அருள்மிகு நம்புநாயகி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு நம்புநாயகி தேவஸ்தானம் திருக்கோயில்,
தனுஷ்கோடி சாலை,
இராமேஸ்வரம் 623526,
இராமநாதபுரம் மாவட்டம். |
+91 9894887503 | தனுஷ்கோடி இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ நம்புநாயகி திருக்கோயில் இராமேஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. மதுரை இராமநாதபுரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தியினைத் தாண்டியவுடன் உள்ளது. வெள்ளிக்குறிச்சிவிலக்கு. அதிலிருந்து 1 கிமீ. தூரத்தில் ஸ்ரீ புஷ்பவன நாயகி அம்மன் அலயம் உள்ளது. |
500 ஆண்டுகள் பழமையான ஆலயம். இவ்வாவலயத்தைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் பொருந்தியமையால் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. நவராத்திரியில் நவசக்தி அலங்காரங்கள் செய்யப்படுகின்றது. புத்திர பாக்கியம், திருமணத்தடை நீக்கம் கிட்டும். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர். புத்தி சுவாதீனமற்றவர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி பூசாரியின் கைகளால் மஞ்சள் பிராசதம் பெற்று உட்கொண்டு நிவர்த்தி அடைவது நிதர்சன உண்மை. தக்ஷிண துருவன் மற்றும் பஸ்சிம துருவன் தவமிருக்க தெற்கு பார்த்து அம்பாள் தக்ஷிண காளியாக காட்சி கொடுத்தாள் என்று புராணம் கூறுகிறது. ஆகையினால் இங்கு முனிவர்கள் தங்கி அம்பாளை வழிபடுவதாக ஐதீகம். சிங்களமன்னன் சுலோதரன் அவர் சகோதரர்களின் ஏளனத்தையும் பொருட்படுத்தாது இந்த அம்மனை வழிபட வியாதி நிவர்த்தி பெற்றான். அன்று முதல் நம்பு நாயிகினை வழிபட்டால் வம்பில்லை என்கிற வழக்குச் சொல் உள்ளது. மராத்திய பிராமணர்களுக்குக் குல தெய்வமாக விளங்குவதால் வாரிசுகளுக்கு இவள் பெயர் இடுகின்றனர். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை. |
அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
பரமக்குடி 623707,
பரமக்குடி வட்டம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
|
+91 4564-229640, 9443405585. | பரமக்குடி இராமநாதபுரத்திலிருந்து சுமார் 37 கிமீ தொலைவில் உள்ளது. |
சூலம் கபாலம், கட்கம், உடுக்கை ஏந்தி உள்ள அம்பாள். பரமக்குடி மன்னன் ஒருவன் நடத்திய போட்டியில் முத்துக்களைத் தொடாமலேயே மாலை தொடுக்க வேண்டும் என்று கூறினான். அனைவரும் தோற்க பெண்ணொருத்தி நூலில் சர்க்கரைப் பாகினை ஏற்றி எறும்புகள் ஊறச் செய்து அவை முத்து வழியே சென்று மாலையாகத் தொடுக்கப்பட்டது. பெண்ணின் புத்தி கூர்மையினை கண்ட மன்னன் அவளை மணக்க விரும்பினாள். அவளைக் கட்டாயப்படுத்த தீக்குள் விழுந்து மாய்த்துக் கொண்டாள். அவள் தெய்வமான அந்த இடத்திலிருந்து மண் கொணர்ந்து உருவான அம்மன் இது. நாகமயம் பின்புறம் உள்ளதால் நாக தோஷ நிவர்த்தி கிட்டுவதாக ஐதீகம். |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை |
|
|