அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் |
கருங்கல்பட்டி, சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுந்தரகணபதி திருக்கோயில் |
திருவிக அம்மாப்பேட்டை, சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் |
லாங்கிலி ரோடு,செவ்வாய்பேட்டை,சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு விநாயகர் திருக்கோயில் |
பழைய சூரமங்கலம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு விநாயகர், பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
பழைய சூரமங்கலம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு விநாயகர், மாரியம்மன் திருக்கோயில் |
சூரமங்கலம், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு மேளக்கார செல்வ விநாயகர் திருக்கோயில் |
ஆத்தூர் நகர், சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு வெள்ளைப்பிள்ளையார் திருக்கோயில் |
ஆத்தூர் நகர், சேலம் மாவட்டம் |
+91 4282 251025 | |
|
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்,
கோவிந்தம் பாளையம்,
சேலம். |
சேலம் மாவட்டத்தில், விழுப்புரத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்துக்கு அருகில் அமைந்துள்ளது ஆத்தூர். இந்த ஊரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ளது கோவிந்தம்பாளையம். தலைவாசலில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு. இந்த கிராமத்தில்தான் சுமார் 500 வருடப் பழமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது. |
சுமார் 500 வருடங்கள் பழமை மிக்க கோயில் இது. சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் நெல் விதைப்பதில் துவங்கி, திருமணம், குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது என எந்த ஒரு நல்ல நிகழ்வுக்கும் இங்கு வந்து ஸ்ரீகற்பக விநாயகரை வணங்கிவிட்டுத்தான் காரியத்தில் இறங்குவார்களாம். விதை நெல்லை எடுத்து வந்து விநாயகரின் துதிக்கையில் வைத்துவிட்டு, மனதாரப் பிரார்த்தனை செய்துவிட்டு, பின்பு அதை எடுத்துச் சென்று விதைத்தால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். அதேபோல், கல்யாணம் தடைப்பட்டு நீண்ட காலமாகத் தவிப்பவர்கள், இங்கு வந்து ஜாதகத்தை வைத்து, ஸ்ரீகற்பக விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி உள்ளம் உருக வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் நடந்தேறும்; நல்ல வரன் அமைந்து, வாழ்க்கை இனிக்கும் என்பது ஐதீகம். சுமார் 80 வருடங்களுக்கு முன்பு வரை, விநாயக சதுர்த்தி அன்று விசேஷ பூஜைகள். கணபதியப்பனுக்கு அலங்காரங்கள் என அமர்க்களப்பட்டது இந்தக் கோயில். மகா கணபதி மந்திரங்கள் ஜபித்து, ஹோம குண்டங்கள் வளர்த்து, அதிக எண்ணிக்கையில் மோதகங்கள் படைத்து வெகுவிமரிசையாக நடைபெற்று விநாயக சதுர்த்தி விழா. |
|
|