அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் |
இடையாத்தி மங்கலம்,மணமேல்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு சுந்தராஜப்பெருமாள் திருக்கோயில் |
வெள்ளூர்,ஆவுடையார்கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் |
செய்யாணம்,ஆவுடையார்கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் |
பண்ணாங்கொம்பு,மணப்பாறை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு வரதராஜப்பெருமாள் ஆலயம் |
இராஜேந்திரம்,குளித்தலை வட்டம்,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் ஆலயம் |
வைகைநல்லூர்,குளித்தலை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் |
கழுகூர்,குளித்தலை வட்டம்,புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு கேசவப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு கேசவப் பெருமாள் திருக்கோயில்
விராலிமலை
புதுக்கோட்டை |
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடைவீதியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம். |
அழகிய இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கேசவப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் நின்ற கோலத்தில் அருட் சேவை சாதிக்கிறார். |
அருள்மிகு விட்டல பாண்டுரங்கா திருக்கோயில் |
அருள்மிகு விட்டல பாண்டுரங்கா திருக்கோயில்
புதுக்கோட்டை
|
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீவிட்டோபா பாண்டுரங்கன் திருக்கோயில், பேருந்து வசதி உண்டு. பழனியப்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்புக்கு அருகிலேயே அமைந்துள்ளது. |
சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இடத்தில், புதுக்கோட்டை நகருக்குள்ளேயே மிக அற்புதமாகக் கட்டப்பட்டுள்ளது பாண்டுரங்கர் கோயில் |
அருள்மிகு சுந்தராஜப் பெருமாள் திருக்கோயில் |
அருள்மிகு சுந்தராஜப் பெருமாள் திருக்கோயில்,
தீயத்தூர்,
திருப்புனவாசல் போஸ்ட்,
வழி பொன்பேத்தி,
ஆவுடையார்கோயில் வட்டம்,
புதுக்கோட்டை வட்டம் 614629. |
+91 9965086642. | ஆவுடையார் கோயிலிலிருந்து திருப்புனவாசல் பாடல் பெற்ற தலத்திற்குச் செல்லும் வழியில் பொன்பேத்தி கிராமத்திற்கு அருகில் தீயத்தூர் உள்ளது. இங்கு சஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர் திருக்கோயில் உத்திரட்டாதி நட்சத்திரத் தலமும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பழமை வாய்ந்த இராமர் கோயில் ஒன்று துவார் என்கிற இடத்தில் உள்ளது. |
ராமனின் திருவடிகள் பட்ட புனிதத் தலம். பல அந்தகக் கவிகள் (பார்வை இழந்தவர்கள்) வியாழன் கூடிய ஏகாதசியில் வழிபட்டு பலன் பெறலாம். சுக்ராச்சாரியார் பாத யாத்திரையாக வந்து வழிபட மயிலையில் வெள்ளீஸ்வரர் அருளால் பார்வை கிட்டும் என சுந்தரராஜப் பெருமாள் உரைத்த தலம். இந்த நிகழ்ச்சிகள் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் யுகங்களில் நடந்தவை. புராக்னி எனும் திருமகள் லோக லக்ஷ்மியும் இந்த ஊரில் திகழ்வதாக ஐதீகம். ஆங்கிரசர் முதன் முதலாக ஹோமாக்னி ஏற்றிய தலம். இங்கிருந்து வைகுண்ட மற்றும் கைலாயத்திற்கு இந்த நித்யாக்னியினைக் கொண்டு செல்வதாகப் புராணம் இத்தல விநாயகர் வாஞ்சா கணபதி தன் திருமணத்திற்கு சிவனிடம் அக்னி பெற்றதாக வரலாறு. சீதை பதிவ்ரதா நிலையினை உணர்த்த அக்னிப் பிரவேசம் செய்த போது அக்னிபெற்ற பாவம் நீங்கிய தலம். ராமர் திருப்புனவாசல் மற்றும் தீர்த்தாண்டவதானம் ஆகிய அருகேயுள்ள இடங்களில் ஹோமம் செய்ய அரணைக் கட்டையில் தீ பெற்ற இடமும் இதுவே. ஒவ்வொரு சஹஸ்ரநாம பீஜாக்ஷர வடிவையும் தம் சுயம்பு லிங்க மேனியில் காண்பித்து அருளப்பட்ட கார்ஜனீய மகரிஷியும் நாரதருக்கு இத்தலத்தில் மகாலக்ஷ்மி செய்யும் யாகத்திலிருந்து தோன்றிய சுந்தரராஜப்பெருமாளைக் கண்டு சகஸ்ரமீஸ்வரர், சஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர் மற்றும் லக்ஷ்மி சஹஸ்ரேஸ்வரர் ஆகிய நாமங்களின் உட்பொருளை விளக்கியதாகப் புராணம் அனைத்துப் பாக்கியங்களும் அருளும் பெருமாள். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, (ஒரு காலபூஜை மற்ற சமயத்தில் தகவல் தெரிவித்து சேவிக்கலாம் |
|
|