அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
அழகியமணவாளன்
அரியலூர் மாவட்டம் |
கீழைப்பழுவூர்க்கு தென்கிழக்கே 23 கி.மீ. |
நறையனூர் நதியனூர் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் விசாலாட்சி. ரதி, மன்மதன், கார்கோடகன் முதலியோர் இத்தலத்தில் தவமிருந்து கங்கையை வரவைத்து மூழ்கி இறைவனை வழிபட்டு பேறு பெற்றதனால் இத்தல இறைவனுக்கு காசிவிஸ்வநாதர் என்று பெயர். ஒரு கால பூஜை. ஆடி 18 ம் தேதி உற்சவம் நடைபெறுகிறது. |