணப் பின்னணி கொண்ட தலம் இது. இந்தப் பெருமாளையும் அருகில் உள்ள எருக்கட்டான்சேரி தலத்து காலகாலேஸ்வரரையும் வணங்கினால்தான் திருக்கடையூர் தரிசனத்தின் முழுப்பலனும் கிட்டும் என்று ஐதீகம். தலையில் மகாலக்ஷ்மி தாயார் உள்ளார். ராகு கேது பரிகாரத் தலம். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் தரும் தலம். ராமானுஜர் வழிபட்ட பெருமாள். திருப்பணிக்கு உதவலாம். அமிர்தகடேஸ்வரர் கோயிலின் நிர்வாகத்தில் உள்ளது. திருவோணத்தில் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருக்கடையூர் அமிர்த நாராயணப் பெருமாள் திருக்கோயில்
பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு கொடுத்த தலம் இதுதான் அதைத் தந்தவர் இந்தப் பெருமாள் தான் தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்கப்படும் முன்னரே ஓர் குடமாக (கடம் என்றால் சமஸ்கிருதத்தில் குடம்) சிவலிங்கமாக மாறியது. அன்னை அபிராமியே பின்னர் இதைப் பங்கிட்டுக் கொடுக்கிறாள். அசுரர்களின் ஒருவன் இது அறிந்து தேவர் உருவில் அமிர்தத்தைப் பெற்றதை அறிந்து இப்பெருமாள் அவன் உடலைத் துண்டித்து பின்னர் உயிர் பிரியாமல் இருக்க பாம்பின் தலையையும் உடலையும் ஒட்ட வைத்தவுடன் ராகு கேதுவாக மாறினர். அமிர்த நாராயணப் பெருமாள் அமிர்தவல்லி வீற்றிருந்த திருக்கோலம். |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை |
அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் தேவஸ்தானம் திருக்கோயில்,
வடரங்கம்,
வடரங்கம் மற்றும் அஞ்சலி,
சீர்காழி வட்டம்,
வள்ளூவக்குடி போஸ்ட் 609116,
நாகை மாவட்டம். |
+91 9787813235, 9865123781. | சீர்காழி சிதம்பரம் பாதையில் சீர்காழியிலிருந்து 7கிமீ ல் உள்ள புத்தூருக்கே மேற்கே 5கிமீ ல் ஊர் நேரடி நகரப் பேருந்து உள்ளது. கொள்ளிடத்தில் கிழக்குக் கரையில் சீர்காழியிலிருந்து 12 கிமீ, ஏ-8 வழித்தடம் சீர்காழியிலிருந்து வடரங்கத்திற்குச் செல்லும் முதல் பேருந்து காலை 5 மணிக்கு அரை மணி நேரத்திற்கு ஓர் பேருந்து, சீர்காழி ரயிலடியிலிருந்து புதிய பைபாஸ் சென்று இத்தலத்தை அடையலாம். ஆட்டோ வசதியும் உள்ளது. சீர்காழி வட்டம் மாதானைக்கு அருகே தாண்டவங்குளம் லக்ஷ்மி நாராயணபுரம் பகுதியில் 12ம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நிறைவு பெற்ற லக்ஷ்மி நாராயணப் பெருமாள் மற்றும் வரத ஹஸ்த ஆஞ்சநேய ஸ்வாமி ஆலயமும் உள்ளது. |
ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளைப் போன்ற பள்ளிகொண்ட கோலம். கிழக்கு மேற்காகப் பாயும் கொள்ளிடம் தெற்கு வடக்காக மாறி செல்வதால் தக்ஷிண காவேரியாக பிரிகிறது. வைகுண்ட ஏகாதசி விசேஷம். ராஜன் மற்றும் கொள்ளிட நதிகளுக்கு நடுவே உள்ள தலம். சிவன் கோயிலும் உள்ளது. முன்பு இருந்த கோயில் 1924 வெள்ளத்தில் சிதிலமடைந்ததால் சுமார் அரை கிமீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. பழைய ரங்கநாதர் கோயிலிருந்த இடத்தில் ராமர் உள்ளார். தேவர்களைக் கொடுமைப்படுத்திய அசுரன் விக்ரமனை மகாவிஷ்ணு வென்ற தலம். தேவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடியதாகப் புராணம். காவேரி அகத்தியர் சாபத்தினால் தன் கணவனைப் பிரிந்து மீண்டும் சமுத்திர ராஜனை இணைந்த தலமாதலால் கணவன் மனைவியினிடையே உள்ள பிணக்கு தீர்க்கும் தலம். சவுராஷ்ட்ர மன்னன் தன் தீராத வியாதியிலிருந்து நீக்கம் பெற்றதால் தேர் ஒன்றை வழங்கி தற்போது வைகாசி உற்சவம் நடைபெறுகிறது. வசிஷ்டரின் ஆக்ஞைப்படி விஸ்வகர்மா வடிவமைத்த கோயில் என்கிறது புராணம். 10 நாள் வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ரங்கநாதப் பெருமாள ரங்கநாயகி பால சயனத் திருக்கோலம் கிழக்கு திருமுக மண்டலம். |
பூஜை நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு கஸ்தூரி ரங்கநாதர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு கஸ்தூரி ரங்கநாதர் தேவஸ்தானம் திருக்கோயில்,
பாப்பாகோயில்,
அந்தணப்பேட்டை போஸ்ட்,
வழி நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் 611102.
|
+91 9751141473. | நாகப்படினத்தை அடுத்த அந்த ஊர். நாகப்பட்டினம் சிக்கல் சாலையில் புத்தூர் அண்ணாசாலை பேருந்து நிலையத்திலிருந்து 2கிமி. இந்தப் பாதையில் தான் பொரவாச்சேரி (பொருள் வைத்த சேரி) கண்டாரைக் கவர்ந்திழுக்கும் அழகிய முருகன் கோயில் உள்ளது. |
ஏனைய ரங்கநாதர் ஆலயங்களிலிருந்து வித்தியாசமான ஆலயம் இது. துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான பிரமன் இப்பெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம். துர்வாச முனிவரைச் சாந்தப்படுத்துவது போலவும் அமைப்பு. உள்ளே எட்டிப் பார்த்தால்தான் தூர்வாசரைக் காண முடியும். பொதுவாக துவார பாலகர் நுழைவாயிலின் இரு புறங்களில் தான் இருப்பர். ஆனால் இங்கு இறைவனின் திருவடியில் இருக்கின்றனர். காரணம் அவர்கள் தேவர்கள் ஆவர். சாப விமோசனத்திற்காக திருவடியின் கீழ் உள்ளனர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் தந்தையார் பெருமாளுக்கு கிரீடமும், பாதங்களும் வெள்ளியால் செய்து அளித்ததாகவும் அவரது தாய் பிரகாரங்கள் சரிவர அமைய உதவியதாகவும் தகவல். தாயார் கமலவல்லித் தாயாருக்குத் தனி சன்னிதி உள்ளது. அனுமனுக்கு தோளில் இரண்டு தயிர் சாத மூட்டைக் கட்டி தொங்கவிட்டால் திருமண பாக்கியமும். இழந்த பொருளும் கிடைக்கும். இன்றும் அவர் கனவில் வந்து சொல்வதாக ஐதீகம் இப்பொழுதும் நடக்கிறது. கஸ்தூரி ரங்கநாதர் கமலவவல்லித்தாயார் சயனக் கோலம் கிழக்கு திருமுக மண்டலம்.
|
பூஜை நேரம்: காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை. காலை 8.30 மணியிலிருந்து மாலை 8.30 மணி வரை. (சனிக்கிழமை) |
|
|