அருள்மிகு பூமாலையப்பர், பச்சையப்பர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் |
நெய்வாசல், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு மைந்தனைக் காத்த அய்யனார் திருக்கோயில் |
அருள்மிகு மைந்தனைக் காத்த அய்யனார் திருக்கோயில்,
ராமநத்தம்-திட்டக்குடி நெடுஞ்சாலை,
இடைச்செருவாய்,
கடலூர் மாவட்டம். |
கடலூர் மாவட்டம், ராமநத்தம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல பஸ், ஆட்டோ, கார் என அனைத்து வசதிகளும் உண்டு. |
இடைச்செருவாய் அய்யனார், தன் பரிவார தெய்வங்களான குள்ளக் கருப்பு, முனியப்பர், செல்லியம்மன், மாரியம்மன் புடைசூழ கோயில் கொண்டிருக்கிறார். தேர்த் திருவிழா, தீமிதித் திருவிழா என ஊர் மக்கள் சிறப்பாக விழா எடுத்து அய்யனாரைச் சிறப்பிக்கின்றனர். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல் என பல மாவட்ட மக்களும் இவரை குலதெய்வமாக வழிபடுகின்றனர். |
|
|