அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பிரம்பன்வலசை, ராமநாதபுரம் மாவட்டம்-623 805 |
ராமேஸ்வரம் வழியில் 20 கி.மீ.ல் உச்சிப்புளியருகே 4 கி.மீ. |
|
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
பாம்பன்-623 521, ராமநாதபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
ராமேஸ்வரம்-623 526, ராமநாதபுரம் மாவட்டம் |
|
|
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் |
ராமேஸ்வரம்-623 526, ராமநாதபுரம் மாவட்டம் |
ராமநாதசுவாமி கோயிலில் கீழவாசல் அனுப்பு மண்டபத்தில் உள்ள முருகன் சன்னதி |
|
அருள்மிகு குமரய்யன் திருக்கோயில் |
அருள்மிகு குமரய்யன் திருக்கோயில்,
மேல கொடுமலூர்,
வழி அபிராமம்,
முதுகளத்தூர் வட்டம் 630601,
இராமநாதபுரம் மாவட்டம்.
|
+91 9345222470, 9442047977, 9976711487 | பரமக்குடி, பார்த்திபனூர் மற்றும் அபிராமத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அருகே கீழ்க் கொடுமலூரில் குமரய்யா கோயிலும் உள்ளது. |
சூரபத்மனை அழிக்க பார்வதி வேலினைத் தந்தாள். அவனது சகோதரன் பானுகோபனை அழிக்க மழுவினைத் தந்தாள் தேவி. மழுவை முருகனுக்குத் தந்த தலம் இன்று கொடு மழு ஊர் என்கிற பொருளில் கொடுமலலூர் ஆனது. மழுவேந்திய முருகனுக்கு சூரிய அஸ்தமனத்திற்கு பின்னரே அபிஷேகம். காரணம் வனத்தில் முருகன் அவர்களுக்கு அந்த நேரத்தில் காட்சி தந்து பின்னர் அவர்களால் அச்சமயம் பூஜிக்கப்பட்டார். கார்த்திகை நட்சத்திரத்தன்று 33 வகை அபிஷேகம் நடைபெறுகிறது. செல்வம், மக்கட்பேறு மற்றும் கல்வி மேம்பாடு, திருமண பாக்கியத்திற்கென இந்த நாளில் வேண்டிக்கொள்கின்றனர். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தல விருட்சம் உடை மரத்தின் இலைகளைச் சாப்பிட கை கால் வலிக்கு அருமருந்தாகிறது. 48 நாட்கள் விரதமிருந்து இந்த மரத்தின் இலையை உண்டு மக்கட்பேறு பெறுகின்றனர். தேன், தினைமாவு, கைக்குத்தல் அரிசி வெல்லம், பாசிப்பருப்பு கலந்த நைவேத்தியம் செய்யப்படுகிறது. வெந்த உண்வு வகைகள் படைக்கப்படுவதில்லை.
|
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
பிரப்பன் வலசை,
மண்டபம் வட்டம்,
இராமநாதபுரம் மாவட்டம்,
623513. |
+91 44-24521866, 9791176967 | ராமேஸ்வரத்திலிருந்து 31 கிமீ. பாம்பன், மண்டபம், சாத்தக்கோன் வலசை தாண்டினால் பிரப்பன் வலசை. |
குமரகுருதாசராம் பாம்பன் சுவாமிகளின் சீடர். பாம்பன் சுவாமிகள் இத்தலத்துப் பெருமானைப் பாடியுள்ளார். முருகன் திருவடி பட்ட இடமாக இத்தலத்தைக் குறிப்பிடுகிறார். 1848ல் பாம்பன் தீவில் பிறந்தார். ஒரு சமயம் தந்தையுடன் தென்னந்தோப்புக்குச் சென்ற போது சஷ்டி கவசத்தை முணுமுணுத்த வண்ணம் இருந்தார். பின்னர் நாளுக்கு ஒரு பாடல் என மிகவும் கடினமான 100 பாடல்களை முருகன் மீது இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவர் இவரது திறமையினைக் கண்டு ஷடாக்ஷர மந்திர உபதேசம் செய்தார். பின்னர் 1894ல் பிரப்பன் வலசையில் முருகனின் நேரடி தரிசனத்திற்காக சுடுகாடு ஒன்றில் பள்ளத்தில் 6 நாட்கள் தவமிருந்தார். வந்திருந்தவர் முருகன் எனக் கூட அறியாமல் முதியவர் அழைத்தும் வெளியில் வராமல் இருந்தார். பின்னர் பழனி முருகனாக ஞானிகளுடன் காட்சி தந்தார். அதிலிருந்து 35வது நாள் முருகனால் அவருக்கு உபதேசம் நடந்து சென்னைக்குப் புறப்பட்டார். யாரையும் சென்னையில் அறியாது பாம்பன் சுவாமிகள் முருகன் ஆக்ஞைப்படி ரயிலடியில் வந்து இறங்க பங்காரு என்கிற பெண்மணிக்கு ரயிலில் வரும் ஞானியை வரவேற்கச் சொல்லி முருகன் அவள் கனவில் கூறியதாக அறிந்தார். இப்படி பல அதிசயங்கள் அவரது வாழ்க்கையில் நடந்தது. 30 ஸ்லோகங்கள் கொண்ட ஷண்முக கவசத்தை அவர் இயற்றினார். 30.5.1929 முருகனோடு ஐக்கியமானார். பாம்பன் சுவாமிகள் சமாதி சென்னை திருவான்மியூரில் உள்ளது. |
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் 8 மணி வரை (விசேஷ நாட்களில் சித்ரா பவுர்ணமி, கார்த்திகை பவுர்ணமியில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.) |
|
|