அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் |
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்,
கீழரங்கம்,
ரங்கநாதப் பெருமாள் சன்னிதி
மற்றும் கீழையூர்,
அஞ்சல் மற்றும் வழி,
நாகை மாவட்டம் 611103. |
+91 4365-265494, 9443573659. | நாகை திருத்துறைப்பூண்டி சாலையில் 13 மைல் கீழையூர் இதுவே கீழரங்கமாகும். |
ஸ்ரீரங்கத்திற்கு அபிமானத் தலமாக விளங்கும் தலம். மாடக்கோவிலாக உள்ள 9 நூற்றாண்டுக் கோயில். பாதிரி தலவிருக்ஷமாக உள்ள இத்தலத்தில் ஆனந்த விமானம், பத்ம தாடகம், சந்த்ர (காவிரி) நதி மற்றும் வங்கக் கடல் சூழ அமைந்துள்ள தலச்சிறப்பு கொண்டது தை 2 கருட வாகனத்தில் ஸேவை சாதிக்கிறார். தொண்டரடிப்பொடியாரின் கூற்றுப்படி மேற்கே திருமுடியும். கிழக்கே திருவடியும். வடக்கே பின்புறமாக தெற்கு நோக்கி சயனித்து அருள் பாலிக்கிறார். மார்கண்டேயர் மங்களாசாஸனத்தில் இப்பெருமானைக் கண்டதால் அமிர்தம் கிட்டிய மகிழ்ச்சியினைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். யோகம், போகம், வீரம் மற்றும் விரகம் ஆகிய சயனங்களில் இத்தலத்தில் யோக சயனத்தில் காட்சியளிக்கிறார். கோபாலனுடன், நர்த்தன மற்றும் சந்தான கிருஷ்ணன் உள்ளனர். இக்கோயிலுக்கு வடக்கே 1கிமீல் உள்ள திருமணங்குடியில் தாயார் தவமிருந்து பெருமாளை மணம் செய்ததால் அனைத்துப் பிரார்த்தனையும் நிறைவேறும் தலம். பால ஆஞ்சநேயர் உள்ளார். 15-09-2000ல் கும்பாபிஷேகம் நடந்தேறியது. சித்திரை பிறப்பு, திருவோணம் ஈறாக பிரம்மோற்சவம், அக்ஷய திருதியை, வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநட்சத்திரம், மற்றும் அனைத்து மாதங்களிலும் விசேஷ வைபவங்கள் நடைபெறுகின்றன. ஜயந்தி ராம நவமி கனு கருட சேவை, மட்டையடி உற்சவம், திருமணங்குடி எழுந்தருளல் ஆகியவை மேலும் சிறப்பான உற்சவங்கள். |
பூஜை நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை |
|
|