அருள்மிகு திருப்பாத்தீஸ்வரர் திருக்கோயில் |
கல்லாங்குடி, காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கோட்டையூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் யோகாம்பாள். பாலாம்பாள். இக்கோயிலில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுக்கள் முதல் மதுரை நாயக்கர், முத்திரையர்கள் பற்றிய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. |
அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில் |
சாக்கோட்டை, காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கண்டனூரிலிருந்து வடகிழக்கே 3 கி.மீ. |
இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் உமையாம்பிகை. |
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் |
உய்யக்கொண்டான் சிறுவயல்
காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
காரைக்குடிக்கு வடமேற்கே 7 கி.மீ. |
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சௌந்தரநாயகி. |
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
மித்திராவயல், காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கண்டனூரிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 169 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு வந்தருளீஸ்வரர் திருக்கோயில் |
அமராவதிபுதூர், காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
காரைக்குடிக்கு தெற்கே 7 கி.மீ. |
இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் வாழவந்தநாயகி. |
அருள்மிகு ஐந்நூற்றீசுவரர் திருக்கோயில் |
மாத்தூர், காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கண்டனூருக்கு தெற்கே 2 கி.மீ. |
இக்கோயில் 300 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பெரிய நாயகி. தலமரம் மகிழமரம். கொங்கணச்சித்தரின் இரசவாதசித்தால் ஐநூறு மாற்றுவரை பொன் கிடைத்ததால் இவ்வூர் மாற்றூர் என வழங்கப்பட்டு மாத்தூர் என மருவி வந்ததாகச் சொல்வர். கோயிலின் அபூர்வமான சிற்பக்கலையோடு அமைந்த திருவுருவங்களும், நான்கு சிம்மங்கள் தாங்கும் நந்திகேசுவரரையும் காணக் கண்கோடி வேண்டும். திரிபுவனசக்ரவர்த்தி இக்கோயிலை கட்டுவித்ததாக கல்வெட்டில் காணப்படுகிறது. மேலும் கேரள சிங்க வளநாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டியபுரம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. |
அருள்மிகு கண்டீஸ்வரர் திருக்கோயில் |
செம்பனூர், காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
|
காரைக்குடியிலிருந்து தென்மேற்கே 24 கி.மீ. இக்கோயில் மணிமுத்தாற்றின் கரையில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் நித்யகல்யாணி. |
அருள்மிகு மும்முடிநாதர் திருக்கோயில் |
அரண்மனை சிறுவயல், காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கல்லல்லிருந்து தெற்கே 6 கி.மீ. |
சுரங்கபாணியாற்றின் கரையில் இக்கோயில் 44 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கருணாகடாச்சியம்மன். சேரர், சோழர், பாண்டியர் மூவரும் வழிபட்டதால் மூலவர்க்கு மும்முடியீசர் என்று பெயர். சின்ன மருதுவின் தலைநகராய் விளங்கிய பெருமைபெற்ற ஊர். |
அருள்மிகு சன்னவனநாதர் திருக்கோயில் |
விசயாலயன்கோட்டை, காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
காரைக்குடிக்கு தெற்கே 12 கி.மீ. |
மணிமுத்தாற்றின் வடகரையில் இக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு மார்க்கண்டேஸ்வரர் திருக்கோயில் |
கீழ்ப்பூங்குடி, காரைக்குடி வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
கல்லல்லிருந்து தென்கிழக்கே 6 கி.மீ. |
மணிமுத்தாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. சண்டாசுரனோடு போரிட்டு வெற்றிபெற்ற தேவியப் பூமாரிப் பெய்து தேவர்கள் வாழ்த்திய இடம் இத்தலமாகும். |
|
|