அருள்மிகு சண்முகநாதர் இடும்பர் திருக்கோயில் |
பரிமணங்குடி,ஆவுடையார் கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
விளத்தூர், ஆவுடையார் கோயில் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
திருப்புனவாசல்-614 642, புதுக்கோட்டை மாவட்டம் |
ஆவுடையார் கோயிலிலிருந்து 32 கி.மீ. பில்லுவலசையிலிருந்து 15 கி.மீ |
|
அருள்மிகு முருகன் திருக்கோயில் |
தேனிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் |
புதுக்கோட்டை-அரிமளம் வழி 24 கி.மீ |
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
வேம்பன்பட்டி,கந்தர்வகோட்டை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் |
|
|
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
புதுக்குடி,
புதுக்கோட்டை. |
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியிலிருந்து 10 கி.மீ.யில் உள்ளது புதுக்குடி. |
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், திருச்செந்தூர் இருக்கும் திசையில் இருந்து பறந்து வந்த மயில் ஒன்று தற்போது கோயில் உள்ள இடத்தில் அமர்ந்தது. அந்த சமயத்தில் அப்பகுதியில் மீன்களைக் காயவைத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு அந்த மயில்மீது முருகன் அமர்ந்திருப்பதுபோன்ற காட்சி தோன்றியது. சிறுவன் உடனே எல்லோரிடமும் சொல்ல, பக்தர் ஒருவரின் கனவில் வந்த முருகன், தாம் அங்கே கோயில்கொள்ள விரும்புவதைச் சொன்னார். அதைத் தொடர்ந்து மற்றொரு பக்தரிடம் இருந்த வேல் அங்கே நடப்பட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து வணங்கத் தொடங்கினர். அன்றுமுதல் அப்பகுதியில் கடலின் சீற்றம் படிப்படியாகக் குறைந்தது. மீனவச் சிறுவனால் அடையாளம் காட்டப்பட்டதால், மீனவ மக்களின் விருப்பமான கடவுளாகத் திகழ்கிறார் இக்கோயில் முருகன். |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
தேனிமலை,
புதுக்கோட்டை. |
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. தேனிமலை. இங்கு மலை மீது முருகன் கோயில் உள்ளது. |
செவ்வாய்தோஷம் உள்ள ஆண்களும் பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடும். தவிர, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். மலையடிவாரத்தில் உள்ள சுனை நீரில் நீராடி முருகப் பெருமானை வழிபட தீராத நோய்களும் தீரும். |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருமலைக்ககேணி,
வழி சாணார்பட்டி,
செங்குறிச்சி போஸ்ட்,
624306. |
+91 451-2050260, 9626821366 | திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவில் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய செங்குறிச்சி கம்பிளயம்பட்டி ஊராட்சி ஒன்றிய எல்லையில் உள்ள தலம். திண்டுக்கல் செந்துறைப் பாதையில் உள்ளது. மலையிலிருந்து இறங்கி முருகனை வழிபடுவது ஓர் வித்தியாசமான அனுபவம். |
இத்தலத்தில் வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். திருமுருக கிருபானந்த வாரியாரால் போற்றப்பட்ட தலம். பழனி சென்றடையுமுன் முருகன் தன் வேலால் இருபுறமும் இரு சுனைகளை (வள்ளி தெய்வயானை சுனைகள்) உருவாக்கியதாகவும் ஒன்றில் சுடு நீரும் மற்றொன்றில் குளிர் நீரும் வற்றாத சுனைகளாக விளங்குகின்றன. இச்சுனை நீராடுதல் வியாதிகளைப் போக்குவதாக ஐதீகம். கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. 1981, 1991 (வாரியார் சுவாமிகள் முன்னிலையிலும்) மற்றும் 2003ல் கும்பாபிஷேகம் நடந்தேறியுள்ளது. நாவல் மரம் தல விருக்ஷம். |
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
கோவில்பட்டி, புதுக்கோட்டை. |
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கோவில்பட்டி என்ற ஊரில் இந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது. |
கிழக்கு நோக்கியுள்ளது கோயில். மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் கருவறையில் மூலவர் பாலசுப்ரமணியசுவாமி கருணை ததும்பும் திருமுகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பாலகனாய் அருள் பாலிக்கும் முருகனை நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு! மூலவரின் வலதுபுறம் துர்க்கையும், இடது புறம் ஐயப்பனும் தனிச் சன்னதிகளில் உள்ளனர். மகா மண்டபத்தில் விநாயகர், நாகர், இடும்பர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் பஞ்சலிங்கம், ஆஞ்சனேயர், ராகு-கேது ஆகியோர் தரிசனம் கிட்டுகிறது. கோயில் நுழைவாயிலின் வலதுபுறம் சிவபெருமான், பார்வதி பிரம்மாவின் சுதைத் திருமேனிகள் காணப்படுகின்றன. மாணவர்களின் கண்கண்ட தெய்வம் இந்த முருகன். தேர்வு சமயங்களில் இக்கோயிலில் மாணவர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அப்பனுக்குப் பாடம் சொன்னவன், இங்கே வந்து தன்னை வணங்கும் மாணவர்களுக்கு கல்விஞானம் பெருவும், பாடங்களில் தேர்ச்சி பெறவும் அருள்வதில் சந்தேகமில்லை என்பதற்கு இந்த மாணவர் கூட்டமே சாட்சி! பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம் என வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. நல்ல கல்வி பெற வேண்டியும், படித்த பின் நல்ல வேலை கிடைக்க வேண்டியும் வேண்டும் மாணவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைப்பதில் இந்த பாலசுப்ரமணிய சுவாமிக்கு நிகரில்லை என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். |
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,
(தென்பழநி),
நகரம் வழி கீரமங்கலம்,
ஆலங்குடி,
ஆலங்குடி வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம்,
622301.
|
+91 9442740976, 9976792377 | ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை 20 கிமீ தூரம். இங்குள்ள கீரமங்கலத்தில் நகரம் என்கிற ஊரில் அமைந்த கோயில். கீரமங்கலத்திலிருந்து 13 கிமீ தூரம். குமரமலைத் தலமும் புதுக்கோட்டையில் உள்ளது. |
இத்தலத்தில் சுப்பிரமணிய வழுவாடியார் என்கிற ஜமீந்தார் தனது தள்ளாத வயதில் ஆண்டுதோறும் தரிசிக்கும் பழனி முருகனை தரிசிக்க முடியவில்லையே என நினைத்தபோது கிழவன் வடிவில் முருகன் தோன்றி கட்டச் சொன்ன கோயில். அவர் 1900ல் பழனியிலிருந்து கல் மண் கொண்டு வந்து சிறிய குன்றெழுப்பி பால தண்டாயுதபாணிக்கு கோயில் கட்டினார். ஜமீந்தார் ஆட்சிக்குப் பின் சற்று பின்னடைவு அடைந்த கோயில் காரியங்கள் தவத்திரு தனராமலிங்க சுவாமிகள் முயற்சியால் பவுர்ணமி திருவிளக்குப்பூஜை ஆகியவை மீண்டும் பழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுப்பிரமணிய பிரசன்னமாலா மந்திரத்தை படித்தால் திருமண பாக்கியம் கிட்டும் என்று இங்கு வந்து வழிபட்டு, படித்து, பலன் பெறுகின்றனர். செவ்வாய் தோஷ நிவர்த்தியும் கிட்டும் தலம். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில். இதனருகில் ஆலங்குடியில் தர்மஸம்வர்த்தினி உடனுறை நம்புரீஸ்வரர் கோயில் உள்ளது. |
பூஜை நேரம்: காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 8 மணி வரை |
|
|