அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,
இலுப்பூர் வட்டம் 622104,
கோதண்டராமபுரம் கிராமம்,
(பெருமாநாடு),
புதுக்கோட்டை மாவட்டம். |
+91 9443237930 | புதுக்கோட்டை காரையூர் பாதையில் 12 கிமீ தூரத்தில் உள்ள தலம். 17ம் எண் டவுன் பஸ் செல்லும். கோயில் நுழைவு வாயில் உள்ளது. அதிலிருந்து 1 கிமீ தார் சாலையில் நடந்துதான் கோயிலிற்குச் செல்ல வேண்டும். |
இத்தலத்தில் மேற்கு நோக்கிய தண்டாயுதபாணி உருவத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். திருப்புல்வயல் என்பது பழைய பெயர். சரவணப் பொய்கை தீர்த்தம். குருபாத தாசரின் குமரேச சதகம், அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் பிள்ளைத்தமிழ் ஆகிய பாடல் பெற்ற தலம் இது. சுவாமி கேடிலியப்பர், அம்பாள் வளமுலை நாயகி. அகத்தியருக்கு நடராஜர் வலது பாதம் காட்டியதால் அவர் பூஜித்த லிங்கம் உள்ளது. (இங்கு கால பூஜை நடைபெறுகிறது.) |
பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை |
அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் |
அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில்,
வழி பொன்னமராவதி,
கொப்பன்னாபட்டி எஸ்.ஓ.,
பொன்னாமராவதி வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம்,
622401. |
புதுக்கோட்டை தேனிமலை 28 கிமீ தூரம். அங்கு சிறிய மலையின் மீது சுமார் 242 படிகளின் மேல் உள்ள மலைக்கோயில். இதே வழியில் வையாபுரியில் (சின்னமலை வழி) பழைய முருகன் கோயில் உள்ளது. பொன்னமராவதியிலிருந்து குமரன்மலை 10கிமீ. திருச்சி திருப்பத்தூர் விராலிமலை வழி பேருந்து திருச்சியிலிருந்து காலை 6.20 தினமும் செல்கிறது. 9 மணிக்கு தேனிமலை அடையும். தேனிமலை தாண்டி கொப்பனாபட்டி உள்ளது. அதிலிருந்து 5 கிமீ பொன்னமராவதி. |
இத்தலத்தில் ஆறுமுகன் தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி திருக்கோலத்தில் உள்ளார். வேறோர் இடத்தில் குறிப்பிட்டுள்ள குமரன் மலையினைக் கடந்து சென்று இத்தலத்தைக் காண வேண்டும். முன்னும் பின்னுமாக 3 முகங்களுடன் முருகன் உள்ளார். எப்பொழுதும் தேனீக்கள் கூடு கட்டுவதால் மலைக்கு இப்பெயர்.
|
|
|