அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் |
ஒழுகுமங்கலம், திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடமேற்கே 13 கி.மீ. |
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
இளையாத்தங்குடி, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. |
இளைசை, சிவபுரம், சித்தபுரம், புராதனவனம், நித்யகல்யாணிபுரம், இக்கோயில் 62 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். அம்மன் நித்யகல்யாணி. தீர்த்தம் சிவ, சித்த என இரு தீர்த்தங்கள். உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், முருகப்பெருமான், பைரவர், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர் முதலிய சன்னதிகள் உள்ளன. அசுரர்களின் கொடுமை தாங்காமல் தேவர்கள் இத்தல இறைவனிடம் வந்து இன்னல் களைந்திட இறைஞ்சனராம் இன்னலுற்று வந்தவர்களின் இளைப்பும், களைப்பும் போக்கி அசுரர்களை அழிக்க வைவைரையும், முருகனையும் அனுப்புவதாக ஆறுதல் கூறினாராம் கைலாசநாதர். எனவே இளைப்பாற இடம் தரும் இவ்வூர் இளையாத்தங்குடி எனப் பெயர் பெற்றது. இவ்வூர் வடக்கு இளையாத்தங்குடி தெற்கு இளையாத்தங்குடி என்னும் இரு பிரிவாக உள்ளது. இவ்வூரில் காஞ்சி காமகோடி மடத்தைச் சேர்ந்த அதிஷ்டானம் ஒன்றும் உள்ளது. |
அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில் |
செண்பகம்பட்டி, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடக்கே 6 கி.மீ. |
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் |
சுண்டக்காடு, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூருக்கு வடக்கே 12 கி.மீ. |
இக்கோயில் 32 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது |
அருள்மிகு சர்வலோகநாதர் திருக்கோயில் |
தெற்கூர், திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடமேற்கே 11 கி.மீ |
இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
ஆத்தங்குடி, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
குன்றக்குடிக்கு வடமேற்கே 4 கி.மீ |
இக்கோயில் 117 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மீனாட்சியம்மை. |
அருள்மிகு திருகண்டீஸ்வரர் திருக்கோயில் |
வேலங்குடி, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடக்கே 15 கி.மீ. |
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மை. இக்கோயிலில் உள்ள ஞானமுனி என்னும் சொல்கேட்ட விநாயகர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகஉகந்த தெய்வமாக விளங்குகிறார். நகரத்தார் வரலாறு பற்றிய பழமையான கல்வெட்டு இவ்வூரில் உள்ளது. |
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் |
சிங்கம்புணரி, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடமேற்கே 20 கி.மீ. |
இக்கோயில் சிவபுரிப்பட்டியில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அறம்வளர்த்தநாயகி. உள்பிரகாரத்தில் சித்திவிநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகம் முதலிய சன்னதிகள் உள்ளது. நந்தி ஓர் ஆள் உயரம் கொண்டதாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பெற்று, அரிவியூர் நகரத்தாரால் விரிவாக்கப்பட்டு திருப்பணி செய்ய்ப்பெற்ற கோயிலாகும். தினமும் நான்கு காலப் பூஜை நடைபெறுகிறது. மேலும் இவ்வூரில் உள்ள ஐயனார்கோயில் புகழ் பெற்ற கோயில். வைகாசியில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. |
அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் |
சதுர்வேதமங்கலம், திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
சிங்கம்புணரிலிருந்து கிழக்கே 5 கி.மீ. |
இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் ஆத்மநாயகி. சாம்பிராணி எடுக்க உதவும் மட்டிப்பால் தரும் மரங்கள் நிறைந்திருப்பதால் மட்டியூர் எனப்பெயர் பெற்ற தலம். நான்கு கால பூஜை. மாசிமகத்தன்று உற்சவம் நடைபெறுகிறது. |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
நெடுமரம், திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
திருப்புத்தூரிலிருந்து வடகிழக்கே 4 கி.மீ. |
இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|