அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயில் |
ஜாகீர் அம்மாபாளையம், சேலம் மாவட்டம் |
+91 0427 2345251 | |
|
அருள்மிகு வெண்ணங்குடி முனியப்பன் திருக்கோயில் |
ஜாகீர் அம்மாபாளையம், சேலம் |
+91 427-2341 271 | |
|
அருள்மிகு அம்பலவாணர் சுவாமி திருக்கோயில் |
குகை, சேலம் |
+91 27-2253 977 | |
|
அருள்மிகு தர்மராஜர் திருக்கோயில் |
சேலம். |
+91 427-2261 534 | |
|
அருள்மிகு ஆலங்கொட்டை முனியப்பன் திருக்கோயில் |
அருள்மிகு ஆலங்கொட்டை முனியப்பன் திருக்கோயில்,
சேலம் மாவட்டம். |
சேலம் அரசு ஐ.டி.ஐக்கு எதிரில் இக்கோயில் உள்ளது. சேலம் புது பேருந்து நிலையத்தில் இருந்து பஸ், ஆட்டோ வசதிகள் உண்டு. |
1882ம் ஆண்டு வாக்கில் சேலம் மத்திய சிறைச்சாலையை ஆலங்கொட்டைச் சிறை என்றுதான் சொல்லுவார்கள். அப்போதிலிருந்தே இந்தக் கோயிலும் ஆலங்கொட்டை முனியப்பன் கோயில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. |
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் |
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்
ஸ்ரீவரப்பிரசாத பக்த ஆஞ்சநேயர் ஆஸ்ரமம்
சேலம் |
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில், சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், தியாகராஜா கல்லூரியின் பின்புறத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீவரப்பிரசாத பக்த ஆஞ்சநேயர் ஆஸ்ரமம். |
தங்கத் தகடு வேயப்பட்ட விமானத்தின் கீழ் சந்நிதி கொண்ட ஆஞ்சநேயர் அதுமட்டுமின்றி மாருதிக்கு, தங்க முலாம் பூசப்பட்ட புது உத்ஸவ விக்கிரகம் அமைந்துள்ளது சிறப்பு. |
அருள்மிகு அனுமன் திருக்கோயில் |
அருள்மிகு அனுமன் திருக்கோயில்
ஆத்தூர்
சேலம் |
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில், கம்பு பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது. |
இங்கே அனுமன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவர் தெற்குபக்கம் அமைந்துள்ள இலங்கைக்குச் சென்று சீதையைத் கண்டுபிடித்து, வெற்றியுடன் சந்தோஷத்துடன் கம்பீரமாக வாலை உயர்த்திக் கொண்டு வடதிசை நோக்கி புறப்படத் தயாரான காட்சியை வடிவமைத்துள்ளனர். வடக்கு திசை என்பது குபேரனின் திசை. இங்கே அந்த திசையைப் பார்த்து நிற்கிறார் அனுமன். அதுமட்டுமின்றி ராமனுடைய நண்பரான விபீஷ்ணருடைய சகோதரன் குபேரன். அதனால் ராமதாசனான அனுமன் பக்தர்களுக்கு அனுமனுடைய அருள் மட்டுமின்றி குபேரனின் அருளும் கிட்டும். |
வீரபயங்கரம் அய்யனார் திருக்கோயில் |
அருள்மிகு வீரபயங்கரம் அய்யனார் திருக்கோயில்,
சேலம். |
சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள் வி. கூட்டுச்சாலையிலிருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் குராலையில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவி<லுள்ளது வீரபயங்கரம். |
நாற்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காடுகள் சூழ்ந்த பகுதியில், இயற்கையெழிலுடன் அமைந்துள்ளது வீரபயங்கரம் அய்யனார் கோவில். நுழைவாயிலின் இருபுறமும் 40 அடி உயரமுள்ள வாமுனி, செம்முனி சிலைகள் கையில் நீண்ட கத்தியோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. அய்யனாரை பெரியப்பா, என்றும், கருப்பையனை சின்னய்யா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். முனியப்பர் சிலையருகே ஒரே கல்லினால் செய்யப்பட்ட கற்குதிரைமீது அமர்ந்திருக்கும் சின்னய்யாவின் தோற்றம் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தக் கூடியதாகும். |
அருள்மிகு அய்யனார் திருக்கோயில் |
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,
குமாரமங்கலம்,
உளுந்தூர்பேட்டை. |
குமாரமங்கலம் அய்யனார். உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டைக்கு மேற்கே ஐந்தாவது கிலோமீட்டரில், சாலையின் வலப்புறம் இயற்கையான சூழலில் அருள் புரிந்து வருகிறார் அய்யனார். |
முனீஸ்வரர், வீரனார், தட்சிணாமூர்த்தி, பிடாரியம்மன், தண்டோரா போடும் வாயிற்காவலன் என பரிவார தெய்வங்கள் சூழ, கம்பீரமாக அருள்புரிந்து வருகிறார் குமாரமங்கலம் அய்யனார். எங்கள் ஊரில் யாரும் காவல் நிலையத்திற்குப் போகமாட்டோம். அய்யனாரே காவல் தெய்வமாகவும் எங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பவராகவும் விளக்குகிறார் என்கின்றனர் இப்பகுதி மக்கள். |
அருள்மிகு சுடலை காளியம்மன் திருக்கோயில் |
அருள்மிகு சுடலை காளியம்மன் திருக்கோயில்,
அரசி செட்டிப்பட்டி,
சங்ககிரி வட்டம்,
சேலம். |
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அரசி செட்டிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ளது சுடலை காளியம்மன் திருக்கோயில். |
தமிழகத்தில் சாலை வழிப் பயணங்களின் போது கிராமங்களில் ஆங்காங்கே பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். தெய்வங்களின் சிலைகள் மக்களின் இறையுணர்வை காட்டுகின்றன. குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இத்தகையை சிலைகள் அதிகம். கருங்கற்களாலும், செப்புத் திருமேனிகளானவும் பல நூற்றாண்டுகளாக கோயில்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களும், திறந்த வெளியில் கான்கீரிட்டால் கட்டப்பட்ட இந்தக் காலத்து தெய்வங்கள் வடிவத்தில் மாறுபட்டாலும், அதை வணங்கும் மக்கள் மனதில் வேறுபாடு இல்லை. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அரசி செட்டிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை சுடலை காளியம்மனின் உயரம் 32 அடி சுற்றியுள்ள கிராமங்களுக்குக் காவலாக நிற்கும். அம்மனுக்குக் காவலாக மாயாண்டி சங்கிலிக் கருப்பன். சடாமுனி ஆகியோர் நிற்கின்றனர். அரிசி செட்டிப்பட்டி என்ற ஊரின் பெயர். அம்மனின் புகழால் அரசி செட்டிப்பட்டி என மருவி விட்டது. அம்மனின் அகோரமான உருவத்தை பக்தியோடு வணங்கும்போது பயம் பறந்தோடிவிடும். இங்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பணம் பூ, பழம் என மடிப்பிச்சை எடுத்து கோயிலுக்கு வழங்குகிறார்கள். அம்மனை வணங்குவோருக்கு குழந்தைப்பேறு கிடைக்கின்றது. நோயாளிகள் நோயிலிருந்து நலம் பெறுகின்றனர். மனநிலை சரியில்லாதவர்கள் குணமடைவதற்கும் அம்மன் அருள்புரிகிறார். |
|
|