அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
காத்தேரி, சங்ககிரி வட்டம்
சேலம் மாவட்டம் |
சங்ககிரிக்கு மேற்கே 18 கி.மீ. |
காவிரியாற்றின் கிழக்குப் பகுதியில் இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.. |
அருள்மிகு புஜனேஸ்வரர் திருக்கோயில் |
மோரூர்
சேலம் மாவட்டம் |
சங்ககிரிக்கு தெற்கே 6 கி.மீ. |
இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
புதுப்பேட்டை-632 102
சேலம் மாவட்டம் |
|
|
அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் |
சிங்கிபுரம்
சேலம் மாவட்டம் |
வாழப்பாடிக்கு தெற்கே 3 கி.மீ. |
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்,
சங்ககிரி,சேலம் மாவட்டம். |
சேலம்-ஈரோடு மார்க்கத்தில், சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது சங்ககிரி. சங்ககிரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது சோமேஸ்வரர் திருக்கோயில். |
சந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இறைவனை ஸ்தாபித்து வழிபட்ட தலம் இது. இங்கே இருக்கும் மலையின் தோற்றம் சங்கு மாதிரி இருப்பதால் தலத்தின் பெயர், சங்ககிரி. சோமனாகிய சந்திரனுக்கு அருளியதால், எம்பிரான் திருநாமம் சோமேஸ்வரர். |
அருள்மிகு வீரபத்ரர் ஜங்கமேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு வீரபத்ரர் ஜங்கமேஸ்வரர் திருக்கோயில்,
சேலம் மாவட்டம். |
சேலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் குகை என்கிற இடத்தில் வீரபத்ரர் ஜங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. |
பெரும்பாலும் கிழக்கு அல்லது மேற்கு திசையையே பார்த்துகிட்டு இருக்கிற சிவபெருமான், இந்தக் கோயிலில் மட்டும் வடக்கு திசையைப் பார்த்துக்கிட்டு இருப்பது இக்கோயிலின் முதல் சிறப்பு. வடக்கு, குபேரனுக்கு உரிய திசை. குபேரனுக்கு எல்லா செல்வத்தையும் தந்தவர் சிவபெருமான். அதனால் வடதிசை பார்த்து இருக்கிற இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், வறுமையெல்லாம் விலகி வளமை சேரும் என்பது நம்பிக்கை. தட்சிணாமூர்த்தி, முருகன், துர்க்கை, நவகிரகம் சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன. சிவபக்த ஆஞ்சநேயர் என்ற பெயரில் அனுமனும் இருக்கிறார். |
அருள்மிகு அருணாசல சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
அருள்மிகு அருணாசல சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
சேலம்
|
பெங்களூர்-கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் தாண்டியவுடன் ஐந்தாறு கி.மீ தூரத்தில் வலது பக்கம் அமைந்துள்ளது இந்த மலை. |
இம்மலையில் ஒரே இடத்தில் இருக்கும் 1008 சிவலிங்கங்கள் என்பது வேறு எங்குமே இல்லை. அனைத்து 1008 சிவாலயங்கள் ஒரு லிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கும் அற்புதமான காட்சி. 1008 சிவலிங்கங்களில் 1007 லிங்கங்களை விரும்பியவர்கள் தாங்களே தொட்டு வழிபடலாம். 1008 வது லிங்கமாக அருணாசல சுந்தரேஸ்வரர் பெரிய கோயிலில் குடி கொண்டுள்ளார், பிரம்மாண்டமான வடிவம். |
|
|