அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில் |
அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோயில்,
கடலூர்,
குடுமியான் குப்பம். |
குடுமியான் குப்பம், பண்ருட்டியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது திரவுபதி அம்மன் திருக்கோயில். |
மன்னன் துருபதன் நடத்திய யாகத் தீயிலிருந்து தோன்றியவள் திரவுபதி அம்மன். நாடெங்கிலும் இந்த திரவுபதி அம்மனுக்குக் கோயில்கள் பல உள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள குடுமியான்குப்பத்திலும் திரவுபதி அம்மன் மிகச் சிறிய உருவில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். கோயிலின் வெளியே முத்தாலம்மன் சுவாமி அருள் பாலிக்கிறாள். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாத தீமதி திருவிழா, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறும் இந்நாட்களில் மாலையில் மகாபாரத உபன்யாசம் நடக்கிறது. விழா முடியும் நாளில் தெருக்கூத்து நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டி விரதமிருந்து, பொங்கல் வைத்து, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தீமதி திருவிழாவும் நடக்கிறது. அன்று வழங்கப்படும் உருமசோறு உண்டால் குழந்தை பாக்கியம் பெறலாம் என்கிறார்கள். |
அருள்மிகு மங்களநாயகி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு மங்களநாயகி தேவஸ்தானம் திருக்கோயில்,
மங்கலம்பேட்டை ,
வழி உளூந்தூர் பேட்டை,
606104 கடலூர் மாவட்டம். |
+919486494314, 9994987965. | உளுந்தூர் பேட்டை விருத்தாச்சலம் பாதையில் 7வது கிமீல் உள்ள ஊர். பஞ்சாயத்து அலுவலகம் அருகே கோயில் அருகே பவழங்குடியில் அங்காள பரமேஸ்வரி கோயிலும் உள்ளது. |
இமய மலையிலிருந்து கண்ணகிக்குக் கோயில் கட்டக் கொணர்ந்த இரண்டு கற்களில் ஒன்றினை வழியில் உதவிகளைச் செய்த பரூர்பாளைய சிற்றரசனுக்கு கொடுத்தான். செவ்வகக் கல்லான இதில் உக்கிரமாக விளங்கும் வனதுர்க்கையாக அம்பாள் மங்களநாயகி உள்ளாள். பகைவர்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் தீய எண்ணங்களைப் போக்குபவளாக வழிபடப்படுகிறாள்.
|
பூஜை நேரம்: - |
அருள்மிகு துர்க்கை அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு துர்க்கை அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
உளூந்தாண்டார் கோவில் வழி உளூந்தூர்பேட்டை 606107, கடலூர் மாவட்டம் |
+919487481452, 9487475432. | சென்னை திருச்சி என்.எச்.45ல் உள்ள உளூந்தூர் பேட்டையிலிருந்து 2கிமீ தூரம் உளூந்தூர்பேட்டைக்கு 1கிமீ வடமேற்கே திருகோவலூருக்கு 21கிமீ கிழக்கே திருநறுங்கொண்டையில் சமண 8-9 கிபியில் அமைத்த கோயில்களில் உள்ளன. |
இலுப்பை வனமான இந்த ஊரில் 18 கர துர்க்கையாக காட்சி தருகிறாள் (அஷ்டாதச) அகத்தியர் வழிபட்ட தலம். சேரன் செங்குட்டுவனின் சிற்றரசர்கள் ஸ்தாபித்த அம்பாள். ஞாயிறு ராகு காலப்பூஜை விசேஷம். தோல்வி கண்டோருக்கு நம்பிக்கையூட்டும் அம்பாள். உளூந்தாண்டார் கோயிலில் மாஷபுரீஸ்வரர் கோயில் (சமஸ்கிருதத்தில் உளூந்துப் பயிருக்கு மாஷம் என்று பெயர்) உள்ளது. இவ்வூரின் பெயர் சுவாமியின் பெயரிலிருந்து வந்துள்ளது. சிலர் மேஷபுரீஸ்வரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். |
பூஜை நேரம்: - |
அருள்மிகு காயத்திரி தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு காயத்தரி தேவஸ்தானம் திருக்கோயில்,
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் 608001. |
+91 4144-223450, 9444849501, 9443326272. | சிதம்பரம் சென்னையிலிருந்து 234 கிமீ தூரம். பாண்டி கடலூர் பாதையில் செல்லலாம். சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தின் வடமேற்கே உள்ளது. |
5 முகங்களுடனும், 10 கரங்களுடனும் திகழும் தனிக்கோயில். மேற்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி வடிவமாக உள்ளாள். நவராத்திரியில் லக்ஷார்ச்சனையும், விஜய் தசமி அன்று பரிவேட்டை உற்சவமும் நடைபெறுகிறது. இத்தலத்ததை ஓர் மகாராஜா தன் சாபம் நீங்க தல யாத்திரை மேற்கொண்டு அடைந்தாகவும், வழியில் ஓர் அந்தணர் தான் பெற்ற அத்தனை நன்மைகளையும் வழங்கியதாகவும் வரலாறு. காயத்ரி தேவி மேற்கு திசை நோக்கியுள்ளாள். |
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை. |
அருள்மிகு பூங்காவனத்தம்மன் தேவஸ்தானம் திருக்கோயில் |
அருள்மிகு பூங்காவனத்தம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்,
முத்துகிருஷ்ணபுரம்,
புவனகிரி 608602,
சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம். |
+91 4144-240500. | புவனகிரி சிதம்பரத்திலிருந்து 8கிமீ தொலைவில் உள்ளது. |
ஸ்ரீராகவேந்திரரின் அவதாரத் தலமாக (கிபி 1598) விளங்குவது புவனகிரி. ராகவேந்தர் 1627 ல் சந்நியாசம் பெற்றவர் மேலும் இந்த ஊர் ராமலிங்க அடிகளாரின் அவதாரக் தலமான மருதூருக்கு அருகாமையில் அவதாரத் தலமான மருதூருக்கு அருகாமையில் உள்ள ஊர். புவனம் என்பது உலகத்தைக் குறிக்கும். கிரி என்பது மலையினைக் குறிக்கிறது. புனகிரி என்பது நகராத உலகத்தைக் குறிக்கிறது. சாமுணிடேஸ்வரி கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் (ஒரு வழிப்பாதை அருகே), எல்லையம்மன், த்ரௌபதியம்மன், அங்காளம்மன், டூரிஸ்ட் பங்களா அருகே சிவன் கோயில், ஆதி வராகன் வரதராஜப் பெருமாள் கோயில் இவை இந்த ஊருக்கு மேற்கே உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் உள்ளது. வெள்ளாறு பாலம் அருகே ஸ்ரீராகவேந்திரர் வழிபட்ட ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. கீழ புவனகிரியில் ஸ்ரீவிஷ்ணு காளியம்மன் கோயிலும், ஸ்ரீநிவாஸ் பெருமாள் கோயிலும் உள்ளன. கைலாசநாதர் கோயில், பூங்காவனத்தம்மன் கோயில் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கோயில் (காவல் நிலையம் அருகே) மேல் புவனகிரியில் உள்ளன. வெள்ளி அம்பல சுவாமி அதிஷ்டானம் சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோயிலைக் கொண்டு விளங்கிறது. |
பூஜை நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை |
|
|