அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் |
மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் கோயில் |
மல்லியம்,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் கோயில் |
மரையூர்,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மாரியம்மன் கோயில் |
முலப்பாக்கம்,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராஜ மாதங்கி மதங்கீஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ராஜ மாதங்கி மதங்கீஸ்வரர் தேவஸ்தானம் திருக்கோயில்,
நாங்கூர் அஞ்சல் வழி,
மங்கைமடம் சீர்காழி வட்டம்,
நாகை மாவட்டம் 609106. |
+91 4364-256044, 9443678793. | திருநாங்கூர் சீர்காழியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. மேலையூர் பூம்புகார் பாதையில் திருவெண்காடு மற்றும் மங்கைமடத்திற்கு அருகே உள்ளது. சீர்காழி பூம்புகார் சாலையில் பொறையாறு பாதையில் வரும் அண்ணன் பெருமாள் கோயில் திவ்யதேசத்து ஊரில் உள்ள வரவேற்பு வளைவில் நாங்கூர் பாதையில் 2 கிமீல் ஊர். பிரசித்தி பெற்ற 11 கருட சேவை நிகழும் ஊர். எவ்வாறு 11 திவ்யதேசங்கள் உள்ளனவோ அதே போல் 11 சிவன் கோயில்களும் சுற்றியுள்ளன். |
பலாச வனம் என்னும் புரசு மரங்கள் நிறைந்த இடத்தில் நாரதரின் ஆக்ஞைப்படி பிரமனின் மானசீகப் புத்திரரான மதங்கர் யானை வடிவாய் திருவெண்காட்டுப் பகுதியில் பிரளய காலத்திற்குப்பிறகு சிவனைக்குறித்து தவமிருந்து மதங்கீஸ்வரரை பிரதிஷ்டை செய்த இடம். மதங்கரின் தவத்தை மோகினியாகவும் மன்மதனாகவும் இடையூறு விளைவித்த போது நெற்றிக்கண் அக்னியால் மன்மதன் மறைந்தான். மோகினி வடிவில் வந்த மகாவிஷ்ணுவிடம் அர்ச்சாவதார 11 அவதாரங்களாக இந்தப்பகுதியில் எழுந்தருளி மோகினியாக எப்போதும் இங்கேயே இருந்து யோகத்தை அருள வேண்டும் என்று மதங்கர் கேட்டார். யோகத்தை மட்டும் பத்ரியில் உபதேசிக்கிறேன் என்று கூறினார். அவரது ஹ்ருதயத்திலிருந்து மதங்க கணேசர் தோன்றிட யோக சித்தியும் பெற்றார். மீண்டும் தவத்தில் மூழ்க பரமசிவன் அவர் முன் தோன்றி அவர் வேண்டியவாறு இந்த இடத்திற்கு மதங்காசிரமம் எனப் பெயரிட்டு சத்வ குணம் நிறைந்ததால் சுவேத வனம் என்ற பெயரும் சூட்டினார். இந்தத் தலத்தில் பிறந்தாலும், வசித்தாலும், இறந்தாலும், பூஜித்தாலும் தர்மார்த்த காம மோக்ஷம் கிட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். எனவே 11 பீடங்களில் இது தத்புருஷ பீடமாக விளங்கிறது. பின்னர் சிவனுடன் தோன்றிய லலிதா பரமேஸ்வரியிடம் பஞ்சசதாக்ஷரீ மந்திர உபதேசம் பெற்று அவள் அம்சமான மந்திரிணி தேவியை புதல்வியாகப் பெற்று சுவேதாரண்யேஸ்வரரை மணந்த தலம். (சுந்தரர் 7-12-4, 7-47-6) |
பூஜை நேரம்: - |
அருள்மிகு ஏழுலோக நாயகி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு ஏழுலோக நாயகி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
மணலூர் 614202,
ஆடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம். |
+91 9344814071. | கும்பகோணம் மயிலாடுதுறை பாதையில் உள்ள ஆடுதுறையிலிருந்து 4 கிமீ. ஆடுதுறை பாடல் பெற்ற தலம். காவேரி கொள்ளிடம் கூடும் இடத்தில் ஏழு லோக மாரியம்மன் கோயில் உள்ளது. |
இவ்வூரிர் மாரியம்மன் கோயிலில் பச்சை மற்றும் பவளக் காளி துவாரபாலகிகளாக உள்ளனர். குழந்தை வரம் தரும் அம்மன். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர் இந்த ஆலயத்திலேயே தங்கி நீராடி வழிபடுகின்றனர். அம்மை நோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் அரிசி தானம் பெற்று இங்கு கஞ்சி சமைத்து நைவேத்தியம் செய்து விநியோகம் செய்கின்றனர். உற்சவர் சிவராத்திரிக்கு மறு நாள் புறப்பாடு ஆகி புண்னைநல்லூர் மற்றும் கும்பகோணம் சென்று 42 நாட்களுக்குப் பிறகு திரும்ப உற்சவம் வரும். சித்திரை முதல் திங்கட்கிழமை உற்சவம் ஆரம்பம். அதற்கு அடுத்த திங்கள் செடில் சுற்றுதல் என்கிற வைபவத்தில் ஓர் ஆட்டுக் குட்டியினை வாயிலில் தொங்கவிட்டு வழிபடுகின்றனர். நிலத்தில் பாம்புக்கடியிலிருந்து
கணவர்கள் காக்கப்பட பெண்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை வேண்டிக்கொள்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு மற்றும் கணபதியும் அருள் பாலிக்கும் தலம். |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. |
|
|